TA/Prabhupada 0041 - நிகழ்கால வாழ்க்கை, அது அமங்களம் நிறைந்தது



Lecture on BG 9.1 -- Melbourne, June 29, 1974

பூரண ஞானம். நீங்கள் பகவத் கீதையை படித்தால் பூரண ஞானம் பெறுவீர்கள். ஆகையால் பகவான் என்ன கூறுகிறார்? இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யனுஸுயவே (ப.கீ.9.1) பகவன், கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு கற்பித்துக்கொண்டிருக்கிறார். ஆகையால் ஒன்பதாவது அத்தியாயத்தில் அவர் கூறுகிறார், "எனது அன்புக்குரிய அர்ஜுனா, நான் உன்னிடத்தில் மிகவும் அந்தரங்கமான ஞானத்தைப் பற்றி உரையாடுகிறேன்," குஹ்யதமம். தமம் என்றால் மிக உயர்ந்த. ஐயமில்லாத, ஒப்பிட்டு, மிக உயர்ந்த. சமஸ்கிருதத்தில், தாரா-தாமா. தாரா என்றால் ஒப்பிடுதல், தாமா என்றால் மிக உயர்ந்த. ஆகையால் இங்கு பகவான் கூறுகிறார், பூரணத்துவமான முழுமுதற் கடவுள் கூறுகிறார், இதம் து தே குஹ்யதமம் இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாமே: "இப்போழுது நான் உன்னிடத்தில் மிகவும் அந்தரங்கமான ஞானத்தைப் பற்றி கூறுகிறேன்." ஞானம் விக்ஞானஸஹிதம். இந்த ஞானத்தில் அறிவு நிறைந்துள்ளது, கற்பனை அல்ல. ஞானம் விக்ஞான-ஸஹிதம். என்றால் "விஞ்ஞானம்," "நடைமுறையில் செய்துகாட்டல்." ஆகையால் ஞானம் விக்ஞான-ஸஹிதம் யக்ஞாத்வா. இந்த ஞானத்தை நீ கற்றால், யக்ஞாத்வா மோக்ஷ்யஸே' சு பாத். அசுபாத். மோக்ஷ்யஸே என்றால் உனக்கு மோட்சம் கிடைக்கும், அசுபாத் என்றால் "அமங்கலம்." அமங்கலம். ஆகையால் நம்முடைய நிகழ்கால வாழ்க்கை, தற்சமயத்தில், நிகழ்காலம் என்றால் நாம் இந்த ஜட உடலில் இருக்கும்வரை, அது அமங்கலம் மிக நிறைந்தது. மோக்ஷ்யஸே 'சு பாத். 'சு பாத் என்றால் அமங்கலம்.