TA/Prabhupada 0019 - நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பதையெல்லாம், மற்றவர்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டும்



Jagannatha Deities Installation Srimad-Bhagavatam 1.2.13-14 -- San Francisco, March 23, 1967

ஒருவேளை நீங்கள் என்னைப் புரிந்துகொள்ள நினைத்தால் அல்லது என்னைப் பற்றி ஏதாவது தெரிந்துகொள்ள விரும்பினால், நண்பர்கள் யாரையாவது கேட்டு தெரிந்துகொள்ளலாம், "ஓ, சுவாமிஜி எப்படி இருக்கிறார் ?" அவர் ஏதாவது சொல்லலாம், மற்றவர்கள், ஏதாவது சொல்லலாம். ஆனால் நானே நேரடியாக உங்களிடம் என்னைப் பற்றி விவரிக்கும்பொழுது, "இதுதான் என்னுடைய நிலைமை, நான் இப்படித்தான்," என்றால் அது தான் நிறைவானது. அது தான் நிறைவானது. ஆக பூரணமான பரமபுருஷரான முழுமுதற்கடவுளைப் பற்றி அறியவேண்டுமானால், ஊகித்து அறியவோ, தியானத்தால் அறியவோ முடியாது. அது சாத்தியம் இல்லை, ஏனென்றால் உங்களுடைய புலன்கள் குறைபாடுகள் நிறைந்தவை. பிறகு இதற்கு வழி என்ன? அவரிடமிருந்தே நேரடியாக கேட்டு அறியவேண்டும். அதனால் அவர் கருணையுடன் பகவத் கீதையைக் கூற வந்திருக்கிறார். ஷ்ரோதவ்ய: "முயற்சி செய்து கேளுங்கள்." ஷ்ரோதவ்ய: மற்றும் கீர்திதவ்யஸ் ச. (ஸ்ரீமத் பாகவதம் 2.1.5) இந்த கிருஷ்ண பக்தி வகுப்பில் வெறும் கேட்டுக்கொண்டே இருந்து, பிறகு வெளியே சென்றதும் மறந்துவிட்டால், ஓ, அது நல்லதல்ல. அது உங்களுக்கு முன்னேற உதவாது. பிறகு என்ன உதவும்? கீர்திதவ்யஷ் ச: "நீங்கள் கேட்டது அனைத்தையும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்." அது தான் நிறைவான வழிமுறை. ஆகையால் தான் நாங்கள் "பகவத் தரிசனம்" (Back to Godhead) என்ற இதழை தொடங்கியுள்ளோம். மாணவர்களுக்கு அனுமதியுண்டு, அவர்கள் கேட்டதையெல்லாம், நன்றாக சிந்தித்து, அதை கட்டுரையாக எழுதலாம். கீர்திதவ்யஷ் ச. வெறும் கேட்பது மட்டுமல்ல. "ஓ, நான் பல கோடி வருடங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன்; ஆனால் இன்னமும் எனக்கு விளங்கவில்லையே." - ஏனென்றால் நீங்கள் உச்சரிப்பதில்லை, கேட்டதை மீண்டும், மீண்டும் ஒப்பிப்பதில்லை. மீண்டும் மீண்டும் ஒப்பிக்கவேண்டும். கீர்திதவ்யஸ் ச. ஷ்ரோதவ்ய: கீர்திதவ்யஷ் ச த்யேய:. அவரைப் பற்றி சிந்திக்காவிட்டால், உங்களால் எப்படி எழுதவோ அல்லது பேசவோ முடியும்? நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி கேட்கிறீர்கள், நீங்கள் நினைக்கவும் வேண்டும், அப்பொழுதுதான் உங்களால் பேசமுடியும். இல்லையென்றால் முடியாது. ஆக ஷ்ரோதவ்ய: கீர்திதவ்யஷ் ச த்யேய: உடன் பூஜ்யஸ் ச. மேலும் வழிபாடு செய்யவேண்டும். எனவே நமக்கு கோயிலில் வழிபட அர்ச்ச மூலவர் தேவைபடுகிறார். நாம் நினைக்க வேண்டும், பேசவேண்டும், கேட்க வேண்டும், வழிபாடு செய்ய வேண்டும், பூஜ்யஷ் ச... பிறகு, அவ்வப்பொழுதாகவா ? இல்லை நித்யதா: அனுதினமும், வழக்கமான முறையில். நித்யதா, இதுதான் செய்முறை. இந்த முறையைப் பின்பற்றுபவர் யாரும் பூரண உண்மையை புரிந்துகொள்ளலாம். இதுவே ஸ்ரீமத்-பாகவதத்தின் தெளிவான அறிக்கை.