TA/690103 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கடவுள் உடனான தனது உறவை உறுதியாக ஏற்றுக் கொள்பவரே பக்தர். அந்த உறவு என்ன? அந்த உறவு அன்பின் அடிப்படையிலானது. பக்தர் கடவுளை நேசிக்கிறார், கடவுள் பக்தரை நேசிக்கிறார். இதுதான் ஒரே உறவு. அவ்வளவுதான். கடவுள் பக்தனுக்குப் பின்னாலும், பக்தர் கடவுளுக்குப் பின்னாலும் உள்ளனர். இது உறவு. எனவே இந்த உறவை நிலைநிறுத்த வேண்டும். அர்ஜுனன் ஒரு நண்பனாக கிருஷ்ணருடன் உறவு கொள்வதைப் போல், நீங்கள் ஒரு காதலனாக கடவுளோடு உறவு கொள்ளலாம். கடவுளுடன் எஜமானராகவும் ஊழியராகவும் உறவு கொள்ளலாம். தந்தை மகனாகவும் உறவு கொள்ளலாம். பல உறவுகள் உள்ளன. இந்த பௌதேக உலகுடனும் நமக்கு உறவு உள்ளது. இது கடவுளுடனான அந்த ஐந்து உறவின் மாறுபட்ட பிரதிபலிப்பு மட்டுமே. ஆனால் நாம் அதை மறந்துவிட்டோம். இந்தக் கிருஷ்ண பக்தி இயக்கம் அந்த உணர்வைப் புதுப்பிக்க வேண்டும். இது ஒன்றும் புதிதல்ல. ஒரு பைத்தியக்கார மனிதனை வாழ்க்கையின் இயல்பு நிலைக்கு கொண்டு வருவது மட்டுமே. கடவுளை மறந்துவிடுவது என்பது அசாதாரண நிலை, கடவுளுடன் உறவு கொள்வது என்பது சாதாரண நிலை. "
690103 - சொற்பொழிவு BG 04.01-6 - லாஸ் ஏஞ்சல்ஸ்