TA/740319 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே, அபஶ்யதாம் ஆத்ம-தத்த்வம் (SB 2.1.2), ஆத்மாவின் உண்மையான நிலையை காணத் தவறும் சிறந்த அறிவாளியாக இல்லாதவர்கள், அவர்கள் சிக்களில் காணப்படுவார்கள். அது எவ்வாறு சிக்கலாகிறது? தேஹ-அபத்ய, இந்த உடலும் மேலும் பிள்ளைகள், மனைவியின் மூலம் இந்த உடலில் இருந்து பிறக்கும் பிள்ளைகள், தேஹாபத்ய-கலத்ராதிஷு ஆத்ம-ஸைன்யேஷு (SB 2.1.4). அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் 'எனக்கு நல்ல மனைவி கிடைத்திருக்கிறது. எனக்கு அழகான பிள்ளைகள் கிடைத்திருக்கிறது. எனக்கு நல்ல சமூகம், நாடு கிடைத்திருக்கிறது', மேலும் இது போல் பல. தேஹாபத்ய-கலத்ராதிஷு. மேலும் அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான் 'அவர்கள் என்னுடைய சிப்பாய்கள், இதோ அந்த போர், இருப்புக்கான போராட்டம்'. அனைவரும் இருப்பிற்காக போராடுகிறார்கள், மேலும் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், 'அவர்கள் என்னுடைய சிப்பாய்கள், இவர், என மனைவி, பிள்ளைகள், சமூகம், நட்பு, நாடு, அவர்கள் எனக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்'. ஆனால் யாராலும் பாதுகாப்பு கொடுக்க முடியாது. ஆகையினால் அவர் இங்கு ப்ரமத்த꞉, பாகல என்று விளக்கப்படுகிறார். யாராலும் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது."
740319 - சொற்பொழிவு SB 02.01.04 - விருந்தாவனம்