TA/750417 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
ஆகவே, கேசவனான கிருஷ்ணன், தன்னுடைய எல்லா அவதாரங்களோடும் நிறைந்திருக்கிறார். அவர் வெறுமனே கிருஷ்ணராக மட்டும் இருப்பதில்லை. நாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிப் பேசும்போது, அவருடைய எல்லா அம்சங்களையும், அவதாரங்களையும் சேர்த்தே கருதுகிறோம். அதனால்தான் 'ராமாதி-மூர்த்திஷு கலா' என்று சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு 'கலா' எனப்படுவது, முழுமையான வெளிப்பாடு அல்ல, பகவானின் ஒரு பகுதி வெளிப்பாடு என்று குறிக்கிறது. முழுமையான வெளிப்பாடு என்பது 'பூர்ணம்' என்று அழைக்கப்படும். ஆக, கிருஷ்ணரது பல்வேறு அவதாரங்களும் பகவானே. ஆனால் 'கிருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம்' என்பதன் பொருள், பகவானின் பூரணத்துவம் கிருஷ்ணரிடம் மட்டுமே வெளிப்படுகிறது; மற்றவர்களிடம் அல்ல.
750417 - பகவத் கீதை 09.01 சொற்பொழிவு - விருந்தாவனம்