TA/Prabhupada 0059 - உங்களுடைய உண்மையான தொழிலை மறந்துவிடாதீர்கள்



Lecture on BG 2.14 -- Mexico, February 14, 1975

பிறகு கேள்வி என்னவென்றால் "நான் நித்தியமானால், ஏன் இங்கே பல துயர் நிறைந்த வாழ்க்கை நிலை? அத்துடன் நான் ஏன் மரணத்திற்கு தள்ளப்படுகிறேன்?" ஆகையால் இது உண்மையிலேயே அறிவுடைய கேள்வி, அதாவது "நான் நித்தியமானால், பிறகு நான் ஏன் இறப்பு, பிறப்பு, முதுமை, வியாதி நிறைந்த இந்த ஜட உடலில் இருக்க வேண்டும்?" ஆகையினால் கிருஷ்ணர் அறிவூட்டுகிறார் அதாவது இந்த வெறுப்பான வாழ்க்கை நிலையின் காரணம் இந்த ஜட உடலே. கர்மீகளாக இருப்பவர்கள், என்றால் புலன்களைத் திருப்திபடுத்துவதில் ஈடுபட்டிருப்பார்கள் அவர்கள் கர்மீஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். கர்மீகள் எதிர்காலத்தைப் பற்றி கவலை கொள்ளமாட்டார்கள்; அவர்களுக்கு வெறுமனே உடனடியான வாழ்க்கை வசதி வேண்டும். உதாரணத்திற்கு பெற்றோரின் கவனிப்பற்ற ஒரு குழந்தை, நாள் முழுவதும் விளையாடுகிறது அத்துடன் எதிர்கால வாழ்க்கையை பற்றி கவலையில்லை, கல்வி எதுவும் கற்பதில்லை. ஆனால் மனித வாழ்க்கையில், நாம் உண்மையில் அறிவாளியாக இருந்தால், இறப்பு, பிறப்பு, முதுமை, வியாதி இல்லாத அந்த வாழ்க்கை அல்லது உடல் எங்கு எவ்வாறு பெறுவது என்று முயற்சி செய்ய வேண்டும். ஆகையால் இந்த கிருஷ்ணர் பக்தி இயக்கம் என்றால் மக்களை அந்த நோக்கத்திற்காக போதிப்பது. இப்பொழுது ஒருவர் சொல்லலாம் "நான் வெறுமனே கிருஷ்ணர் உணர்வில் அர்ப்பணித்தால், பிறகு என்னுடைய பௌதிக தேவைகள் எவ்வாறு அளிக்கப்படும்?" ஆகையால் இதன் பதில் பகவத் கீதையில் இருக்கிறது, அதாவது கிருஷ்ணர் உணர்வில் ஈடுபட்டிருக்கும் எவருக்கும், அவருடைய வாழ்க்கைத் தேவைகளை கிருஷ்ணர் பார்த்துக் கொள்வார். அனைவருடைய வாழ்க்கைத் தேவைகளையும் கிருஷ்ணர் பராமரிக்கிறார். எகொ யொ பஹூநாம் விடதாதி காமான்: "அதாவது நித்தியமான ஒருவர் அனைத்து உயிர்வாழிகளின் தேவைகளையும் பராமரிக்கிறார். ஆகையால் வீடுபெரு பெற்று, முழுமுதர்கடவுளை அடைய முயற்சித்துக் கொண்டிருக்கும் பக்தருக்கு, எந்த பஞ்சமும் இருக்காது. இது நிச்சயிக்கப்பட்டது. கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார், தேஷாம் ஸதத-யுக்தானாம் யோக-ஷெமாம் வஹாமிஹம்: (ப.கீ.10.10) "எனக்கு சேவை செய்வதில் எப்பொழுதும் ஈடுபட்டிருக்கும் ஒரு பக்தர், அவருடைய வாழ்க்கையின் தேவைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை, நான் பார்த்துக் கொள்வேன்." ஒரு நடைமுறைக்குரிய உதாரணம் யாதெனில் இந்த கிருஷ்ணர் பக்தி இயக்கத்தில் எங்களுக்கு நூறு மையங்கள் உள்ளன, ஒவ்வொரு ஆலயத்திலும், குறைந்தது இருபத்தைந்து முதல், இருநூற்றி ஐம்பது பக்தர்கள் வரை வாழ்கிறார்கள். ஆனால் எங்களுக்கு நிலையான வருமானம் இல்லை, அத்துடன் அனைத்து கிளைகளிலும் நாங்கள் ஒரு மாதத்திற்கு எண்பதாயிரம் டாலர் செலவு செய்கிறோம். ஆனால் கிருஷ்ணரின் அருளால் எங்களுக்கு பற்றாகுறை இல்லை, அனைத்தும் வழங்கப்படுகிறது. மக்கள் சில நேரத்தில் வியப்படைகிறார்கள் அதாவது "இந்த மக்கள் வேலை செய்யவில்லை, எந்த தொழிலும் செய்யவில்லை, வெறுமனே ஹரே கிருஷ்ணா ஜபிக்கிறார்கள். அவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள்?" ஆகையால் அது கேள்வியல்ல. பூனைகளும் நாய்களும் இறைவனின் கருணையால் வாழும் பொழுது, பக்தர்கள் இறைவனின் கருணையால் மிகவும் வசதியாக வாழலாம். அது போன்று கேள்வி இல்லை, ஆனால் யாராவது நினைத்தால் அதாவது "நான் கிருஷ்ணர் உணர்வை ஏற்றுக் கொண்டேன், ஆனால் நான் பலவற்றுக்கும் கஷ்டப்படுகிறேன்," அவர்களுக்கும் அல்லது நாம் எல்லோருக்கும் இதுதான் அறிவுரை மாத்ராஸ்பர்ஷாஸ்த்து கௌந்தேய சீதோஷ்ண ஸுகதுக்கதா: (ப.கீ.2.14). "இந்த வலியும் மகிழ்ச்சியும் குளிர்காலமும் கோடை காலமும் போல்தான்." குளிர் காலத்தில் தண்ணீர் வேதனை தரும், மற்றும் கோடை காலத்தில் இதமாக இருக்கும். ஆகையால் தண்ணீரின் நிலை என்ன? இதமானதா அல்லது வேதனை கொடுப்பதா? அது இதமானதும் அல்ல, வேதனை தருவதுமல்ல, ஆனால் சில பருவங்களில், தொடுவதனால் தோலுக்கு வேதனையாகவும் அல்லது இதமாகவும் தோன்றும். இதுபோன்ற வேதனையும் இதமும் இங்கு விவரிக்கப்பட்டுள்ளது: "அவை வரும் பின் போகும். அவை நிரந்தரமற்றது." ஆகம அபாயிந: அனிதியா: என்றால் "அவை வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும்; ஆகையினால் அவை நிரந்தரமற்றது." ஆகையினால் கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார், தாம்ஸ் திதிஷாஸ்வ பாரத: "சும்மா சகித்துக் கொள்ளுங்கள்." ஆனால் உங்கள் உண்மையான தொழிலை மறந்துவிடாதீர்கள், கிருஷ்ணர் உணர்வு. இந்த ஜட வேதனையும் சுகத்தையும் பற்றி கவலைபடாதீர்கள்.