TA/740923 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கல்கத்தா இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணரின் உடலை ஜட உடலாக நினைப்பவர்கள், அவர்கள் மாயாவாதீ என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால் உண்மையில், கிருஷ்ணரின் உடல் ஜடஉடல் அல்ல. அதற்கு ஆதாரம் யாதெனில் கிருஷ்ணருக்கு கடந்த காலம், நிகழ் காலம் மேலும் எதிர் காலம் அனைத்தும் தெரியும். ஜட உடலில் அது சாத்தியம் இல்லை. எவ்வாறு என்றால் என் முற்பிறவியில், அந்த பிறவியின் உடல் பெற்றிருந்தேன், ஆனால் எனக்கு நினைவில் இல்லை. யாரேனும் என்னிடம் கேட்டால், 'உன் முற்பிறவியில், நீ என்னவாக இருந்தாய்?' அது மிகவும் கடினம், ஏனென்றால் இறப்பு என்றால் மறதி. நாம் இறப்பதில்லை. ஜீவாத்மாக்களைப் பொறுத்தவரை, நாம் இறப்பதில்லை. ந ஹன்யதே ஹன்யமானே ஶரீரே (BG 2.20). நாம் இறப்பதில்லை. இது ஒரு நோய், ஆதாவது நாம் வேறுபட்ட உடலை ஏற்றுக் கொள்கிறோம், ஜட உடல். மேலும் அந்த வேறுபட்ட உடல் ஒரு இயந்திரம். நீங்கள் ஒரு வாகனம் வைத்திருப்பது போல். நீங்கள் சவாரி செய்யலாம், இயந்திரம் வேலை செய்யும் வரை நீங்கள் ஓட்டலாம். ஆனால் இயந்திரம் வேலை செய்யாமல் போன உடனே, நீங்கள் வாகனத்தை மாற்ற வேண்டும். அது அப்படி தான்."
740923 - சொற்பொழிவு Radhastami - கல்கத்தா