TA/700103 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். எல்லோரும் சாப்பிடுகிறார்கள்; நாமும் சாப்பிடுகிறோம். வித்தியாசம் என்னவென்றால், ஒருவர் புலன்களின் திருப்திக்காக சாப்பிடுகிறார், ஒருவர் கிருஷ்ணரின் திருப்திக்காக சாப்பிடுகிறார். அதுதான் வித்தியாசம். ஆகவே, 'என் அன்புள்ள ஆண்டவரே ...' ஒரு மகனைப் போலவே, தந்தையிடமிருந்து பெறப்பட்ட நன்மைகளை அங்கீகரித்தால், தந்தை எவ்வளவு திருப்தி அடைகிறார் 'ஓ, இதோ ஒரு நல்ல மகன்' என்று. தந்தை அனைத்தையும் வழங்க, மகன் 'என் அன்பான தந்தையே, நீங்கள் என்னிடம் மிகவும் அன்பாக இருக்கிறீர்கள், இதுபோன்ற நல்ல விஷயங்களை நீங்கள் வழங்குகிறீர்கள். அதற்கு என் நன்றி' என்று சொன்னால், தந்தை மிகவும் மகிழ்ச்சியடைகிறார். தந்தைக்கு அந்த நன்றி தேவையில்லை, ஆனால் அது இயற்கையானது. அத்தகைய நன்றிகளை தந்தை எதிர்பார்ப்பதில்லை. வழங்குவது அவரது கடமை. ஆனால் தந்தையின் நன்மைக்காக மகன் நன்றியுணர்வை உணர்ந்தால், தந்தை குறிப்பாக திருப்தி அடைகிறார். அதேபோல், கடவுளே தந்தை. அவர் நமக்கு வழங்குகிறார். "
700103 - சொற்பொழிவு SB 06.01.06 - லாஸ் ஏஞ்சல்ஸ்