TA/750513d காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் பெர்த் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ப்ரவ்ருʼத்தி என்றால் புலன் இன்பம், மேலும் நிவ்ருʼத்தி என்றால் சுய மறுப்பு. எனவே நாம் இவ்வாறு கூறும் போது அதாவது "நீங்கள் சட்டவிரோத உடலுறவு மேற்கொள்ளக் கூடாது," மேலும் அவர்களுடைய விருப்பம் சட்டவிரோத உடலுறவு, எனவே அது புரட்சிகரமானது. அவர்கள் ஜடச் செயல்களில் ஈடுபடுபவர்கள். அவர்களுக்கு உடலுறவு இன்பம் இயன்றவரை சிறந்த திறனுடன் தேவைப்படுகிறது—ஓரினச் சேர்க்கை, இந்த உடலுறவு, அந்த உடலுறவு, நிர்வாணமான நடனம்—அனைத்தும் உடலுறவை சார்ந்தது. ப்ரவ்ருʼத்தி மேலும் நாம் கூறுகிறோம், "இதை நிறுத்துங்கள்," நிவ்ருʼத்தி. அவர்களுக்கு அது பிடிக்கவில்லை, ஏனென்றால் அவர்கள் ஆஸுர. ப்ரவ்ருʼத்தி ஜகத். அவர்களுக்கு இது அத்தியாவசியமானது என்று தெரியவில்லை. அவர்களுக்கு அது தெரியவில்லை. இது அத்தியாவசியமானது. தபஸா ப்ரஹ்மசர்யேன (SB 6.1.13). தபஸ்ய என்றால் ப்ரஹ்மசர்ய. ஸ்வமிகள், என்று அழைக்கப்படுபவர்கள், அவர்களே இந்த யோகா என்று அழைக்கப்படுவதற்கு பயிற்சி செய்ய வருகிறார்கள்..., ஆனால் அவர்களே உடலுறவுக்கு அடிமையாகிறார்கள். இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது."
750513 - காலை உலா - பெர்த்