TA/Prabhupada 0056 - சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்ட பன்னிரண்டு அதிகாரிகள்



Lecture on SB 7.6.1 -- Madras, January 2, 1976

ஸ்ரீ-ப்ரஹ்ராத உவாச கெளமார ஆசரேத் ப்ராக்ஞோ தர்மான் பாகவதான் இஹ துர்லபம் மானுஷம் ஜன்ம தத் அபி அத்ருவம் அர்ததம் (ஸ்ரீ.பா.7.6.1) இவர்தான் பிரகலாத மஹாராஜா. அவர் கிருஷ்ணர் இயக்கத்தின் ஓர் அதிகாரியாவார். சாஸ்திரத்தில் பன்னிரண்டு அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்: ஸ்வயம்பூர் நாரத: சம்பு: குமார: கபிலோ மனு: ப்ரஹ்லாதோ ஜனகோ பீஷ்மோ பலிர் வையாஸகிர் வயம் (ஸ்ரீ.பா.6.3.20) இதுவே தர்மத்தின் அதிகாரிகளைப் பற்றிய யமராஜாவின் அறிக்கை. தர்மா என்றால் பாகவத-தர்மா. நேற்று இரவு நான் விவரித்துவிட்டேன் என்று நினைக்கிறேன், தர்மா என்றால் பாகவதா. தர்மம் து ஸாக்ஷாத் பகவத் - ப்ரணீதம் (ஸ்ரீ.பா.6.3.19). உதாரணத்திற்கு நம் திரு பிரதம நீதிபதி சட்டத்தில் தீர்ப்பு அளிக்கிறார், அதனால் சட்டம் பொது மனிதனாலோ அல்லது எவ்வகை தொழில் அதிபராலோ உற்பத்தி செய்ய முடியாது, இல்லை. சட்டம் மாநிலத்தால், அரசாங்கத்தால் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். வேறு யாராலும் உற்பத்தி செய்ய முடியாது. அது சரி வராது, உயர் நீதி மன்றத்தில், யாராவது மன்றாடினால், "சார், நான் என் சொந்த சட்டம் வைத்திருக்கிறேன்," திரு நீதிபதி ஏற்றுக் கொள்ளமாட்டார். ஆகையால் அதேபோல், நீங்கள் தர்மத்தை உற்பத்தி செய்ய முடியாது. நீங்கள் பெரிய மனிதராக இருந்தாலும், பிரதம நீதிபதி கூட, அவர் சட்டம் ஏற்படுத்த முடியாது. சட்டம் மாநிலத்தால் கொடுக்கப்பட்டது. அதேபோல், தர்ம என்றால் பாகவத-தர்ம. அத்துடன் மற்ற தவறான தர்மங்கள், அவை தர்ம அல்ல. அவை ஏற்றுக் கொள்ளப்படாது. மிகச் சரியாக அதே வழியில், உங்கள் வீட்டில் உற்பத்தியாகும் சட்டமும் ஏற்றுக் கொள்ளப்படாது. ஆகையினால் தர்மம் து ஸாக்ஷாத் பகவத் - ப்ரணீதம் (ஸ்ரீ.பா.6.3.19). பகவத் - ப்ரணீதம் தர்ம என்றால் என்ன? அது பகவத் கிதையில் விவரிக்கப்பட்டுள்ளது, நமக்கும் அனைவருக்கும் தெரியும். அவர் வந்தார், கிருஷ்ணர் வந்தார். அவருடைய இயக்கம் தர்ம-ஸம்ஸ்த்தாபனார்த்தாய, சமய கொள்கைகளை நிறுவவும், அல்லது மறுபடியும் நிறுவவும் வந்தார். தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத. யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத (ப.கீ.4.7). ஆகையால் சில நேரங்களில் அங்கே க்லானிர் இருக்கிறது, தர்மத்தின் கொள்கைகளை நீக்குவதில் சில முரண்பாடுகள் தோன்றுகிறது. அந்த நேரத்தில், கிருஷ்ணர் தோன்றுகிறார். பரித்ரானாய ஸா தூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம் (ப.கீ.4.8). யுகே யுகே ஸம்பவாமி. ஆகையால் இந்த தர்ம, கிருஷ்ணர் இந்த தவறான தர்மாக்களை, சீரமைக்க வர வில்லை: இந்து தர்ம, முஸ்லிம் தர்ம, கிறிஸ்து தர்ம, புத்தருடைய தர்ம. இல்லை. ஸ்ரீமத் பாகவதத்தை பொறுத்தவரை அதில் சொல்லப்படுவது, தர்ம: ப்ரோஜ்ஹித கைதவோ (ஸ்ரீ.பா.1.1.2). ஏமாற்றும் செய்முறை போன்று இருக்கும் தர்ம, அது போன்ற தர்ம, ப்ரோஜ்ஹித ஆகும் ப்ரக்ரிஸ்தா-ரூபனா உஜ்ஜித, என்றால் அது தூக்கியெறியப்பட்டது, அல்லது வெளியே உதைக்கப்பட்டது. ஆகையால் உண்மையான தர்ம பாகவத-தர்ம, உண்மையான தர்ம. ஆகையினால் பிரகலாத மஹாராஜா கூறினார், கௌமார ஆசரேத் ப்ராக்ஞோ தர்மான் பாகவதான் இஹ (ஸ்ரீ.பா.7.6.1). உண்மையிலேயே தர்ம என்றால் இறைவன், இறைவனுடனான நம் உறவு, அத்துடன் அந்த உறவுக்கு எற்ப நாம் நடந்துக் கொள்வதால் நம் வாழ்க்கையின் இறுதி நோக்கத்தை அடையலாம். அதுதான் தர்ம.