TA/Prabhupada 0161 - துன்பப்படும் மனித சமூகத்திற்கு உதவ வைஷ்ணவராகுங்கள் (கிருஷ்ண பக்தராகுங்கள்)

The printable version is no longer supported and may have rendering errors. Please update your browser bookmarks and please use the default browser print function instead.


His Divine Grace Srila Bhaktisiddhanta Sarasvati Gosvami Prabhupada's Disappearance Day, Lecture -- Los Angeles, December 9, 1968

ஆன்மீக குருவின் கட்டளையை ஏற்று அவருக்கு சிரத்தையுடன் சேவை செய்தால் ,பகவான் கிருஷ்ணர் நமக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து தருவார். இது தான் ரகசியம். என்னுடைய குருவின் கட்டளை சாத்தியம் ஆகாத ஒன்றாக எனக்கு தோன்றினாலும், அதை நான் சிரத்தையுடன் ஏற்றுக்கொண்டேன். விஸ்வநாத சக்கரவர்த்தி தாகுரா அவர்கள், தனது பகவத்கீதை வர்ணனையில் பகவத்கீதையின் (ப.கீ. 2.41) பதம்.. "வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந" இந்தப் பதத்திற்கு விஸ்வநாத சக்கரவர்த்தி தாகுரா அவர்கள் கொடுத்துள்ள வர்ணனையில் ஆன்மீக குருவின் கட்டளையை நாம் நமது வாழ்க்கையாகவும், நம் உயிருக்கு நிகராகவும் கருத வேண்டும். அவருடைய கட்டளையை நிறைவேற்றுவதற்கு நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மிக அதிக கவனத்துடன் மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு செய்யும் பொது நமது சொந்த லாப நட்டங்களை கருத்தில் கொள்ள கூடாது. எனவே இந்த கருத்துகளை மனதில் நிறுத்தி நான் என்னால் முடிந்த சிறு முயற்சிகளை செய்தேன். எனவே நான் பகவானுக்கு சேவை செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பகவானே அளித்திருக்கிறார். நாம் இப்போது இருக்கு நிலைமைக்கு நம்மை உயர்த்தி இருக்கிறார். அதாவது இந்த வயதான காலத்தில் என்னை உங்கள் நாட்டுக்கு அனுப்பி இருக்கிறார். நீங்களும் இந்த இயக்கத்தில் ஆர்வத்துடன் சேர்ந்து, எங்கள் கொள்கைகளை புரிந்து கொள்ள முயற்சி செய்கிறீர்கள். நாம் சில புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். அதன் மூலம் நமது இயக்கத்தைப் பற்றிய ஒரு படிப்பினை கிடைக்கிறது. இன்று என்னுடைய ஆன்மீக குருவின் நினைவு நாள். அவர் கூறிய விருப்பங்களை , கட்டளைகளாக ஏற்று நிறைவேற்ற நான் முயற்சி செய்வதைப்போல்.. நீங்களும் எனது விருப்பங்களை , கட்டளைகளாக ஏற்று , அவற்றை செயல்படுத்த முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் முதியவன். எப்போது வேண்டுமானாலும் இறந்து போகலாம். அது இயற்கையின் விதி. யாரும் மாற்ற இயலாது. அது ஒன்றும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயம் அல்ல. ஆனால் எனது ஆன்மீக குருவின் நினைவு நாளான இன்று, நான் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். இப்போது நீங்கள் நமது கிருஷ்ண பக்தி இயக்கத்தின் கொள்கைகளை ஓரளவிற்கு புரிது கொண்டிருக்கிறீர்கள். அந்தப் புரிதலை நீங்கள் மேலும் மேம்படுத்தவேண்டும். மக்கள் கிருஷ்ண உணர்வில்லாமல் மிகவும் துன்பப்படுகிறார்கள். நாம் தினமும் செய்யக்கூடிய பிரார்த்தனையில் பக்தர்கள் குறித்து கூறப்பட்டுள்ளவாறு,

vāñchā-kalpatarubhyaś ca
kṛpā-sindhubhya eva ca
patitānāṁ pāvanebhyo
vaiṣṇavebhyo namo namaḥ

ஒரு வைஷ்ணவர் அல்லது பக்தரின் வாழ்க்கையானது, உலக மக்களின் நன்மைக்காக அர்பணிக்க்பபடுகிறது. உங்களில் பலர் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள். இயேசு கிறிஸ்துவைப் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். உங்கள் பாவங்களைப் போக்குவதற்காக தன்னைத் தானே அர்ப்பணிப்பதாக அவர் கூறினார். ஒரு உண்மையான பக்தரின் மனநிலை இதுவே. அவர்கள் தங்கள் சொந்த நலனைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. ஏனெனில் அவர்கள் கிருஷ்ணரை , அதாவது கடவுளை நேசிக்கின்றனர். அனைத்து உயிர்களும் கிருஷ்ணருடன் தொடர்பு கொண்டவர்கள். ஆதாலால் அவர்கள் அனைத்து உயிர்களையும் நேசிக்கின்றனர். இதை நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும். கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது உங்களை நல்ல பக்தனாக்கி , துன்பப்படும் மக்களுக்கு நன்மை செய்ய வைக்கும் இயக்கம் ஆகும். மனித சமூகம் படும் துன்பங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான கருணைக் கண்ணோட்டத்தில் காண்கிறோம். சிலர் மனித சமூகம் படும் துன்பத்தை , பௌதீக கண்ணோட்டத்துடன் காண்கின்றனர். சிலர் நோயுற்ற மனிதர்களை குணப்படுத்த , மருத்துவமனைகளை திறக்கின்றனர். சிலர் வறுமையில் வாடும் மக்கள் உள்ள பகுதிகளுக்கு சென்று உணவுகளை வழங்குகின்றனர். இந்த செயல்கள் அனைத்தும் பாராட்டுக்குரிய செயல்களே. ஆனால் மனித சமூகத்தின் உண்மையான துன்பம் கிருஷ்ண பக்தி இல்லாமல் இருப்பதே. பௌதீக துன்பம் என்பது நிரந்தரமானதல்ல. அது இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டது. எடுத்துகாட்டாக வறுமையில் வாடும் மக்களுக்கு உணவு வழங்குவது என்பது அவர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வாக நாம் சொல்ல முடியாது. அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமான உதவி, அவர்களிட்டத்தில் கிருஷ்ண உணர்வை எழுப்புவதே.