TA/750520c காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மெல்போர்ன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள், அவர்கள் புரிந்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும். அவர்கள் உன்னை அழைக்கவில்லை," நான் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து வாருங்கள்," ஆனால் அது உங்களுடைய வேலை, நீங்கள் சென்று அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் அதாவது "நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இந்த முறையை ஏற்றுக் கொள்ளுங்கள்" அதுதான் ஸ்ரீ கிருஷ்ணரால் மிக விரைவில் அங்கீகரிக்கப்படும் முறை. இல்லையென்றால், நீங்கள் நினைத்தால், "அவர்கள் புரிந்துக் கொள்வதில்லை. அங்கே போவதால் என்ன பயன்? என்னை தூங்கவிடுங்கள்," அது நன்றல்ல. அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை; இருப்பினும், நீங்கள் போக வேண்டும். பிறகு கிருஷ்ணர் அதை ஏற்றுக் கொள்வார் அதாவது "அவன் எனக்காக மிக கடினமாக உழைக்கிறான்." அவன் வெற்றியடையவில்லை என்றால் பரவாயில்லை. அது முக்கியமில்லை. ஆனால் கிருஷ்ணருக்காக நீங்கள் கடினமாக வேலை செய்கிறீர்கள். அது குறிப்பிடப்படுகிறது. எனவே நம் வேலை கிருஷ்ணரால் அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதே. ஒருவர் மாற்றப்பட்டார அல்லது மாற்றப்படவில்லை, அது நம் வேலை அல்ல. நாம் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும். ஆனால், கிருஷ்ணர் பார்க்க வேண்டும் அதாவது நான் கிருஷ்ணருக்கு சேவை செய்கிறேன் என்று. அவ்வளவுதான். அதுதான் தேவைப்படுகிறது. நீங்கள் பல மனிதர்களை அணுகினீர்கள்; ஒருவரும் கிருஷ்ண பக்தராகவில்லை என்று நீங்களே தீர்ப்பளிக்க கூடது. அது முக்கியமல்ல. ஆனல் நீங்கள் அங்கே சென்று இருக்கிறீர்கள்."
750520 - காலை உலா - மெல்போர்ன்