TA/Prabhupada 0043 - பகவத்-கீதை கிருஷ்ணர் பக்தி இயக்கத்தின் அடிப்படை கொள்கையாகும்



Lecture on BG 7.1 -- Sydney, February 16, 1973

Prabhupāda:

யோகம் யுஞ்ஜன்மதாஸ்ரய: அஸம்சயம் ஸமக்ரம் மாம் யதா ஞாஸ்யஸி தச்ருணு (ப.கீ.7.1). இது பகவத் கீதையிலிருந்த ஒரு செய்யுள், எவ்வாறு கிருஷ்ணர் உணர்வை மேம்படுத்துவது, அல்லது இறைவன் உணர்வு. பகவத் கீதை, உங்களில் பலபேர் இந்த புத்தகத்தின் பெயரை கேள்விபட்டு இருப்பீர்கள். உலகமெங்கிலும் இது பரவலாக படிக்கப்படும் ஞானம் நிறைந்த புத்தகம். நடைமுறையில் பகவத் கீதையின் பதிப்புகள் பல, அனைத்து நாடுகளிலும் இருக்கின்றன. ஆகையால் பகவத் கீதை நம்முடைய கிருஷ்ணர் பக்தி இயக்கத்தின் அடிப்படை கொள்கையாகும். எதை நாம் கிருஷ்ணர் உணர்வு என்று பிரகடனம் செய்கிறோமோ, அது பகவத் கீதை ஒன்று மட்டுமே. நாம் எதையும் உருவாக்கி இருக்கிறோம் என்பதல்ல. கிருஷ்ணர் உணர்வு படைப்பு தொடங்கிய காலத்திலிருந்து இருந்து வருகிறது, ஆனால் ஆகக் குறைந்தது இறுதியாக கடந்த ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன், கிருஷ்ணர் இந்த பூகோளத்தில் தோன்றிய பொழுது, அவர் தாமே கிருஷ்ணர் உணர்வை போதனை செய்தார், அத்துடன் அந்த போதனைகளை இங்கேயே விட்டுச் சென்றார், இதுதான் பகவத் கீதை. துரதிஷ்டமாக, இந்த பகவத் கீதை மற்றவர்களால் பல விதத்திலும் தகாத முறையில், கல்விமான்களாலும் சுவாமிமார்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிராகாரவாதி இனத்தவர், அல்லது நாத்திகர் இனத்தவர்கள், அவர்கள் பகவத் கீதையை தங்கள் சொந்த விருப்பத்திற்கு இனங்க மொழி பெயர்த்தார்கள். 1966-ல் நான் அமெரிக்காவில் இருந்தபொழுது, ஒரு அமெரிக்க மாது என்னிடம் வினவினார் பகவத் கீதையின் ஒரு ஆங்கில பதிப்பை தமக்கு பரிந்துரைச் செய்தால் அதை தாம் படிக்க இயலும் என்று. ஆனால் சத்தியமாக என்னால் எதையும் பரிந்துரைக்க முடியவில்லை, அவர்களுடைய விசித்திரமான விளக்கங்களின் காரணமாக. அது எனக்கு பகவத் கீதை உண்மையுருவில், எழுத உத்வேகம் கொடுத்தது. அத்துடன் இன்றைய பதிப்பு, பகவத் கீதை உண்மையுருவில், தற்பொழுது உலகிலேயே மிகப் பெரிய பதிப்பாளர் மெக்மில்லன் நிறுவனத்தால் பிரசுரிக்கப்படுகிறது. அத்துடன் நாம் மிகச் சிறப்பாக செய்கிறோம். நாம் 1968-ல், இந்த பகவத் கீதை உண்மையுருவில் சிறிய பதிப்பாக பிரசுரித்தோம். அது மிகச் சிறப்பாக விற்பனை ஆனது. மெக்மில்லன் நிறுவனத்தின் வர்த்தக மேலாளர் அறிக்கை விடுத்தார் அதாவது நம் புத்தகங்கள் மேலும் மேலும் விற்பனை ஆகிறது; மற்றவைகள் குறைந்துக் கொண்டிருக்கிறது. பிறகு சமீபத்தில், 1972-ல் நாங்கள் இந்த பகவத் கீதை உண்மையுருவில், முழுமையான பதிப்பாக பிரசுரித்தோம். அத்துடன் மெக்மில்லன் நிறுவனம் ஐம்பதாயிரம் பிரதிகளை முன்கூட்டியே பிரசுரித்தது, ஆனால் அவை மூன்றே மாதத்தில் முடிந்துவிட்டன. அதனால் அவர்கள் இரண்டாவது பதிப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்.