"எனவே அனைவரும் ஒரு பெண்ணின் உடலால் கவரப்படுகிறார்கள். உங்கள் நாட்டில் நான் விளம்பரங்களை பார்த்திருக்கிறேன், "அடிமட்டம் இல்லாமல்", "மேலாடையின்றி..." அதுதான் பௌதிக கவர்ச்சி. இணைப்பின் காரணமாக தான் இந்த பௌதிக உலகில் அனைவரும் இருக்கிறார்கள். மேலும் அதேபோல், பெண்களுக்கு, ஆண்களின் உடல் அழகாக இருக்கிறது. ஆகவே இவ்விதமாக இருவரும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படுகிறார்கள். இதுதான் பௌதிக வாழ்க்கையின் அடிப்படை கொள்கை. யன் மைதுநாதி-க்ருʼஹமேதி-ஸுகம்ʼ ஹி துச்சம் கண்டூயனேன கரயோர் இவ து꞉க-து꞉கம் (SB 7.9.45). அவர்கள் இணைக்கப்படுகிறார். மேலும் பாலியல் வாழ்க்கையால், அவர்கள் அதிகமாக இணைக்கப்படுகிறார்கள், ஆகையினால் அவர்கள் இருவரும் நிரந்தரமாக இந்த பௌதிக உலகில் இருப்பார்கள், மேலும் வேறுபட்ட ஆசைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக அவர்கள் ஒரு உடலில் இருந்து மற்றொன்றுக்கு மாற்றப்படுகிறார்கள்."
|