TA/Prabhupada 0076 - கிருஷ்ணரை எங்கும் காணுங்கள்



Ratha-yatra -- San Francisco, June 27, 1971

நம் கண்களில் இறைவன் மீதுள்ள அன்பினால் கண்ணீர் வந்தால், நாம் அவரை எங்கும் காணலாம். அதுதான் சாஸ்திராவின் கட்டளை. இறைவனிடம் காட்டும் பக்தியை அபிவிருத்தி செய்வதன் மூலம், நம் பார்க்கும் சக்தியை மேம்படுத்த வேண்டும். ப்ரிமான்ஜன-சுரித பக்தி-விலோசநேன (ப.ச.5.38). ஒருவர் போதிய அளவிற்கு கிருஷ்ணர் உணர்வில் உயர்ந்தபின், அவரால் இறைவனை ஒவ்வொரு கணமும் தன் மனத்திலும் மேலும் அனைத்து இடங்களிலும், போகும் இடங்கள் எங்கும் காணலாம். ஆகையால் இந்த கிருஷ்ணர் பக்தி இயக்கம் ஒரு முயற்சி கிருஷ்ணரை எவ்வாறு காணலாம், இறைவனை எவ்வாறு காணலாம் என்று கற்பிக்க. நாம் பயிற்சி பெற்றால் கிருஷ்ணரை காணலாம். எவ்வாறு என்றால் கிருஷ்ணர் கூறுகிறார், ரஸோ' ஹம்பஸு கெளந்தேய (ப.கீ.7.8) கிருஷ்ணர் கூறுகிறார், "தண்ணீரின் சுவை நானே." நாம் அனைவரும், நாம் தினமும் தண்ணீர் அருந்துகிறோம். ஒரு முறை மட்டுமல்ல, இரண்டு, மூன்று அல்லது அதற்கும் மேல். நாம் தண்ணீரை அருந்தியவுடன், நீரின் சுவை கிருஷ்ணர் தான் என்று நாம் சிந்தித்தவுடன், உடனடியாக நாம் கிருஷ்ணர் உணர்வடைகிறோம். கிருஷ்ணர் உணர்வுடையவராவது மிகவும் கடினமான வேளையல்ல. வெறுமனே நாம் அதை பயிற்சி செய்ய வேண்டும். எவ்வாறு என்றால் இதோ ஒரு உதாரணம் கிருஷ்ணர் உணர்வை எவ்வாறு பயிற்சி செய்வது என்று. எப்பொழுதெல்லாம் நீங்கள் தண்ணீர் அருந்துகிறீர்களோ, நீங்கள் நிறைவு கண்டதும், உங்கள் தாகம் தணிந்துவிடும், உடனே நீங்கள் நினைப்பீர்கள் இந்த தாகம், இதை தணிக்கும் சக்தி கிருஷ்ணரே. ப்ரபாஸ்மி ஸாஸி சூர்யயோ:. கிருஷ்ணர் கூறுகிறார், "நானே சூரியவொளி, நானே சந்திரவொளி." ஆகையால் பகல் வேளையில், நாம் எல்லோரும் சூரியவொளியை பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் சூரியவொளியை பார்த்த உடனடியாக, கிருஷ்ணரை ஞாபகம் கொள்வீர்கள், "கிருஷ்ணர் இங்கு இருக்கிறார்." நீங்கள் இரவில் சந்திரவோளியை பார்த்த உடனடியாக, கிருஷ்ணரை ஞாபகம் கொள்வீர்கள், "கிருஷ்ணர் இங்கு இருக்கிறார்." இவ்வாறாக, நீங்கள் பயிற்சி செய்தால், அங்கே பல உதாரணங்கள் உள்ளன, பகவத் கீதையில் பல உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, ஏழாம் அத்தியாயத்தில், நீங்கள் அவற்றை கவனமாக படித்தால், கிருஷ்ணர் உணர்வை எவ்வாறு பயிற்சி செய்வதென்று புரியும். பிறகு அந்த நேரத்தில், நீங்கள் முதிர்ச்சியடைந்து கிருஷ்ணர் மேல் நேசம் கொண்டால், நீங்கள் கிருஷ்ணரை எங்கும் காண்பீர்கள். கிருஷ்ணரை காண யாரும் உங்களுக்கு உதவி செய்ய தேவையில்லை, ஆனால் கிருஷ்ணர் உங்கள் முன் தோற்றமளிப்பார், உங்களுடைய பக்தியினால், உங்களுடைய அன்பினால். சிவொன்முக்ஹெ ஹி ஜிவாதோ ஸ்வயம் ஏவ ஸ்புரதி அடஹ (பி.ச.1.2.234). கிருஷ்ணர், ஒருவர் சேவை செய்யும் மனநிலையில் இருக்கும் பொழுது, "நான் கிருஷ்ணரின், அல்லது இறைவனின், நித்தியமான சேவகன்" என்பதை புரிந்துக் கொண்டால், பிறகு கிருஷ்ணர் தன்னை பார்ப்பதிற்கு உங்களுக்கு உதவி புரிவார். அது பகவத் கீதையில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தேஷாம் ஸததயுக்தானாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம் ததாமி புத்தி யோகம் தம் யேன மாமுபயாந்தி தே (ப.கீ.10.10).