TA/Prabhupada 0152 - ஒரு பாவி கிருஷ்ணர் உணர்வு பெற முடியாது

Revision as of 05:38, 21 September 2016 by Modestas (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0152 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on BG 1.31 -- London, July 24, 1973

Toute personne, tout le monde veut être heureux dans sa vie de famille "grha-Ksetra-sutāpta-vittaih" (SB 5.5.8), et posséder quelques terres... அந்நாட்களில் அங்கே தொழிற்சாலைகள் இல்லை. அதனால் தொழிற்சாலை குறிப்பிடப்படவில்லை. நிலம். உங்களுக்கு நிலம் கிடைத்தால், பிறகு நீங்கள் உங்கள் உணவை உற்பத்தி செய்யலாம். ஆனால் உண்மையிலேயே அதுதான் நம் வாழ்க்கை. இங்கு இந்த கிராமத்தில் அதிகமான நிலங்கள் காலியாக இருக்க காண்கிறோம், ஆனால் அவர்கள் தங்களுடைய உணவை உற்பத்தி செய்வதில்லை. அவர்கள் பசுக்களை தங்கள் உணவாக்குகிறார்கள், பரிதாபத்திற்குரிய பசுக்கள், அவற்றைக் கொன்று மேலும் உண்ணுகிறார்கள். இது நல்லதல்ல. க்ருஹ-ஷேத்ர. நீங்கள் க்ருஹஸ்தராகுங்கள், ஆனால் உங்கள் உணவை நிலத்திலிருந்து உற்பத்தி செய்யுங்கள், க்ருஹ-ஷேத்ர. மேலும் நீங்கள் உணவு உற்பத்தி செய்யும் போது, பிறகு குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள், க்ருஹ-ஷேத்ர-ஸுதாப்த-வித்தை. இந்தியாவில் கிராமங்களில், ஏழை மக்கள், விவசாயிகளின் இடையே இந்த வழக்கம் இன்னமும் உள்ளது, அதாவது விவசாயினால் பசு வைத்துக் கொள்ள சக்தி இல்லை என்றால், அவர் திருமணம் செய்துக் கொள்ளமாட்டார்.ஜருவும் கருவும். ஜரு என்றால் மனைவி, மேலும் கரு என்றால் பசு. ஆகையால் ஒருவர் பசு வைத்துக் கொள்ளும் திறமையும் இருந்தால், அவர் மனைவி வைத்துக் கொள்ளலாம். ஜருவும் கருவும். ஏனென்றால் அவருக்கு மனைவி இருந்தால், உடனடியாக அங்கே குழந்தைகள் இருக்கும். ஆனால் உங்களால் பசுவின் பால் கொடுக்க முடியவில்லை என்றால், குழந்தைகள் பலவீனமாக இருப்பார்கள், ஆரோக்கியமாக இருக்கமாட்டார்கள். அவர்கள் போதுமான அளவிற்கு பால் குடிக்க வேண்டும். ஆகையினால் பசு தாயாக கருதப்படுகிறது. ஏனென்றால் ஒரு தாய் குழந்தையை பெற்றால், மற்றொரு தாய் பால் கொடுக்கிறாள்.

ஆகையால் யாவரும் தாய் பசுவிற்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும், ஏனென்றால் அவள் பால் கொடுக்கிறாள். ஆகையால் நம் சாஸ்திரப்படி அங்கே ஏழு தாய்மார்கள் இருக்கிறார்கள்.ஆதெள மாதா, உண்மையான தாய், என்னை தன் வயிற்றில் சுமந்து பெற்ற தாய்.ஆதெள மாதா, அவள் தாய். குரு-பத்தினி, ஆசிரியரின் மனைவி. அவளும் ஒரு தாய்.ஆதெள மாதா, குரு-பத்தினி, ப்ராமணி. ப்ராமணரின் மனைவி, அவளும் ஒரு தாய்.ஆதெள மாதா, குரு-பத்தினி, ப்ராமணி ராஜ-பத்னிகா, ராணியும் தாய். ஆக எத்தனை பேர்?ஆதெள மாதா, குரு-பத்தினி, ப்ராமணி ராஜ-பத்னிகா, பிறகு தேனு. தேனு என்றால் பசு. அவளும் ஒரு தாய். மேலும் தாத்ரி. தாத்ரி என்றால் தாதி.தேனு தாத்ரி ததா ப்ருத்வீ, பூமியும் கூட. பூமியும் ஒரு தாய். பொதுவாக மக்கள் தங்கள் தாய் நாட்டின் மேல் அக்கறை கொள்வார்கள். அவர் பிறந்த இடம். அது நன்று. ஆனால் அவர்கள் தாயான பசுவின் மீதும் அக்கறை கொள்ள வேண்டு. ஆனால் அவர்கள் தாயின் மேல் அக்கறை கொள்ளவில்லை. ஆகையினால் அவர்கள் பாவிகள். அவர்கள் கஷ்டப்பட வேண்டும். அவர்களுக்கு வேண்டும், அங்கே போர், கொடிய நோய், பஞ்சம் ஏற்படவேண்டும். மக்கள் பாவிகளானதும் உடனடியாக, இயற்கையின் தண்டனை.தன்னியக்கமாக ஏற்படும். உங்களால் தவிர்க்க முடியாது.

ஆகையினால் கிருஷ்ண பக்தி இயக்கம் என்றால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும். மக்களுக்கு பாவிகளாகாமல் இருக்க கற்பித்தல். ஏனென்றால் ஒரு பாவி கிருஷ்ணர் உணர்வு பெற முடியாது. கிருஷ்ணர் உணர்வு பெறுவதென்றால் அவர் தன் பாவ காரியங்களை கைவிட வேண்டும்.