TA/Prabhupada 0026 - நீங்கள் முதன் முதலில் கிருஷ்ணர் இருக்கும் பேரண்டத்திற்கு இடமாற்றப்படுவீர்கள்



Morning Walk -- October 5, 1975, Mauritius

இந்திய நபர்: சுவாமிஜி, சொல்லப்படுவது என்னவென்றால், நாம் செய்யும் செயல்களின்படி... நம் செயல்கள் நாம் எடுக்கும் பிறவியை தீர்மானிக்கின்றன. ஆக நாம் எதாவது செய்திருந்தால் நாம் எடுக்கும் பிறப்பு இறைவனின் சட்டத்திற்கு ஏற்ப அமையும்.

பிரபுபாதர்: நீங்கள் பிறவி எடுத்தே ஆகவேண்டும். அது நிச்சயம். உங்களால் அதை தவிர்க்க முடியாது. ஆனால் உங்கள் கர்மாவை பொறுத்து நீங்கள் பிறவி எடுக்க வேண்டியிருக்கும்.

இந்திய நபர்: ஆனால் அப்படியென்றால்... அப்படியென்றால் கடன்பட்டதை திரும்பி செலுத்தியே ஆகவேண்டும். அப்படி, தானே? அப்பொழுது நீங்கள் நினைக்கிறீர்களா ...

பிரபுபாதர்: ஒருவேளை உங்களுடைய இந்த சட்டை கிழிந்து போனால், நீங்கள் ஓரு புதிய சட்டையை வாங்க வேண்டியிருக்கும். இப்போ, உங்களிடம் இருக்கும் செல்வத்தை ஏற்றது போன்ற சட்டையை தான் உங்களால் வாங்க முடியும். உங்களிடம் நிறைய செல்வம் இருந்தால் நல்ல சட்டை கிடைக்கும். உங்களிடம் பணம் குறைவாக இருந்தால் மட்டமான சட்டை கிடைக்கும். அவ்வளவுதான்.

இந்திய நபர்: நான் சொல்ல வந்தது என்னவென்றால், சுவாமிஜி, அந்த நரகமும் இந்த உலகிலேயே தான் உள்ளது, ஏனென்றால் நம் கடனை வேறு எங்கு செலுத்த முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பாவம், நம் பாவக்கடன். இதை எங்கே கழிக்க முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? நரகத்தில், அது...

பிரபுபாதர்: நரகம் என்பது தண்டனைக்குரிய இடம்.

இந்திய நபர்: ஆகையினால் அது இந்த பூமியிலேயே இருக்கிறது. பிரபுபாதர்: ஏன் பூமி?

இந்திய நபர்: இந்த பூலோகத்தில், இல்லையா?

பிரபுபாதர்: இல்லை. அது...

இந்திய நபர்: வேறு எந்த கிரகங்களிலாவது இருக்கமுடியுமா?

பிரபுபாதர்: ...பற்பல கோடி மைல் தூரத்தில். இந்திய நபர்: ஆனால் அது இருக்கும் இடம்... நரகம் மட்டும் ஒரு இடத்தில் உள்ளதா அல்லது ஒரு ப்ரதா(?) மற்றொரு இடத்தில் உள்ளதா? தாங்கள் அவ்வாறு நினைக்கிறீர்களா, சுவாமிஜி?

பிரபுபாதர்: ஆம். ஆம். பல கிரகங்கள் இருக்கின்றன.

இந்திய நபர்: இந்த உலகிலேயே கஷ்டப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

பிரபுபாதர்: ஆக அவர்கள் முதலில் அந்த நரக லோகத்தில் பயிற்ச்சி பெறுகிறார்கள் பிறகு அதே தரம் வாய்ந்த வாழ்க்கையில் கஷ்டப்படுவதற்கு இங்கு வருகிறார்கள்.

இந்திய நபர்: நம் ஆத்மா நம் உடலை விட்டுச் சென்றதும் அது நரகத்திற்க்குப் போகிறதா அல்லது... பிரபுபாதர்: நரகமான கிரகம்.

இந்திய நபர்: ... பகுதியிலா அல்லது அது உடனே பிறப்பு எடுக்கிறதா?

பிரபுபாதர்: ஆம். பாவம் புரிந்தவர்கள் உடனே பிறவி எடுப்பதிலை. எவ்வாறு துன்பப்படுவது என்று முதலில் அவர்களுக்கு நரகத்தில் பயிற்ச்சி அளிக்கப்படும். அதற்கு பழக்கப்பட்டப் பிறகு அவர்கள் பிறவி எடுத்து துன்பப்படுகிறார்கள். நீங்கள் ஐ. ஏ. எஸ். தேர்ச்சி பெறுவது போல் தான். அதன்பின் நீங்கள் நீதிபதிக்கு உதவியாளர் ஆவீர்கள். நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். அதற்கு பிறகு தான் உங்களுக்கு நீதிபதி பதவி கிடைக்கும். நீங்கள் இறைவனின் திருவீட்டிற்கு திரும்பிச் செல்ல தகுதியுள்ளவராக இருந்தாலும், முதன் முதலில், தற்சமயம் கிருஷ்ணர் இருக்கும் உலகிற்கு அழைத்துச் செல்ல படுவீர்கள், அங்கு நீங்கள் அந்த வாழ்க்கையை பழக்கப்படுத்திக் கொள்வீர்கள். அதன்பின் தான் நீங்கள் உண்மையான விருந்தாவனத்துக்குச் செல்வீர்கள்.

இந்திய நபர்: ஆக நம் இறப்பிற்குப் பிறகு... பிரபுபாதர்: கடவுளின் ஒவ்வொரு ஏற்பாடும் பூரணத்துவம் பெற்றது. பூர்ணம். பூர்ணம் அதஹ பூர்ணம் இதம் பூர்ணாத் பூர்ணம்... (ஈஸோபனிசதம், பிராத்தனை). எது இறைவனால் படைக்கப்பட்டதொ, அது பூரணமானது.