TA/740512 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"என் குருமஹாராஜ் சொல்வது வழக்கம், "நீங்கள் பகவானைப் பார்க்க முயற்சி செய்யாதீர்கள்." சும்மா புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். "நீங்கள் வேலை செய்யும் விதத்தில் பகவான் உங்களை பார்க்கும்படி செய்யுங்கள்." இதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம். அனைவரும் பகவானை காண பரபரப்பாக இருக்கிறார்கள். நிச்சயமாக, பகவானை காண்பது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் ஒரு பக்தர் பகவானை காண பரபரப்பாக இல்லை, ஆனால் பகவான் அவரை காண வேண்டும் என்று விரும்புவார். எவ்வாறு என்றால் நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் நன்றாக, உண்மையுடன், வேலை செய்தால், பிறகு உரிமையாளர் தானாக உங்களைப் பார்ப்பார். உரிமையாளரை பார்க்க முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் வேலை செய்யும் விதத்தில் உரிமையாளர் மனம் விருப்பம் கொள்ளும், "சரி, இந்த நபர் மிகவும் நன்றக வேலை செய்கிறார். யார் இந்த நபர்?" எனவே அதுதான் நம் வேலை. அதுதான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் போதனை."
740512 - சொற்பொழிவு BG 12.13-14 - மும்பாய்