TA/660427 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஞானம் இல்லாமல் ஒருவர் பற்றை அறுக்க முடியாது. அந்த ஞானம் என்பது என்ன? அந்த ஞானம் என்பது.... 'நான் ஜடப்பொருள் அல்ல நான் ஜீவாத்மா.' எனவே.. ஆனால் இந்த ஞானம்... "நான் இந்த உடல் அல்ல ஆன்மா" என்று சொல்வது மிக எளிதாக இருந்தாலும் பூரணமான ஞானத்தைப் பெறுவது பெரும் வேலை. அது அவ்வளவு எளிதானதல்ல. அந்த பூரண ஞானத்தைப் பெற பல ஆன்மிகவாதிகளும் பற்றை அறுப்பதற்கு மட்டும் பிறவி தோறும் முயல்கின்றனர். ஆனால் மிக எளிதான முறை என்பது பக்தித் தொண்டில் ஈடுபடுவது தான். ஸ்ரீமத் பாகவதத்திலும் இந்த சூத்திரமே கொடுக்கப்பட்டுள்ளது. வாசுதேவே பகவதி (SB 1.2.7). வாசு தேவே பகவதி 'பரம புருஷ பகவானாகிய கிருஷ்ணரில்.' வாசு தேவரே கிருஷ்ணர்."
660427 - சொற்பொழிவு BG 02.58-59 - நியூயார்க்