TA/750415 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹைதராபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நான் மிகவும் கடினமாக உழைத்தால், என் வாழ்வு நிலை உயரும்" என்று நீங்கள் நினைத்தால், அது சாத்தியமில்லை. உங்களது நிலை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. அப்படியானால் எனது இன்பத்திற்காக நான் எந்த முயற்சி செய்யக்கூடாதா? என்று நீங்கள் நினைத்தால், ஆம், செய்யக்கூடாது. அதற்கு சாஸ்திரத்தில் பதில் கூறப்பட்டுள்ளது: 'தல் லப்யதே துக்கவத் அன்யத சுகம்'. உங்களது வாழ்க்கையில் துன்பத்திற்காக நீங்கள் முயற்சி ஏதும் செய்வதில்லை. அப்படியானால் துன்பம் ஏன் வருகிறது? 'தயவுசெய்து எனக்கு துன்பத்தைத் தாருங்கள்' என்று நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. யாரொருவரும் அவ்வாறு கேட்பதில்லை. இருந்தும் துன்பம் ஏன் வருகிறது? அதேபோல், நீங்கள் மகிழ்ச்சிக்காகப் பிரார்த்தனை செய்யாவிட்டாலும், உங்கள் தலைவிதிப்படி மகிழ்ச்சியை அனுபவிக்க இருந்தால், துன்பம் வருவது போல் இன்பமும் வரும். 'தல் லப்யதே துகாகவத் அன்யத சுகம்'. எனவே போலியான பெயரளவிற்கான இன்ப துன்பத்தால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம். இன்ப துன்பம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீங்கள் கிருஷ்ண பக்தி உணர்வில் முன்னேறுவதற்கு மட்டும் முயலுங்கள். அதுவே நாம் செய்ய வேண்டிய ஒரே செயல். தஸ்யைவ ஹேதொ ப்ரயதேத கோவித: (ஸ்ரீமத் பாகவதம் 1.5.18). மஹத்-ஸேவாம் த்வாரம் ஆஹுர் விமுக்தே, நாம் உன்னத ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்ளும்போது தான் கிருஷ்ண பக்தி உணர்வில் சிறப்பாக முன்னேற முடியும். அவர் சன்யாசியோ கிருஹஸ்தரோ, யாராக இருந்தாலும், மஹாத்மாவாக, பக்தியில் உன்னத ஆத்மாவாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.
750415 - ஸ்ரீமத் பாகவதம் 05.05.03 சொற்பொழிவு - ஹைதராபாத்