TA/720118 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஜெய்ப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு புனித நபரின் கடமை, பிரஜை - குடிமகனை ஒரு அமைப்பில், பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மகிழ்ச்சியாக இருக்கும் வண்ணம் பாதுகாப்பதேயாகும். இது புனிதரின் கடமையாகும். 'நான் இமயமலைக்குச் சென்று, மூக்கை அழுத்தி, முக்தி அடைகிறேன்' என்பதல்ல. அவர் புனித நபர் அல்லர். அவர் புனித நபர் அல்லர். தெரிந்துகொள்ளுங்கள், புனித நபர் என்றால் அவர்கள் பொது நலன், உண்மையான பொது நலனில் அக்கறை காட்ட வேண்டும். பொது நலன் என்றால் ஒவ்வொரு குடிமக்களும் கிருஷ்ண உணர்வுடன் இருக்க வேண்டும், பின்னர் அவர்கள் பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனது கருத்து என்னவென்றால், நமது கிருஷ்ண பக்தி இயக்கம் சுயநல இயக்கம் அல்ல. இது மிகவும் பரோபகார இயக்கம். ஆனால் மக்கள், பரோபகார இயக்கம் என்ற பெயரில், பொதுவாக, அவர்கள் உண்மையில் புனிதர்களாக இல்லாததால், பணம் சேகரித்து அதில் வாழ்கிறார்கள். "
720118 - உரையாடல் - ஜெய்ப்பூர்