TA/Prabhupada 0132 - வகுப்பற்ற சமூகம் பயனற்ற சமூகமாகும்

Revision as of 13:23, 18 February 2016 by Modestas (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0132 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on BG 7.1 -- Hyderabad, April 27, 1974

ஆகையால் பகவத்-கீதையில் மனித பிரச்சனைக்கான அனைத்து தீர்வும் காணலாம், அனைத்து தீர்வும். சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகச: (BG 4.13). மனித சமூகத்தை நான்கு பிரிவுகளாக பிரிக்க இல்லையெனில், பிராமண, க்ஷத்ரிய, வைஸிய மேலும் சூத்திர... நீங்கள் கண்டிப்பாக பிரிக்க வேண்டும். "வகுப்பற்ற சமூகம்" என்று நீங்கள் சொல்லக் கூடாது. அது பயனற்ற சமூகம். வகுப்பற்ற சமூகம் என்றால் அது பயனற்ற சமூகம். அங்கே திறமையுடைய உயர்ந்த வகுப்பை சேர்ந்தவர்கள் இருக்க வேண்டும், சிறந்த கொள்கையுடைய வகுப்பைச் சேர்ந்தவர்கள் காண "இங்கே இருக்கிறது மனித நாகரீகம்". அதுதான் பிராமண. சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகச: (BG 4.13). மக்கள் உயர்ந்த பண்புடைய மனிதரை பார்க்கவில்லை என்றால், அவர்கள் எவ்வாறு பின்பற்றுவார்கள்? யத்யதாசரதி ஸ்ரேஷ்டஸ்:, லோகஸ்ததனுவர்த்ததே (BG 3.21). பிராமண, உடலில் இருக்கும் முளையுடன் ஓப்பிடப்படுகிறார். அங்கே மூளை இல்லையெனில், இந்த கைகளாலும், கால்களாலும் என்ன பிரயோஜனம்? ஒருவனுடைய மூளை பாதிப்படைந்தால், கிறுக்கன், அவனால் எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் தற்சமயம், பிராமண தகுதியுள்ளவர்கள் மனித சமூகம் முழுவதிலும் மிகவும் பற்றாகுறையாக இருப்பதால்..., இது பொருள்படாது... பிராமண வெறுமனே இந்தியாவிற்கோ அல்லது இந்துக்களுக்கோ என்று பொருள்படாது. மனித சமூகம் முழுவதற்கும். கிருஷ்ணர் கூறவில்லை அதாவது சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் (BG 4.13) இந்தியாவிற்கோ, அல்லது இந்துக்களுக்கோ அல்லது உயர் ரக மனிதர்களுக்கோ என்று. மனித சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும், அங்கே ஒரு குறைபாடற்ற அறிவாற்றல் சார்ந்த ஒருவர் இருக்க வேண்டும், அப்போதுதான் மக்கள் பின்தொடர்வார்கள். மூளை, சமூகத்தின் மூளை. பகவத்-கீதையில் அதுதான் கற்பிக்கப்படுகிறது. "மூளை இல்லாமல் எங்களால் செயல்பட முடியும்" என்று நீங்கள் கூற முடியாது. ஒருவேளை உங்கள் உடலில் இருந்து மூளை வெட்டி எடுக்கப்பட்டு, உங்கள் தலை வெட்டி எடுக்கப்பட்டால், பிறகு நீங்கள் முடிவை அடைந்துவிடுவீர்கள். மூளை இருக்கும் போதும், மூளை இல்லாத போதும் கைகளும் கால்களும் என்ன செய்யும்? ஆக தற்சமயத்தில் அனைத்து மனித சமூகத்திலும் மூளை பற்றாகுறை நிலவுகிறது. ஆகையினால், அது பெருங்குழப்பமான நிலையில் உள்ளது. ஆகையால் அங்கு தேவை உள்ளது, பகவத்-கீதையில் குறிப்பிட்டுள்ளது போல். இந்த மனித சமூகம், அனைத்து மனித நாகரீகம், இந்த முறையில் கண்டிப்பாக சீர்திருத்தப்பட வேண்டும். இயல்பாக, அங்கே அறிவாற்றல் சார்ந்த மனிதர்கள் இருக்கிறார்கள். அங்கே முதல் தரம் அறிவாற்றல் சார்ந்த தர மனிதர்கள், இரண்டாம் தரம் அறிவாற்றல், மூன்றாம் தரம், நான்காம் தரம், இவ்வாறாக இருக்கிறார்கள். ஆகையால் முதல் தரம் அறிவாற்றல் மிக்க மனிதன், அவர்கள் கண்டிப்பாக பிராமணர்கள் தான், பிராமண தகுதிகளை பெற்றிருப்பார்கள், மேலும் அவர்கள் கிருஷ்ண உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும். பிறகு அவர்கள் முழு சமூகத்திற்கும் சரியான வழிகாட்டுவார்கள், மேலும் அங்கு பிரச்சனை இருக்காது. இதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம். ஆகையால் இங்கு கிருஷ்ணர், எவ்வாறு கிருஷ்ண உணர்வுடையவர்களாவது என்பதை கூறுகிறார்.

அது பிராமணர்களுக்கு, அல்லது அறிவாற்றல் மிக்க மனித பிரிவுகளுக்கானது. அது கிருஷ்ணரால் வர்ணிக்கப்படுகிறது. அது என்ன? மேயாஸக்த-மனாஹ: "மனம் என்னிடம் இணைந்திருக்க வேண்டும், கிருஷ்ணர்." இதுதான் ஆரம்பம். எவ்வாறாயினும் நாம் செய்ய, நம் மனம்வேறு ஏதோவொன்றுடன் இணைந்துவிட்டது. மனம் நீக்கிவிடப்பட முடியாது. நமக்கு பல எதிர்பார்ப்புகள் நிறைந்துள்ளன. ஆகையால் மனதின் வேலை - இணைந்து வருவதாகும்.™ ஆகையினால், நான் சிலவற்றை ஏற்றுக்கொள்வேன், சிலவற்றை நிராகரித்துவிடுவேன். இதுதான் மனதின் வேலை. ஆகையால் நீங்கள் பூஜ்ஜியமாக முடியாது, நீங்கள் ஆசை இல்லாதவராக முடியாது. அது சாத்தியமல்ல. நம் செயல்முறை, எவ்வாறு என்றால், மற்றவர்கள் கூறுவது போல், "நீங்கள் ஆசை இல்லாதவராகுங்கள்." அது முட்டாள்தனமான ஆலோசனை. ஆசையில்லாமல் யாரால் இருக்க முடியும்? அது சாத்தியமல்ல. எனக்கு ஆசை இல்லை என்றால், பிறகு நான் ஒரு இறந்த மனிதன், இறந்த மனிதனுக்கு ஆசை இல்லை. ஆகையால் அது சாத்தியமல்ல. நாம் ஆசைகளை தூய்மைப் படுத்த வேண்டும். அது தேவைப்படுகிறது. ஆசையை தூய்மைப்படுத்தல். சர்வோபாதி-வினிர்முக்தம் தத் பரத்வேன நிர்மலம் (CC Madhya 19.170). இதை புனிதப்படுத்தல் என்று அழைக்கிறோம். நிர்மலம். தத் பரத்வேன. தத் பரத்வேன என்றால் பகவான் உணர்வு, கிருஷ்ணர் உணர்வு, பிறகு ஆசைகள் புனிதப்படுத்தப்படும்.

ஆகையால் நாம் ஆசையே இல்லாத கருத்துக்கு வரக்கூடாது, ஆனால் புனிதப்படுத்தப்பட்ட ஆசையின் கருத்தைக் கொள்ள வேண்டும். அதுதான் தேவைப்படுகிறது, ஆகையினால் இங்கு கூறப்படுகிறது, மேயாஸக்த-மனாஹ: "உங்கள் மனதில் ஆசையின்றி இருக்க உங்களால் முடியாது, ஆனால் உங்கள் மனத்தை என் மீது நிலை நிறுத்துங்கள்." அதுதான் தேவைப்படுகிறது. மேயாஸக்த-மனாஹ பார்த. இதுதான் யோக முறை. இதை பக்தி-யோக என்று அழைக்கிறோம், மேலும் இது முதல் தரம் யோக என்று அழைக்கப்படுகிறது. அது பகவத்-கீதையில் வர்ணிக்கப்படுகிறது, அதாவது யோகிநாம் அபி ஸர்வேஷாம் மத்கதே நாந்தராத்மநா (BG 6.47). இந்த யோகி, முதல் ரக யோகி, யோகிநாம் அபி ஸர்வேஷாம்.., "அங்கே பலவிதமான யோக முறைகள் உள்ளன, ஆனால் இந்த பக்தி யோகாவை ஏற்றுக் கொண்ட ஒருவர், அவர் எப்பொழுதும் என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்." எவ்வாறு என்றால் இந்த சிறுவர்களும் சிறுமிகளும் எப்பொழுதும் கிருஷ்ணரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க கற்பிக்கப்பட்டுள்ளனர், "ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே." ஆகையால் நீங்கள் பகவத்-கீதை படித்து மேலும் ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்தால், உடனடியாக நீங்கள் அனைத்து இறை விஞ்ஞானமும் கற்று, கிருஷ்ணருடன் எவ்வாறு இணைந்து கொள்வதென்று அறிந்துக் கொள்வீர்கள். இது மேயாஸக்த-மனாஹ: என்று அழைக்கப்படுகிறது. மேயாஸக்த-மனாஹ பார்த யோகம் யுண்ஜன், யோக பயிற்சி செய்ய, இதுதான் பக்தி-யோக. மத்-ஆஷ்ரய:. மத்-ஆஷ்ரய: என்றால் "என் மேற்பார்வையின் கீழ்," அல்லது "என் பாதுகாப்பின் கீழ்." ஆஷ்ரய.