TA/Prabhupada 0133 - என் விதிமுறைகளை பின்பற்றும் மாணவன் ஒருவன் எனக்கு வேண்டும்

Revision as of 13:45, 17 March 2016 by Modestas (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0133 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Arr...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Arrival Lecture -- San Francisco, July 15, 1975

ஆகையால் சில நேரங்களில் மக்கள் எனக்கு நிறைந்த நன்மதிப்பு கொடுக்கிறார்கள், அதாவது உலகமெங்கும் நான் அற்புதம் நிகழ்த்தி உள்ளேன் என்று. ஆனால் நான் அற்புதமான மனிதன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு ஒன்று தெரியும், அதாவது கிருஷ்ணர் கூறியதையே நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான். நான் எதையும் சேர்த்தோ, மாற்றமோ செய்யவில்லை. ஆகையினால் பகவத்-கீதையை உண்மையுருவில் அளிக்கிறேன். இந்த நன்மதிப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன், அதாவது வெற்றுரை சேர்த்தொ அல்லது மாற்றங்களோ செய்வதில்லை. அது வெற்றி அடைவதை நான் நடைமுறையில் பார்க்கிறேன். நான் இத்தனை அமெரிக்கர்களுக்கும், ஐரொப்பியர்களுக்கும் இலஞ்சம் கொடுக்கவில்லை. நான் ஒரு ஏழை இந்தியன். நான் வெறும் நாற்பது ருபாயுடன் அமெரிக்காவிற்கு வந்தேன், மேலும் இப்போது நான் நாற்பது கோடி வைத்திருக்கிறேன். ஆகையால் அங்கே மாயாஜாலம் இல்லை. நீ பின்புறம் செல்லலாம். நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய். ஆகையால் இதுதான் அந்த இரகசியம், அதாவது நீங்கள் நேர்மையான குருவாக வேண்டும் என்றால். நீங்கள் ஏமாற்ற வேண்டுமென்றால், அதாவது அது வேறொரு காரியம். அங்கு நிறைய ஏமாற்றுகாரர்கள் இருக்கிறார்கள். மக்களும் ஏமாற்றப்பட விரும்புகிறார்கள். நாங்கள் அவ்வாறு கூறியவுடனே "நீங்கள் என்னுடைய சீடனாக விரும்பினால், நீங்கள் நான்கு காரியங்களை கைவிட வேண்டும்: தவறான உடலுறவு கூடாது, மது அருந்தல், காபி, டீ குடிப்பதும், மேலும் சிகரட் பிடிக்கக்கூடாது, மாமிசம் உண்ண கூடாது, மேலும் சூதாட்டம் கூடாது," மேலும் அவர்கள் என்னிடம் விமர்சனம் செய்கிறார்கள் "ஸ்வாமிஜி மிகவும் பழமைவாதி." இன்னும் நான் அதைச் சொன்னால் "நீங்கள் அனைத்து வீண் உரையும் செய்யலாம், உங்களுக்கு பிடித்த எதுவாயினும். நீங்கள் வெறுமனே இந்த மந்திராவை எடுத்துக் கொண்டு எனக்கு $125 கொடுங்கள்," என்றால் அவர்களுக்கு பிடிக்கும். ஏனென்றால் அமெரிக்காவில், $125 ஒன்றுமில்லை. எந்த மனிதனும் உடனே கொடுத்துவிடுவான். ஆகையால் அவ்வாறு ஏமாற்றி இருந்தால், நான் லட்சக் கணக்கில் பணம் சேர்த்திருப்பேன். ஆனால் எனக்கு அது தேவையில்லை. என் விதிமுறைகளை பின்பற்றும் ஒரு மாணவன் எனக்கு வேண்டும். எனக்கு லட்ச கணக்கில் பணம் தேவையில்லை. எகஸ் சன்தரஸ் தமோஹந்தி நச தர-ஸஹ்ஸ்ரஷ்:. வானத்தில் ஒரு நிலா இருந்தால், அது வெளிச்சத்திற்குப் போதுமானது. அங்கு பத்து லட்சம் நட்சத்திரங்கள் தேவையில்லை. ஆகையால் என் நிலை என்னவென்றால் நான் குறைந்தது ஒரு சீடனாவது ஒரு தூய்மையான பக்தராவதை பார்க்க விரும்புகிறேன். நிச்சயமாக, என்னிடம் பல நேர்மையான, தூய்மையான பக்தர்கள் இருக்கிறார்கள். அது என்னுடைய அதிர்ஷ்டம். ஆனால் என்னால் ஒன்று மட்டும் கண்டுபிடிக்க முடிந்தால் நான் திருப்தி அடைந்திருப்பேன். பத்து லட்சம் நட்சத்திரங்கள் என்று சொல்லப்படுபவை தேவையில்லை. ஆகையினால் அந்த செயல்முறை அங்கிருந்தது, மேலும் அது மிகவும் எளிமையானது, மேலும் நமக்கு பகவத்-கிதையில் உள்ள விதிமுறை அனைத்தும் புரிந்தாலும், நாம் மேலும் ஸ்ரீமத்-பாகவதத்தை படித்தாலும், அல்லது நீங்கள் படிக்கவில்லை ஆயினும், சைதன்ய மஹாபிரபு ஒரு சுலபமான முறையை கொடுத்திருக்கிறார். அதுவும் சாஸ்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

harer nāma harer nāma harer nāmaiva kevalam
kalau nāsty eva nāsty eva nāsty eva gatir anyathā
(CC Adi 17.21)

நாம் வேத இலக்கியம் கற்க விரும்பினால், அது மிகவும் நல்லது. அதுதான் தெளிவான ஆரம்பம். ஆக நம்மிடம் ஏற்கனவே ஐம்பது புத்தகங்கள் உள்ளன. நீங்கள் படியுங்கள். தத்துவத்தில், சமயத்தில், சமூகவியலில் சிறந்த புலமை பெறுங்கள். அனைத்தும் ஸ்ரீமத் பாகவதத்தில் இருக்கிறது. அரசியல் கூட. மேலும் நிறைந்த அறிவோடு, நீங்கள் பூரணத்துவம் நிறைந்த மனிதராவீர்கள். மேலும் உங்களுக்கு நேரமில்லை, நீங்கள் நல்ல கல்விமான் அல்ல, நீங்கள் இந்த புத்தகங்கள் அனைத்தையும் படிக்க முடியாது என்று நினைத்தால், ஹரே கிருஷ்ண ஜேபியுங்கள். எவ்வழியிலும் நீங்கள் பூரணத்துவமடைவீர்கள், இரண்டுமே அல்லது குறைந்தது ஒன்றிலாவது. உங்களால் புத்தகம் படிக்க இயலாதென்றால், ஹரே கிருஷ்ண ஜேபியுங்கள். நீங்கள் பூரணத்துவமடைவீர்கள். மேலும் நீங்கள் புத்தகமும் படித்து ஹரே கிருஷ்ணாவும் ஜேபித்தால், அது மிகவும் நல்லது. ஆனால் அங்கே எதையும் இழக்க மாட்டிர்கள். நீங்கள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபித்து ஆனால் புத்தகங்களை படிக்க முடியவில்லை என்றால், தீங்கு ஏதுமில்லை. அங்கே எதையும் இழக்கமாட்டிர்கள். ஜெபித்தலே போதுமானது. ஆனால் நீங்கள் படித்தால், பிறகு உங்களை எதிர்க்கும் காட்சியினரிடமிருந்து நீங்களே உங்களை தற்காத்துக் கொள்ளலாம். அது உங்கள் போதிக்கும் வேலைக்கு உதவியாக இருக்கும். ஏனென்றால் போதிக்கும் வேலையில் நீங்கள் பல கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும், நீங்கள் பல ஆற்றல் மிக்க எதிர்ப்புக்களை சந்திக்க நேரும், ஆகையால் புத்தகங்கள், வேத இலக்கியங்கள் படிப்பதன் மூலம், உங்கள் நிலையில் நீங்கள் திறமையாக இருந்தால், பிறகு நீங்கள் கிருஷ்ணருக்கு மிகவும் அபிமானவராவீர்கள். கிருஷ்ணர் கூறுகிறார், ந ச தஸ்மான்மனுஷ்யேஷூ கஷ்சின்மே ப்ரியக்ருத்தம:

na ca tasmāt manuṣyeṣu
kaścit me priya-kṛttamaḥ
(BG 18.69)
ya imaṁ paramaṁ guhyaṁ
mad-bhakteṣu abhidhāsyati
(BG 18.68)

அவர் இந்த தகவலை உலகத்திற்கு போதிக்கும் திறன் பெற்றிருந்தால், பிறகு அவர் உடனடியாக முழுமுதற் கடவுளால், மிகுந்த அங்கீகாரம் பெற்றவராவார்.