TA/740403 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பௌதிக நிலையிலிருந்து, நீங்கள் ஆன்மீக தளத்திற்கு உயர்வு பெற வேண்டும் என்றால், இவை தான் அந்த ஒழுக்க நெறிகள். நீங்கள் ப்ராஹ்மண அல்லது க்ஷத்ரிய, வைஶ்ய அல்லது ஶூத்ர, அல்லது ப்ரஹ்மசாரீ, க்ருʼஹஸ்த, வானப்ரஸ்த அல்லது ஸந்ந்யாஸ, ஏதோ ஒன்றாக மாறி, மேலும் படிப்படியாக உங்கள் ஆன்மீக நிலையில் வளர்ச்சி அடைந்து மேலும் உன்னத நிலைக்கு மாற்றப்படுவீர்கள். பரஸ் தஸ்மாத் து பா⁴வோ (அ)ன்யோ (அ)வ்யக்தோ (அ)வ்யக்தாத் ஸனாதன꞉ (BG 8.20). அதுதான் செயல்முறை. ஆனால் நீங்கள் விலங்குகளைப் போல் கட்டுண்ட வாழ்க்கையில் வாழ்ந்தால், பிறகு நீங்கள் விலங்குகளின் வாழ்க்கையை தொடர்வீர்கள்— சாப்பிட்டுக் கொண்டும், தூங்கிக் கொண்டும், இனச்சேர்க்கையில் ஈடுபட்டும் மேலும் தற்காத்துக் கொண்டும், இருப்பிற்கு போராட வேண்டும். மன꞉ ஷஷ்டானீந்த்ரியாணி ப்ரக்ருʼதி-ஸ்தானி கர்ஷதி (BG 15.7). பிறகு நிங்கள் என்றென்றும் இந்த பௌதிக உலகில் போராடிக் கொண்டிருப்பீர்கள். சில நேரங்களில் நீங்கள் மன்னன் இந்திராவாக ஆவீர்கள், மேலும் சில நேரங்களில் அந்த கிருமி இந்திராவாக ஆவீர்கள்."
740403 - சொற்பொழிவு BG 04.14 - மும்பாய்