"நாங்கள் கிருஷ்ண உணர்வை கொடுக்கிறோம். அது தான் அன்பானது, உண்மையான அன்பு. நாங்கள் அவனுக்கு நித்தியமான வாழ்க்கை அளிக்கின்றோம், நித்தியமான பேரின்பம். நாங்கள் அவனை விரும்பாவிட்டால், எதற்காக நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும். போதகர் மக்களை நேசிக்க வேண்டும். இல்லையென்றால் அவன் ஏன் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்? அவன் தனக்காக வீட்டில் தானே செய்துக் கொள்ளலாம். அவன் எதற்காக இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? நான் நேசிக்கவில்லை என்றால் எதற்காக என்பதாவது வயதில் இங்கே வரவேண்டும்? எனவே ஒரு போதகரைவிட யார் அதிகமாக நேசிக்க முடியும்? அவர் விலங்குகளைக் கூட நேசிக்கிறார். ஆகையினால் அவர்கள் போதிக்கிறார்கள், "மாமிசம் எடுத்துக் கொள்ளாதீர்கள்." அவர்கள் விலங்குகளை நேசிக்கிறார்களா, போக்கிரிகள்? அவர்கள் சாப்பிடுகிறார்கள், மேலும் அவர்கள் நாட்டை நேசிக்கிறார்கள், அவ்வள்வுதான். எவரும் நேசிக்கவில்லை. அது வெறுமனே புலன்நுகர்வு. யாராவது நேசித்தால், அவன் கிருஷ்ண பக்தன், அவ்வளவுதான். அனைவரும் போக்கிரிகள். அவர்கள் தன் சொந்த புலன்நுகர்வை நோக்கி செல்கிறார்கள், மேலும் அவர்கள் ஒரு பலகை போடுவார்கள், "நான் அனைவரையும் நேசிக்கிறேன்."இதுதான் அவர்களுடைய வேலை. மேலும் முட்டாள்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள், "ஓ, இந்த மனிதன் மிகவும் மனிதநேயம் உள்ளவன்."அவன் எந்த மனிதனையும் நேசிக்கவில்லை. அவன் புலன்களை மட்டும்தான் நேசிக்கிறான். அவ்வளவுதான்."
|