TA/Prabhupada 1062 - நமக்கு ஜட இயற்கையை கட்டுப்படுத்தும் மனப்பாங்கு இருக்கிறது

The printable version is no longer supported and may have rendering errors. Please update your browser bookmarks and please use the default browser print function instead.


660219-20 - Lecture BG Introduction - New York

ஆகையால் நாம், அற்புதமான காரியங்கள் இந்த பிரபஞ்ச இயற்கையில் நடப்பதை காணும் பொழுது, நாம் தவறாக புரிந்துக் கொண்டோம். நமக்கு தெரிந்திருக்க வேண்டும், அதாவது இந்த அற்புதமான தோற்றத்திற்குப் பின்னால், ஒரு ஆளுனர் இருக்கிறார். ஆளப்படாமல் எதுவும் தோன்ற முடியாது. ஆளுநரைப் பற்றி நினைக்காமல் இருப்பது, சிறுபிள்ளைத்தனமாகும். எவ்வாறு என்றால் ஒரு அழகான இயந்திர வாகனம், மிக நல்ல வேகத்துடன், மேலும் மிக நல்ல இயந்திரவியல் தயாரிப்பினால், வீதியில் ஓடுகிறது. ஒரு குழந்தை நினைக்கலாம் அதாவது "இந்த இயந்திர வாகனம் எவ்வாறு ஓடுகிறது, குதிரையின் உதவியும் இல்லாமல் அல்லது எந்த இழுக்கும் பொருளும் இல்லாமல்?" ஆனால் ஒரு தெளிந்த அறிவுடையவரோ அல்லது முதியவரோ, அவருக்கு தெரியும் அதாவது வாகனத்தில் இயந்திரவியல் ஏற்பாடுகள் இருப்பினும், வாகனத்தை ஓட்டுனர் இல்லாமல் அது நகர முடியாது. அந்த வாகனத்தின் இயந்திரவியல் ஏற்பாடுகள், அல்லது மின்சார மின்வழங்கி வீடு, இப்பொழுது இன்றைய நிலையில் இது இயந்திர காலமாகும், ஆனால் நாம் எப்பொழுதும் தெரிந்துக் கொள்ள வேண்டியது அதாவது அந்த இயந்திரங்களுக்குப் பின்னால், அருமையாக வேலை செய்யும் இயந்திரத்திற்கு பின்னால், அங்கே ஒரு ஓட்டுநர் இருக்கிறார். ஆகையால், நித்தியமான பகவான் தான் அந்த ஓட்டுநர், அத்யக்ஷ. அவர்தான் முழுமுதற் கடவுள், அனைத்தும் இவருடைய மேற்பார்வையில் தான் இயங்குகிறது. இப்பொழுது இந்த ஜீவா, அல்லது உயிர்வாழிகள், அவர்கள் பகவத்-கீதையில் பகவானால் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள், இதைப்பற்றி நாம் வரும் அத்தியாயங்களில் தெரிந்துக் கொள்வோம், அதாவது அவர்கள் நித்தியமான பகவானின் அங்க உறுப்புகள் என்று. மமைவாம்சோ ஜீவபூத: (ப.கீ.15.7). அம்ஸ என்றால் அங்க உறுப்புகள். இப்பொழுது தங்கத்தின் ஒரு துணுக்கானாலும் அதுவும் துணுக்குத்தான், சமுத்திரத்தின் ஒரு துளி தண்ணீரும் உப்பு கரிக்கும், அதேபோல், நாம், உயிர்வாழிகள், நித்தியமான ஆளுநரின் அங்க உறுப்புகளாக இருப்பவர்கள், ஈஸ்வர, பகவான், அல்லது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், நம்மிடம் இருக்கிறது, நான் சொல்ல முயல்வது, தன்மைவாரியாக நித்தியமான பகவானின் அனைத்து தன்மையும் ஒரு இம்மியளவில் உள்ளது. ஏனென்றால் நாம் இம்மியளவு ஈஸ்வர, கீழான ஈஸ்வர. நாமும் கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம். நாம் இயற்கையை கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம், இன்றைய நாட்களில் நீங்கள் விண்வெளியை கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்கள். நீங்கள் செயற்கையான கோள்களை மிதக்கவிட முயற்சிக்கிறீர்கள். ஆகையால் இந்த ஆளும் அல்லது படைக்கும் மனப்பாங்கு இருக்கிறது ஏனென்றால் நமக்கு அந்த ஆளும் மனப்பாங்கு ஒரு பகுதி உள்ளது. ஆனால் இந்த போக்கு போதுமானதல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்கு இந்த பௌதிக இயற்கையை ஆளும் போக்கு இருக்கிறது, பௌதிக இயற்கையை கட்டுப்படுத்தல், ஆனால் நாம் அந்த நித்தியமான ஆளுநர் அல்ல. ஆகையால் அந்த விஷயம் பகவத்-கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது.

பிறகு இந்த பௌதிக இயற்கை என்பது என்ன? அந்த இயற்கையும் விவரிக்கப்பட்டுள்ளது. பௌதிக இயற்கை பகவத்-கீதையில் தாழ்ந்த, தாழ்ந்த ப்ரக்ருதி என்று விவரிக்கப்பட்டுள்ளது. தாழ்வான ப்ரக்ருதி என்றும் உயிர்வாழிகள் உயர்வான ப்ரக்ருதியாக என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. ப்ரக்ருதி என்றால் ஆளப்படும் ஒன்று, இதன் கீழ், ப்ரக்ருதி, உண்மையான அர்த்தம் என்ன என்றால் பெண். எவ்வாறு என்றால் கணவன் மனைவியின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகிறாரோ, அதேபோல், ப்ரக்ருதி என்றால் கீழான, ஆதிக்கம் செலுத்தப்படும். பகவான், முழுமுதற் கடவுள், மேம்பட்டவர், மேலும் இந்த ப்ரக்ருதி, உயிர்வாழிகள் பௌதிக இயற்கை - இவை இரண்டும், அவை வேறுபட்ட ப்ரக்ருதி, அல்லது வலிமை பெற்றவை, பரமனால் ஆளப்படுபவர்கள். ஆகையால் பகவத்-கீதையை பொறுத்தவரை உயிர்வாழிகள், முழுமுதற் கடவுளின் அங்க உறுப்புகளானாலும், அவர்கள் ப்ரக்ருதியாக ஏற்கப்படுகிறார்கள். இது பகவத்-கீதையின் ஏழாம் அத்தியாயத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது, அபரேயம் இதஸ் துவித்தி அபரா (ப. கீ.7.5). இந்த பௌதிக இயற்கை ஒரு அபரா இயம். இதஸ்து, மேலும் இதற்கு அப்பால் அங்கே மற்றொரு ப்ரக்ருதி இருக்கிறது. மேலும் அது என்ன ப்ரக்ருதி? ஜீவ-பூத, இவை,

ஆகையால் இந்த ப்ரக்ருதி, இந்த உடலமைப்பு மூன்று தன்மைகளின் தொடர்புடையது: சத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம். மேலும் இந்த குணங்களுக்கு மேற்கொண்டு மூன்று விதமான குணங்கள், சத்வ, ரஜோ, நான் சொல்ல நினைப்பது, தமோ, அங்கே நித்திய நேரம் உண்டு. அங்கே நித்திய நேரம் உண்டு. மேலும் இந்த இயற்கையான குணங்களின் சேர்க்கையினாலும், கட்டுப்பாட்டின் கீழ் நித்தியமான நேரத்தின் ஆதிக்க வரம்புக்குட்பட்டும், செயல்பாடுகள் உள்ளன. கர்மா என்றழைக்கப்படும் செயல்பாடுகள் அங்கே உள்ளன. இந்த செயல்பாடுகள் பழமையான காலத்தில் இருந்து வருவது மேலும் நாம் நம் செயல்பாடுகளின் பயனால் கஷ்டமோ அல்லது சந்தோஷமோ அனுபவிக்கிறோம்.