TA/670102b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
ஒருவர் கிருஷ்ண பக்தித் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு, கடவுளின் அன்பை வளர்த்துக் கொண்டால், அவர் ஒவ்வொரு கணத்திலும், ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு விஷயத்திலும் கடவுளைக் காண முடியும். அவர் ஒரு கணம் கூட கடவுளின் பார்வைக்கு வெளியே இருக்கமாட்டார். பகவத்-கீதையில் தேசு தே மயி என்று சொல்லப்படுகிறது. நேசித்த பக்தர், கடவுள்மீது அன்பை வளர்த்துக் கொண்டவர், ஒவ்வொரு கணத்திலும் கடவுளைப் பார்க்கிறார். இதேபோல், கடவுளும் அவரை ஒவ்வொரு கணத்திலும் பார்க்கிறார். அவர்கள் பிரிக்கப்படவில்லை . மிகவும் எளிமையான செயல்முறை. இந்த ஹரி-கீர்த்தனா, இந்த யுகத்தில் பரிந்துரைக்கப்பட்ட எளிய செயல்முறை இதுதான், எந்தவொரு குற்றமும் இல்லாமல், நம்பிக்கையுடன் இதை உண்மையாகச் செய்தால், கடவுளைப் பார்ப்பது ஒரு பக்தருக்கு கடினம் அல்ல. "
670102 - சொற்பொழிவு CC Madhya 20.391-405 - நியூயார்க்