TA/Prabhupada 0138 - பகவான் மிகவும் கருணை நிறைந்தவர், நீங்கள் விரும்புவதை, அவர் நிறைவேற்றி வைப்பார்



Ratha-yatra -- Philadelphia, July 12, 1975

பெண்மணிகளே ஆடவர்களே, முதற்கண் நான் உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன், பில்டெல்பியா, என்னும் இந்த சிறந்த நகரத்தின் குடியிருப்பாளர்களுக்கு. இந்த இயக்கத்தில் பங்கு கொள்ள நீங்கள் மிக்க கருணையோடும், ஆர்வமுடனும், இருக்கிறீர்கள். ஆகையால் நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் உதவி செய்துக் கொண்டிருக்கும் இந்த அமெரிக்க அடவர்களுக்கும் பெண்களுக்கும் நான் தனிபட்டு கடைமைப்பட்டிருக்கிறேன் கிருஷ்ண பக்தி இயக்கத்தை மேற்கத்திய நாடுகளில் பரவச் செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கிருஷ்ண உணர்வை மேற்கத்திய நாடுகளில் போதிக்க, எனக்கு ஆன்மீக குருவால் கட்டளை இடப்பட்டது. ஆகையால் நான் 1965-ல் முதன் முதலில் நியூயார்க்கு வந்தேன். பிறகு 1966-ல் இந்த கழகம் முறைப்படி நியூயார்க்கில் பதிவு செய்யப்பட்டது, மேலும் 1967-லிருந்து இந்த இயக்கம் முறைப்படி முன்னேறிக் கொண்டிருந்தது, அமெரிக்கா, ஈரோப்பியா, கனடா, மேலும் பசிவிக் மகா சமுத்திரத்தின் தேன் பகுதி, ஆஸ்திரேலியா இன்னும் உலகம் முழுவதிலும். ஆகையால் இந்த கிருஷ்ண உணர்வைப் பற்றி நான் உங்களுக்கு சிறிது தெரிவிக்க விரும்புகிறேன். கிருஷ்ணர், இந்த சொல்லின் பொருள் அனைத்து வசீகரமும் நிறைந்தவர். கிருஷ்ணர் மனித இனத்திற்கு மட்டுமல்லாது, அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் வசீகரமானவர், பறவைகள், தேனிக்கள், மரங்கள், பூக்கள், பழங்கள், தண்ணீர், மிருகங்களும் கூட. அதுதான் விருந்தாவனத்தின் சித்திரம். இது பௌதிக உலகம். நமக்கு ஆன்மீக உலகத்தின் அனுபவம் இல்லை. ஆனால் நமக்கு, ஆன்மா என்றால் என்ன மேலும் இதன் கருப்பொருள் என்னவென்று ஒரு கணநேர சிந்தனை கிடைக்கலாம். உயிருடன் இருக்கும் மனிதனுக்கும் ஒரு இறந்த உடலுக்கும் உள்ள வேறுபாட்டை சும்மா புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இறந்த உடல் என்றால் உடம்பினுள் இருந்த உயிர் சக்தி போனவுடனேயே, பிறகு அது மடிந்த பொருள், பயனற்றது. உயிர் சக்தி அதில் இருக்கும்வரை, உடல் மிகவும் முக்கியமானது. ஆகையால் நாம் இந்த உடலில் அனுபவிப்பது போல், அதில் மடிந்த பொருள் என்றும், உயிர் சக்தி என்றும் ஏதோ ஒன்று இருக்கிறது, அதேபோல், அங்கே இரண்டு உலகம் இருக்கிறது: பௌதிக உலகமும் ஆன்மீக உலகமும். நாம் உயிர் வாழிகள், ஒவ்வொருவரும், ஆன்மீக உலகத்தைச் சேர்ந்தவர்கள். நாம் ஜட உலகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஏதோ ஒரு வழியில், இப்போது நாம் இந்த ஜட உலகத்துடனும் ஜட உடலுடனும் தொடர்புடையவர்களாக இருக்கிறோம். மேலும் வேலை யாதெனில் நாம் நித்தியமான உயிர் சக்தியாக இருந்தாலும், இந்த ஜட உடலுடன் தொடர்பு கொண்ட காரணத்தால், நாம் நான்கு வகையான கொடுந் துன்பங்களை ஏற்க வேண்டும்: பிறப்பு, இறப்பு, நோயும் முதுமையும். அதற்கு நாம் உட்பட்டே ஆக வேண்டும். இந்த ஜட உலகில் நமக்கு ஒரு வகையான உடல் கிடைத்துக் கொண்டிருக்கிறது, மேலும் இது ஒருவிதமான நிலையில் முடிவடைகிறது. சும்மா ஏதோ ஓரு ஜட பொருளைப் போல். உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் ஆடையை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு விதமான ஆடையை அணிந்திருக்கிறீர்கள், ஆனால் அது பழசாகிவிட்டால், பிறகு அதை எறிந்துவிடுவீர்கள், நீங்கள் மற்றொரு ஆடை வாங்குவீர்கள். ஆகையால் இந்த ஜட உடல் ஆத்ம உயிர் சக்தியின் ஆடையாகும். ஏனென்றால் நாம் இந்த, ஜட உலகத்துடன் இணைக்கப்பட்டு இருக்கிறோம், நாம் இந்த ஜட உலகில் அனுபவிக்க விரும்புகிறோம், நமக்கு பலவிதமான உடல்கள் கிடைக்கின்றன. இது பகவத்-கீதையில் ஒரு இயந்திரம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த உடல் ஒரு இயந்திரம். பகவத்-கீதையில் இது கூறப்பட்டுள்ளது, ஈஸ்வர: ஸ்ர்வபூதானாம் ஹ்ருத்தேஷே'ர்ஜுன திஷ்டதி ப்ராமயன்ஸர்வபூதானி யந்த்ரரூடானி மாயயா (பகவத் கீதை 18.61). ஆகையால் நாம் ஜீவாத்மாக்கள், நாம் விரும்புகிறோம். "மனிதன் விரும்புகிறான்; பகவான் முடித்து வைக்கிறார்." பகவான் மிகவும் கருணை நிறைந்தவர். நீங்கள் விரும்புவதை, அவர் நிறைவேற்றி வைப்பார். ஆயினும் அவர் கூறினாலும் அதாவது "இது போன்ற ஜட ஆசைகள் உங்களை .திருப்திபடுத்தாது," ஆனால் நாம் விரும்புகிறோம். ஆகையினால் பகவான், கிருஷ்ணர், நம் பலவிதமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நமக்கு வேறுபட்ட உடலை வழங்குகிறார். இது பௌதிக, கட்டுண்ட வாழ்க்கை என்று அழைக்கப்படுகிறது. இந்த உடல், ஆசைகளுக்கேற்ப உடலின் மாற்றம், பரிணாமம் சார்ந்த நிலை என்று அழைக்கப்படுகிறது. பரிணாமத்தால் பல இலட்சக் கணக்கான உடலைக் கடந்து நாம் இந்த மனித வடிவம் பெற்றுள்ளோம். ஜலஜா நவ-லக்ஷானி ஸ்தாவரா லக்ஷ-விம்ஸதி. நாம் தோள்ளாயிரத்தாயிரம் வகை வடிவம் கொண்ட நீர் இனங்களை கடந்து வந்திருக்கிறோம். அதேபோல், இரண்டு இலட்சம் வடிவம், செடிகளாகவும், மரங்களாகவும். இவ்வாறாக, இயற்கையின் வழியாக, இயற்கை நம்மை இந்த மானிட வாழ்க்கைக்கு கொண்டு வந்துள்ளது, சும்மா உற்பத்தி செய்து அல்லது நம் உணர்வுக்கு விழிப்பூட்ட. இயற்கை நமக்கு இந்த வாய்ப்பளிக்கிறது, "இப்போது நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்? இப்போது உங்களுக்கு மேம்பட்ட உணர்வு இருக்கிறது. நீங்கள் உயர்ந்த கோளரங்கத்திற்குச் செல்ல விரும்புகிறீர்களா அல்லது மறுபடியும் பரிணாமம் சார்ந்த நிலைக்கு போக விரும்புகிறீர்களா, அல்லது நீங்கள் பகவான், கிருஷ்ணரிடம் செல்ல விரும்புகிறீர்களா, அல்லது இங்கேயே இருக்க விரும்புகிறீர்களா?" இந்த தேர்ந்தெடுக்கும் உரிமை அங்கு இருக்கிறது. இது பகவத்-கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது, யாந்தி தேவவ்ரதா தேவான்பித்ருன்யாந்தி பித்ருவ்ரதா: பூதானி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜினோ'பி மாம் (பகவத் கீதை 9.25). இப்போது நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் உயர்ந்த கோளரங்கத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், நீங்கள் போகலாம். நீங்கள் இங்கேயே, நடு கோளரங்கத்தில் இருக்க விரும்பினால், அவ்வாறே செய்யலாம். மேலும் நீங்கள் இன்னும் தாழ்ந்த கோளரங்கத்திற்குச் செல்ல விரும்பினால் நீங்கள் அதுவும் செய்யலாம். மேலும் நீங்கள் பகவான், கிருஷ்ணரிடம், போக விரும்பினால், அதுவும் கூட நீங்கள் போகலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. ஆகையினால், என்ன வித்தியாசம் இந்த பௌதிக உலகத்திற்க்கும், உயர்ந்த கோளரங்கத்திற்கும் அல்லது தாழ்ந்த கோளரங்கத்திற்கும், மேலும் ஆன்மீக உலகம் என்றால் என்ன? ஆன்மீக உலகம் என்றால் அங்கே பௌதிக பயன்பாடு இல்லை. அனைத்தும் ஆன்மா, நான் உங்களிடம் கூறியது போல். மரங்கள், பூக்கள், பழங்கள், நீர், மிருகங்கள் - அனைத்தும் ஆன்மீகம். ஆகையால் அங்கே அழிவு இல்லை. அது நித்தியமானது. ஆகையால் நீங்கள் அந்த ஆன்மீக உலகத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், இந்த மனித உருவிளான வாழ்க்கையில் உங்களுக்கு இப்போது அந்த வாய்ப்பு உள்ளது, மேலும் நீங்கள் இந்த ஜட உலகில் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் அவ்வாறே