TA/740316 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஜன்மைஶ்வர்ய-ஶ்ருத-ஶ்ரீபிர் ஏதமான-மத꞉ புமான் (SB 1.8.26). எதிர்பாராதவிதமாக... நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் பொழுது, அழகான குடும்பம் அல்லது நல்ல நாடு, அழகான உடல், கல்வி, இது நம் முற்பிறவியின் பக்தி செயல்களால் கிடைக்கிறது என்று நாம் கருத்தில் கொள்ள வேண்டும்; ஆகையினால் அது கிருஷ்ணருக்காக பயன்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால் பக்தி செயல்கள் என்றால் கிருஷ்ணரை அணுகுவதாகும். இழிவாக, பாவச்செயல் நிறைந்தவர்கள் கிருஷ்ணரை அணுக முடியாது. ந மாம்ʼ துஷ்க்ருʼதினோ மூடா꞉ ப்ரபத்யந்தே நராதமா꞉ (BG 7.15). நராதமா꞉ இவர்கள், மனிதகுலத்தின் மிக தாழ்ந்தவர்கள், எப்பொழுதும் பாவச் செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள், மேலும் போக்கிரிகள், சிறந்த கற்றறிந்தவர்களாக இருக்கலாம்—மாயயா அபஹ்ருʼத-ஜ்ஞானா꞉, அவர்களுடைய கல்வியின் மதிப்பு மாயாவால் எடுத்துக் கொள்ளப்படுகிறது."
740316 - சொற்பொழிவு SB 02.01.01 - விருந்தாவனம்