TA/710813b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நான் கூறியது போல்: "என்னுடைய தலை" அல்லது "என்னுடைய முடி," ஆனால் நான் உங்களை கேட்டால் அல்லது நீங்கள் என்னை கேட்டால், அதாவது "அங்கே எத்தனை முடிகள் இருக்கின்றன?" ஓ, நான் அறியாதவன்—எனக்கு தெரியாது. அதேபோல், நாம் மிகவும் நிறைவற்றவர்கள், நமக்கு சொந்த உடலைப் பற்றிய அறிவு கூட மிகவும் குறைவே. நாம் உணவு உட்கொள்கிறோம், ஆனால் நாம் உட்கொண்டவை எவ்வாறு சுரப்பாக மாற்றப்பட்டது, அவை எவ்வாறு இரத்தமாக மாற்றப்படுகிறது, அவை இதயத்தினுள் எவ்வாறு கடந்து செல்கிறது, மேலும் அது சிவப்பாக மாறுகிறது, மேலும் மீண்டும் நரம்புகளில் பரவுகிறது, மேலும் இவ்விதமாக உடல் பராமரிக்கப்படுகிறது, நமக்கு ஏதோ சிறிதளவு தெரியும், ஆனால் அந்த வேலை எவ்வாறு இயங்குகிறது, இந்த தொழிற்சாலை எவ்வாறு இயங்குகிறது, தொழிற்சாலையில், இயந்திரங்கள், எவ்வாறு வேலை செய்கிறது, நமக்கு இதைப் பற்றிய அறிவு மிகவும் குறைவே. எனவே மறைமுகமாக நமக்கு தெரிவது, அதாவது, "இது என்னுடைய உடல்." "மறைமுகமாக" என்றால் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் நேரடியான அறிவு இல்லை."
710813 - சொற்பொழிவு Festival Janmastami Morning - இலண்டன்