TA/Prabhupada 0273 - ஆரிய சமான என்றால் கிருஷ்ணர் உணர்வுடையவர்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0273 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
 
 
Line 6: Line 6:
[[Category:TA-Quotes - in United Kingdom]]
[[Category:TA-Quotes - in United Kingdom]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0272 - La bhakti est transcendentale|0272|FR/Prabhupada 0274 - Nous appartenons à la Brahma-sampradaya|0274}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0272 - பக்தி நித்தியமானது|0272|TA/Prabhupada 0274 - நாம் பிரம்ம-சம்பரதாயத்தைச் சேர்ந்தவர்கள்|0274}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 17: Line 17:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|H1dhQp4Zx9o| ஆரிய சமான என்றால் கிருஷ்ணர் உணர்வுடையவர்<br />- Prabhupāda 0273}}
{{youtube_right|WPPA7KZ0woo|ஆரிய சமான என்றால் கிருஷ்ணர் உணர்வுடையவர்<br />- Prabhupāda 0273}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/730816BG.LON_clip4.mp3</mp3player>
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/730807BG.LON_clip4.mp3</mp3player>
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->


<!-- BEGIN VANISOURCE LINK -->
<!-- BEGIN VANISOURCE LINK -->
'''[[Vanisource:Lecture on BG 2.10 -- London, August 16, 1973|Lecture on BG 2.10 -- London, August 16, 1973]]'''
'''[[Vanisource:730807 - Lecture BG 02.07 - London|Lecture on BG 2.7 -- London, August 7, 1973]]'''
<!-- END VANISOURCE LINK -->
<!-- END VANISOURCE LINK -->


Line 32: Line 32:




''துர்லபம் மனுஷ்யம் ஜன்ம அத்ருவம் அர்ததம்'' ([[Vanisource:SB 7.6.1|SB 7.6.1]])
''துர்லபம் மனுஷ்யம் ஜன்ம அத்ருவம் அர்ததம்'' ([[Vanisource:SB 7.6.1|ஸ்ரீமத் பாகவதம் 7.6.1]])




Line 44: Line 44:




''லப்த்வா ஸு-துர்லபம் இதம் பஹு ஸம்பவாந்தே'' ([[Vanisource:SB 11.9.29|SB 11.9.29]])
''லப்த்வா ஸு-துர்லபம் இதம் பஹு ஸம்பவாந்தே'' ([[Vanisource:SB 11.9.29|ஸ்ரீமத் பாகவதம் 11.9.29]])




Line 56: Line 56:




''நாயம் தேஹோ தேஹ - பாஜாம் ந்ரு-லோகே கஷ்டான் காமான் அர்ஹதே விட்-புஜாம் யே'' ([[Vanisource:SB 5.5.1|SB 5.5.1]])
''நாயம் தேஹோ தேஹ - பாஜாம் ந்ரு-லோகே கஷ்டான் காமான் அர்ஹதே விட்-புஜாம் யே'' ([[Vanisource:SB 5.5.1|ஸ்ரீமத் பாகவதம் 5.5.1]])




Line 62: Line 62:




''கார்ப்பண்ய தோஷோபஹத-ஸ்வபாவ'' ([[Vanisource:BG 2.7|BG 2.7]])
''கார்ப்பண்ய தோஷோபஹத-ஸ்வபாவ'' ([[Vanisource:BG 2.7 (1972)|பகவத் கீதை 2.7]])




Line 68: Line 68:




''கார்ப்பண்ய தோஷோபஹத-ஸ்வபாவ'' ([[Vanisource:BG 2.7|BG 2.7]])
''கார்ப்பண்ய தோஷோபஹத-ஸ்வபாவ'' ([[Vanisource:BG 2.7 (1972)|பகவத் கீதை 2.7]])





Latest revision as of 12:37, 12 August 2021



Lecture on BG 2.7 -- London, August 7, 1973

அதுதான் பிராமண, தாராளவாதி. மேலும் இந்த... ஏதட் விதித்வா ப்ராயாதி ச பிராமண:, அறிந்த ஒருவர்... ஆகையினால் பிரகலாத மஹாராஜா கூறுகிறார்.


துர்லபம் மனுஷ்யம் ஜன்ம அத்ருவம் அர்ததம் (ஸ்ரீமத் பாகவதம் 7.6.1)


தன்னுடைய வகுப்புத் தோழர்களுக்கு அவர் உபதேசித்துக் கொண்டிருந்தார். அவர் அரக்கர் குலத்தில் பிறந்தார், ஹிரண்யகஷிபு. மேலும் அவருடைய வகுப்பு நண்பர்களும், அதே பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆகையால் பிரகலாத மஹாராஜா அவர்களுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார்: "என் அன்பார்ந்த சகோதரர்களே, நாம் கிருஷ்ணர் உணர்வை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்." ஆனால் மற்ற சிறுவர்களுக்கு கிருஷ்ணர் உணர்வைப் பற்றி என்ன தெரியும்...? பிரகலாத மஹாராஜா பிறவியிலிருந்தே முக்தி அடைந்துவிட்டார். ஆகையால் அவர்கள் கேட்கிறார்கள்: "இந்த கிருஷ்ணர் உணர்வு என்றால் என்ன?" அவர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஆகையால் அவர், நண்பர்களின் மனமேற்கும்படி கூறுகிறார்.


துர்லபம் மனுஷ்யம் ஜன்ம அத்ருவம் அர்ததம்


இந்த மனித உடல் துர்லபம் ஆகும்.


லப்த்வா ஸு-துர்லபம் இதம் பஹு ஸம்பவாந்தே (ஸ்ரீமத் பாகவதம் 11.9.29)


மனித உருவம் கொண்ட இந்த உடல் பௌதிக இயற்கையினால் வழங்கப்பட்ட ஒரு தனிச் சலுகை. மக்கள் மிகவும் முட்டாளாகவும் சமூகவிரோதிகளாகவும் இருக்கிறார்கள். இந்த மனித உருவ வாழ்க்கையின் மதிப்பு என்ன என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. அவர்கள் இந்த உடலை, பூனைகளையும் நாய்களையும் போல் புலன் நுகர்வில் ஈடுபடுத்துகிறார்கள். ஆகையினால் சாஸ்திரம் கூறுகிறது: "இல்லை, இந்த மனித உருவம் கொண்ட உடல் பன்றிகளையும் நாய்களையும் போல் சீரழிவதற்கானதல்ல.


நாயம் தேஹோ தேஹ - பாஜாம் ந்ரு-லோகே


எல்லோருக்கும் ஒரு உடல் இருக்கிறது, ஜட உடல். ஆனால் ந்ரு-லோகே, மனித சமூகத்தில், இந்த உடல் பழுதடைந்துப் போகக் கூடாது.


நாயம் தேஹோ தேஹ - பாஜாம் ந்ரு-லோகே கஷ்டான் காமான் அர்ஹதே விட்-புஜாம் யே (ஸ்ரீமத் பாகவதம் 5.5.1)


இந்த மனித உருவம் கொண்ட வாழ்க்கை, வெறுமனே வீணாக கடினமாக இரவு பகலாக புலன் நுகர்விற்காக உழைத்துக் கொண்டிருக்கிறது. இது பன்றிகளின் மேலும் நாய்களின் வேலையாகும். அவைகளும் அதே செய்துக் கொண்டிருக்கின்றன, முழு நேரமும் இரவு பகலாக, புலன் நுகர்விற்காக வெறுமனே கடினமாக உழைத்துக் கொண்டிருக்கின்றன. ஆகையினால் மனித சமூகத்தில் முறையான பிரிவு இருக்க வேண்டும். அது வர்ணாஸ்ரம-தர்ம என்று அழைக்கப்படுகிறது. அதுதான் வேத நாகரீகம். அது உண்மையிலேயே ஆரிய-சமாஜ் என்று அழைக்கப்படுகிறது. ஆரிய-சமாஜ் என்றால் போக்கிரிகாளாகவும் முட்டாள்களாகவும் மாறி பகவான இருக்கிறார் என்பதை மறுப்பதல்ல. இல்லை. அது அனார்ய. எவ்வாறென்றால் கிருஷ்ணர் அர்ஜுனை கடிந்துக் கொண்டார்: அனார்ய ஜுஷ்ட. "நீ அனார்ய போல் பேசிக் கொண்டிருக்கிறாய்." கிருஷ்ணர் உணர்வு இல்லாத ஒருவர், அவர் அனார்ய ஆவார். அனார்ய. ஆரிய என்றால் கிருஷ்ணர் உணர்வில் முன்னேற்றமடைந்தவர். ஆகையால் உண்மையில் ஆரிய சமான என்றால் கிருஷ்ணர் உணர்வுடையவர். இல்லையெனில், போலியான, போலியான ஆரிய-சமான. ஏனென்றால் இங்கே பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது, கிருஷ்ணர் அர்ஜுனை கடிந்துக் கொள்கிறார், ஏனென்றால் அவர் போரிட மறுக்கிறார், ஏனென்றால் தன் கடமை என்னவென்று அவருக்கு தெரியவில்லை, மறுபடியும் இங்கு அர்ஜுன் ஒப்புக் கொள்கிறார் அதாவது


கார்ப்பண்ய தோஷோபஹத-ஸ்வபாவ (பகவத் கீதை 2.7)


"ஆம், நான் அனார்ய. நான் அனார்யாவாகிவிட்டேன். ஏனென்றால் நான் என் கடமையை மறந்துவிட்டேன்." ஆகையால் உண்மையிலேயே ஆரிய-சமாஜ் என்றால் கிருஷ்ணர் உணர்வு இயக்கம், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். அதுதான் ஆரிய. போலியானதல்ல. ஆகையால் இங்கு, அர்ஜுன் விவரிக்கிறார், தன்னை அந்த நிலையில் வைத்து: "ஆம், கார்ப்பண்ய தோஷோ. ஏனென்றால் நான் என் கடமையை மறந்துக் கொண்டிருக்கிறேன், ஆகையினால் உபஹத-ஸ்வபாவ:, என்னுடைய இயற்கையான மனபபாங்கிலிருந்து தடுமாறிவிட்டேன். ஒரு க்ஷத்திரியன் எப்போதும் ஊக்கமுடன் இருக்க வேண்டும். எப்பொழுதெல்லாம் போர் வருகிறதோ, அங்கே சண்டை இருக்கும், அவர்கள் மிகவும் ஆர்வமுடன் இருக்க வேண்டும். ஒரு க்ஷத்திரியன், மற்றொரு க்ஷத்திரியன் கூறினால்: "நான் உன்னுடன் போர் செய்ய வேண்டும்," அவன், ஓ, அவன் மறுக்க முடியாது. "சரி, உடனே வா. போரிடு. வாளை எடு." உடனடியாக: "உடனே வா". அதுதான் க்ஷத்திரியன். இப்போது அவன் போரிட மறுக்கிறான். ஆகையினால் அவரால் புரிந்துக் கொள்ள முடிந்தது... நீங்கள் இந்த பக்கம் நிற்கலாம், எதிரில் அல்ல. அவர் தன் கடமையை மறந்துக் கொண்டிருக்கிறார், க்ஷத்திரிய கடமை. ஆகையினால், அவர் ஒப்புக் கொள்கிறார்: ஆம், கார்ப்பண்ய தோஷ.


கார்ப்பண்ய தோஷோபஹத-ஸ்வபாவ (பகவத் கீதை 2.7)


"என்னுடைய இயல்பான கடமையை நான் மறந்துக் கொண்டிருக்கிறேன். ஆகையினால், நான் சுயனலவாதி ஆகிவிட்டேன். ஆகையினால் என்னுடைய..." நீங்கள் சுயனலவாதி ஆகிவிட்டால், அது நோய் கொண்ட நிலைமையாகும். பிறகு உங்கள் கடமை என்ன? பிறகு உங்களை குணப்படுத்தக் கூடிய ஒருவரிடம் செல்லுங்கள். எவ்வாறு என்றால் நீங்கள் நோய்வாய்பட்டிருக்கும் போது, வைத்தியரிடம் சென்று கேட்பீர்கள் "என்ன செய்வது, ஐயா?" நான் இந்த நோயால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்." இது உங்களுடைய கடமை. அதேபோல், நம் கடமைகளில் குழப்பம் அடைந்திருந்தால், அல்லது நம் கடமைகளை மறந்துவிட்டால், மேல்நிலையாளரிடம் சென்று என்ன செய்வது என்று கேட்பது மிகவும் சிறந்தது. கிருஷ்ணரைவிட மேல்நிலையாளர் யாராக இருக்க முடியும்? ஆகையினால் அர்ஜுன் கூறுகிறார்: ப்ருச்சாமி த்வாம். " நான் தங்களை கேட்கிறேன். ஏனென்றால் அது என் கடமை. நான் இப்போது என் கடமையில் தவறிவிட்டேன், குற்றம். ஆகையால் இது நல்லதல்ல. அதனால் எனக்கு மேல்நிலையாளர் யாரிடமாவது நான் கேட்க வேண்டும்." அதுதான் கடமை.


தத் விஞ்ஞானார்தம் ச குருமேவ அபிகச்செத் (ம.உ.1.2.12)


இதுதான் வேதிக் கடமை. எல்லோரும் குழப்பமாக இருக்கிறார்கள். குழப்பத்தினால், இந்த பௌதிக உலகில், எல்லோரும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு அங்கீகாரம் பெற்ற குருவை தேடிச் செல்லமாட்டார்கள். இல்லை. அதுதான் கார்ப்பண்ய தோஷோ. அதுதான் கார்ப்பண்ய தோஷோ. இங்கு, அர்ஜுன் கார்ப்பண்ய தோஷோவில் இருந்து வெளியாகிறார். எவ்வாறு? இப்பொழுது அவர் கிருஷ்ணரிடம் கேட்கிறார். ப்ருச்சாமி த்வாம். "என் பிரியமான கிருஷ்ணா, நீங்களே மிகவும் சிறந்த மேல்நிலையாளர். அது எனக்கு தெரியும். நீங்கள் தான் கிருஷ்ணா. ஆகையால் நான் குழப்பமாக இருந்தேன். உண்மையிலேயே, நான் என் கடமையை மறந்துக் கொண்டிருந்தேன். ஆகையினால், நான் தங்களை கேட்கிறேன்."