TA/Prabhupada 0039 - நவீன காலத்து தலைவர்கள் ஒரு கைப்பொம்மை போன்றவர்கள்



Lecture on SB 1.10.3-4 -- Tehran, March 13, 1975

ஆகையால் யூதிஷ்டிர போன்ற சிறந்த அரசன், அவர் நிலத்தை மட்டுமல்லாமல், கடலையும், பூகோளத்தின் அனைத்துப் பகுதிகளையும் ஆட்சி புரிய முடியும். இதுதான் முழுமையான சிறந்த கொள்கை. (வாசிக்கிறார்:) "நவீன ஆங்கில சட்டப்படி, அல்லது முதலில் பிறந்தவர்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்டம், மஹாராஜா யுதிஷ்டிரர் பூகோளத்தையும் கடலையும் ஆட்சி செய்த காலத்திலும் மேலோங்கி இருந்தது." அப்படியென்றால் அனைத்து கொள்கிரகமும், கடல்களும் சேர்ந்து. (வாசிக்கிறார்:) "அந்த காலத்தில் ஹஸ்தினாபுர அரசர்கள், தற்பொழுது புது டெல்லியின் ஒரு பகுதி, உலகம் முழுவதும் கடல் உட்பட அனைத்திற்கும் சக்ரவர்த்தியாக இருந்தார்கள், மஹாராஜா பரீட்சித்து, மஹாராஜா யுதிஷ்டிரரின் பேரன் ஆண்ட காலம்வரை. அவருடைய இளைய சகோதரர்கள் மாநிலத்தின் மந்திரிகளாகவும் படைத்தளபதிகளாகவும் பொறுப்பேற்றார்கள், அத்துடன் அரசனின் சகோதரர்களுக்குள் முழு ஒத்துலைப்பும் பூரணமான மத அடிப்படை நிறைந்த வாழ்க்கையும் இருந்தது. மஹாராஜா யுதிஷ்டிரர் இலட்சியம் நிறைந்த அரசன் அல்லது பகவன் ஸ்ரீ கிருஷ்ணரின் பிரதிநிதி ஆவார்." அரசன் கிருஷ்ணரின் பிரதிநிதியாக இருக்க வேண்டும். "பூமியில் இராஜியத்தை ஆட்சி செய்வதுடன் தேவலோகத்தில் பிரதிநிதி அரசன் இந்திரனுக்கு நிகரானவர். இந்திரா, சந்திரா, சூரியா, வருணா, வாயு, இன்னும் சில தேவர்கள் பிரபஞ்சததில் பல கோள்களின் பிரதிநிதி அரசர்கள் ஆவார்கள். அதுபோல் மஹாராஜா யுதிஷ்டிரரும் அவர்களுள் ஒருவர், பூமியின் ராஜியத்தை ஆட்சி செய்கிறார். மஹாராஜா யுதிஷ்டிரர் எடுத்துக்காட்டான ஞான உபதேசம் பெறாத நவீன குடியரசு அரசியல்வாதி அல்ல. மஹாராஜா யுதிஷ்டிரர் பீஷ்மதேவிடமும் குற்றமற்ற இறைவனிடமும் அறிவுரைப் பெற்றவர், ஆகையினால் அவர் எல்லாவற்றிலும் முழுமையான அறிவை பூரணத்துவமாக பெற்றவர். நவீன காலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மாநில செயற்குழுத் தலைவர் ஒரு கைப்பாவை ஏனென்றால் அவருக்கு அரசத்தந்திர அதிகாரம் இல்லை. அவர் மஹாராஜா யுதிஷ்டிரர் போல் ஞான உபதேசம் பெற்றாலும், அரசியலமைப்பின் நிலைப்பாட்டால் அவரால் தன் சொந்த திறமையால் எதுவும் செயலாக்க முடியாது, ஆகையினால், இந்த பூமியில் எங்கும் பல மாநிலங்கள் போர் புரிந்துக் கொண்டிருக்கின்றன ஏனென்றால் கருத்தியல் வேற்றுமை அல்லது சுயநல நோக்கத்தினால். ஆனால் மஹாராஜா யுதிஷ்டிரர் போன்றவர்களுக்கு தனக்கென்று சொந்த கருத்தியல் இல்லை. அவர் தவறுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட இறைவனுக்கும் அவருடைய பிரதிநிதிகளின் அறிவுரைகளையும் பின்பற்றினார், அத்துடன் அதிகாரம் பெற்ற முகவர், பீஷ்மதேவ். சாஸ்திரத்தின் விதிமுறைப்படி ஒருவர் உயர்ந்த அதிகாரம் பெற்ற ஒருவரையே பின்பற்ற வேண்டும் அத்துடன் குற்றமற்ற இறைவனையும் எந்த சுய நோக்கத்துடனும் உருவாக்கப்பட்ட கருத்தியல் இல்லாமல் பின்பற்ற வேண்டும். ஆகையினால், மஹாராஜா யுதிஷ்டிரர் இந்த உலகம் முழுவதும், கடல்கள் உட்பட ஆட்சி செய்ய சாத்தியமானது, ஏனென்றால் கொள்கை குற்றமற்றதாகவும் அத்துடன் உலகளவில் யாவருக்கும் ஏற்றதாகவும் இருந்தது. ஒரு உலக மாநிலம் என்னும் கருத்தை உருவாக்குதல், நாம் குற்றமற்ற அதிகாரியை பின்பற்றுவதன் மூலம்தான் நிறைவு பெறும். ஒரு குறைபாடுள்ள மனிதனால் கடந்தக் காலக் கதை தொகுப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்க முடியாது. பூரணமும் குற்றமற்றவருமான ஒருவரால் மட்டும்தான் இந்த திட்டத்தை உருவாக்க முடியும் அது சகல இடத்திற்கும் பொருத்தமானதாகவும் உலகில் இருக்கும் அனைவராலும் பின்பற்றக் கூடியதாகவும் இருக்கும். இது ஆட்சி செய்யும் ஒருவர், தவிர ஆள்சார்பற்ற அரசாங்கமல்ல. ஒரு நபர் பூரணமாக இருந்தால், அரசாங்கமும் பூரணமாக இருக்கும். ஒரு நபர் முட்டாளாக இருந்தால், அரசாங்கம் முட்டாள்களின் சொர்க்கமாகும். அதுதான் இயற்கையின் நியதி. குறைபாடுள்ள அரசர்கள் அல்லது நிர்வாக அதிகாரிகளைப் பற்றி பல கதைகள் உள்ளன. ஆகையினால், நிர்வாக அதிகாரிகள் மஹாராஜா யுதிஷ்டிரர் போல் நன்றாக பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும், அத்துடன் அவர் முழு ஏகாதிபதி அதிகாரம் பெற்று உலகம் முழுவதும் ஆட்சி புரிபவராக இருக்க வேண்டும். உலக மாநிலத்தின் கருத்தை உருவாக்க மஹாராஜா யுதிஷ்டிரர் போன்ற பூரணத்துவம் பெற்ற ஒருவரின் ஆட்சிமுறையில்தான் வடிவெடுக்க முடியம். அந்த காலத்தில் உலகமக்கள் சந்தோஷமாக இருந்தார்கள் ஏனென்றால் ஆட்சி செலுத்த மஹாராஜா யுதிஷ்டிரர் போன்ற அரசர்கள் இருந்தார்கள்." இந்த அரசனும் மஹாராஜா யுதிஷ்டிரரை பின்பற்றி நல்ல உதாரணம் காட்டட்டும் அதாவது ஒரு அரசன் எவ்வாறு பூரணமான மாநிலம் நிறுவலாம் என்று. சாஸ்திரத்தில் இதற்கான விதிமுறைகள் உள்ளன, அவர் அதை பின்பற்றினால் அவரால் செய்ய முடியும். அதற்கான அதிகாரம் அவரிடம் உள்ளது. அப்பொழுது அவர் மிகுந்தப் பூரணமான அரசனாக இருந்தார், பிறகு, கிருஷ்ணரின் பிரதிநிதி, ஆகையினால், காமம் வவர்ஷ பர்ஜன்யஹ (ஸ்ரீ.பா.1.10.4). பர்ஜன்யஹ என்றால் மழை. ஆகையால் மழை வாழ்க்கையின் எல்லா தேவைகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகையினால் கிருஷ்ணர் பகவத்கீதையில் சொல்கிறார், அன்னாத்பவந்தி பூதானி பர்ஜன்யாத அன்னஸம்பவஹ (ப.கீ.3.14). நீங்கள் மக்களை மகிழ்விக்க விரும்பினால், இருவரும் மனிதனும், மிருகங்களும் அங்கே மிருகங்களும் இருந்தன. இந்த மாநில நிர்வாகிகள் அயோக்கியர்கள், சில நேரம் மனிதர்களுக்கான சலுகையை காட்சிப் பொருளாக்குவார்கள் ஆனால் மிருகங்களுக்குப் பயனில்லை. ஏன்? ஏன் இந்த அநீதி? அவர்களும் இந்த மண்ணில் பிறந்தார்கள். அவர்களும் உயிர்வாழிகள். அவர்கள் மிருகங்களாக இருக்கலாம். அவர்களுக்கு அறிவாற்றல் கிடையாது. அவர்களுக்கு அறிவாற்றல் உண்டு, மனிதர்கள் அளவுக்கு திறமை இல்லை, அதற்காக அந்த விலங்குகளை அடிக்கடி கொல்வதற்காக தனி கட்டடம் கட்டபட வேண்டுமா? இது நீதியா? அதுமட்டுமல்ல, அப்படி யாராயினும், மாநிலத்திற்கு வந்தால், அரசன் அவர்களுக்கு புகலிடம் கொடுக்க வேண்டும். ஏன் இந்த பாராபட்சம்? யராகிலும் புகலிடம் கேட்டு, "ஐயா நான் உங்கள் மாநிலத்தில் வசிக்க வேண்டும்," என்றால் அவருக்கு எல்லா வசதிகளும் கொடுக்கப்பட வேண்டும். ஏன் இந்த, "இல்லை, இல்லை, நீங்கள் வர முடியாது. நீங்கள் அமெரிக்கர். நீங்கள் இந்தியர். நீங்கள் இது"? இல்லை. இன்னும் பல பொருள் இருக்கின்றன. உண்மையிலேயே அவர்கள் நெறிமுறைகளை பின்பற்றினால், வேத நெறிமுறைகள், பிறகு பொருத்தமான அரசன் ஒரு நல்ல தலைவர் ஆவார். அத்துடன் இயற்கை உதவி செய்யும். ஆகையினால்தான் மஹாராஜா யுதிஷ்டிரர் ஆட்சியில் சொல்லப்பட்டது, காமம் வவர்ஷ பர்ஜன்யஹ ஸர்வ-காம-துகா மஹீ (ஸ்ரீ.பா.1.10.4). மஹீ, இந்த பூமி. உங்களுக்குத் தேவையான சகலமும் இந்த பூமியிலிருந்து கிடைக்கிறது. அவை வானத்தில் இருந்து விழவில்லை. ஆம், வானத்தில் இருந்து மழையாக விழுகிறது. ஆனால் அவர்களுக்கு அந்த விஞ்ஞானம் தெரியாது, அதாவது எப்படி பொருள்கள் பூமியிலிருந்து பலவிதமான ஏற்பாட்டின்படி வருகின்றன என்பது. சில நிபந்தனையின் காரணமாக மழை விழுகிறது அத்துடன் நட்சத்திரங்களுக்குரிய தாக்கம். பிறகு பல பொருள்கள் உற்பத்தியாகின்றன, விலை உயர்ந்த கற்கள், முத்துக்கள். இந்த பொருள்கள் எவ்வாறு வருகின்றது என்று அவர்களுக்குத் தெரியாது. ஆகையினால், அரசர் தெய்வ பக்தி உள்ளவர் என்றால் அவருக்கு உதவி செய்ய, இயற்கையும் ஒத்துழைக்கின்றது. அத்துடன் அரசன், அரசாங்கம் தெய்வபக்தியற்றவராக இருந்தால், பிறகு இயற்கையும் ஒத்துழைக்காது.