TA/710817 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணர் எப்படியும் தோன்றுவார். அவர் அனைத்து சக்திகளும் நிறைந்தவர். எனவே அவர் ஒரு கல் சிலையாக தோன்றியதால், கிருஷ்ணர் ஒரு கல் அல்லது சிலை என்று அர்த்தமல்ல. கிருஷ்ணர் அதே கிருஷ்ணர் தான், ஆனால் அவர் என் முன் ஒரு கல் சிலையாக தோன்றினார் ஏனென்றால் இந்த கல்லுக்கு அப்பால் என்னால் எதையும் தொட இயலாது. இந்த கல்லுக்கு அப்பால் என்னால் பார்க்க இயலாது. எனவே அது அவருடைய கருணையே. ஆகையினால் அது அர்சா-அவதார, என்று அழைக்கப்படுகிறது, வணங்கத்தக்க ஸ்ரீ மூர்த்தியின் அவதாரம். எனவே நாம் "கிருஷ்ணர் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. நான் சில பாவச் செயல்கள் புரிந்தால், அல்லது... கிருஷ்ணர் வைகுண்டத்தில் இருக்கிறார் இங்கு நான் என் இஷ்டம் போல் எதையும் செய்யலாம்." என்று நினைக்கவே கூடாது. (சிரிப்பு) அப்படி செய்யாதீர்கள். அது மிகவும் பெரிய பாவம்."
710817 - சொற்பொழிவு SB 01.01.02 - இலண்டன்