TA/Prabhupada 0090 - முறையான நிர்வாகம் - இல்லையேல் எவ்வாறு இஸ்கான் செயல்படும்?



Morning Walk -- December 5, 1973, Los Angeles

பிரபுபத: அனைவரும் கிருஷ்ணாவின் குடும்பத்தை சேர்ந்தவர்களே. ஆனால் கிருஷ்ணருக்காக அவர் என்ன செய்தார் எனபத்தை நாம் பார்க்க வேண்டும். அனைவரும் இந்த நாட்டின் குடிமகனை போல. ஏன் ஒருவருக்கு உயர்ந்த பதவியும் பெயரும் வழங்க படுகிறது? பிரபுபத: ஏன்? ஏனென்றால், அவர் அங்கீகரிக்க பட்டுள்ளார். சூடமா: சரி பிரபுபத: ஒருவர் கண்டிப்பாக சேவை செய்ய வேண்டும். வெறுமனே எதுவும் செய்யாமல்" நான் கிருஷ்ணரூடைய குடும்பத்தை சேர்ந்தவன்" என்று எண்ணி கொண்டிருந்தால் மட்டும் இருப்பது சரி ஆகாது. சுடாமா: அது நல்லது அல்ல. பிரபுபத: அது நல்லது அல்ல. அதாவது, சீக்கிரமே மீண்டும் கிருஷ்னாவை மறந்து போவான். மீண்டும் மறந்து போவான். சுடாமா: உண்மையில், மற்றுமொரு மூல பொருள் மிகவும் சக்தி வாய்ந்தது. இங்கு இருக்கும் மக்கள், ஏனெனில், கிருஷ்ணாவின் குடும்பத்தின் அங்கமாக இருந்தாலும், அவர்கள் மறந்து போய் விட்டதால், நாமும் அவர்களின் மறதி காரணமாக உந்தப்படுவோம். பிரபுபத: ஆமாம். மறதி என்பது மாயா. சுடாமா: ஆமாம். பிரபுபத: மாயா என்பது ஒன்றுமில்லை. அது மறதி. அவ்வளவே. அதற்கு இருப்பு இல்லை. மறதி, அது நிலைத்து இருப்பது இல்லை. ஆனால், நீண்ட காலமாக இருக்கிறது. அது மிகவும் பிரச்சனைக்கு உரியது. சூடாம: என்னிடம் சில பக்தர்கள் தங்கள் சில நேரங்களில் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்று வினவி உள்ளனர். மனதளவில் மகிழ்ச்சியாக இல்லை என்ற போதிலும், அவர்கள் கிருஷ்ண பக்தியை நிச்சயம் தொடர வேண்டும். ஒருவர் மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் தொடரவேண்டும் என்று நான் சொல்லுவேன் பிரபுபத: ஆனால் நீங்கள் உதாரணத்தை காட்ட வேண்டும். நீங்கள் வேறு வழியிலான உதாரணத்தை காட்டினால், அவர்கள் எப்படி உங்களை பின் தொடருவார்கள்? உதாரணம் கட்டளையை விட உயர்ந்தது. நீங்கள் ஏன் வெளியே வசிக்கிறீர்கள்? சுடாமா: சரி, நான்.... பிரபுபத: (இடைவெளி)... சற்று காலத்திற்கு முன்பு எனது உடல் நிலை மிக மோசமாக இருந்தது, இந்த இடத்தை விட்டு நான் கிளம்ப வேண்டியதாக ஆகி விட்டது. அது நான் இந்த சங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற பொருள் ஆகாது. நான் இந்தியாவிற்கு சென்று குணம் அடைந்தேன். லண்டன் சென்றேன். அது சரியாகிவிட்டது. சில நேரங்களில் உடல் குறைபாடு இருக்கலாம். ஆனால் நாம் இந்த சமுதாயத்தை விட்டு விட வேண்டும் என்று அர்த்தம் ஆகாது. என்னுடைய உடல் நிலை இந்த இடத்திற்கு ஒத்து வரவில்லை என்றால், நான் போக வேண்டும். எனக்கு நூற்று கணக்கான மையங்கள் உள்ளது. உங்கள் உடல் நிலைமை சீராக நீங்கள் இந்த பிரபஞ்சத்தை விட்டே போகவேண்டும் என்பது இல்லை. நீங்கள் இந்த பிரபஞ்சதினுள் தான் இருக்க வேண்டும். பின்பு ஏன் நீங்கள் இந்த சங்கத்தை விட்டு வெளியே போக வேண்டும்? (இடைவெளி)... ஸ்ரீ நரொத்தம தாஸ் தாகூர். நாம் பக்தர்களோடு வசிக்க வேண்டும். நான் ஏன் என் குடும்பத்தை விட்டு வந்தேன்? ஏனென்றால், அவர்கள் பக்தர்கள் அல்லர். ஆகவே நான் வந்துவிட்டேன்... இல்லையெனில், என்னுடைய வயோதிக காலத்தில், நான் வசதியாக இருந்து இருக்கலாம். இல்லை. நாம் பக்தர்கள் அல்லாதவர்களோடு வசிக்க கூடாது. குடும்ப உறுப்பினர்களாக அல்லது யாராக இருந்தாலும். மஹாராஜா விபிஷினாரை போல, ஏனெனில், அவருடைய சகோதரர் ஒரு பக்தன் அல்ல. அவர் அவனிடம் இருந்து வெளியேறினார். வெளியேறினார். ராமசந்திராவிடம் வந்து சேர்ந்தார். உங்களிலுக்கு தெரியுமா? சுடாமா: தெரியும் ஹீருதயனந்த: பிரபுபத, சந்னியாசிகள் தனியாக வாழ வேண்டும் என்று சொல்ல பட்டுள்ளது. அதாவது, பக்தர்களோடு மட்டும். பிரபுபத: யார்..! சன்யாசிகள் தனியாக வாழ வேண்டும் என்று எங்கு சொல்ல பட்டுள்ளது? ஹீருதயனந்த: அதாவது, உங்களுடைய புத்தகங்களில்சில நேரங்களில் பிரபுபத : என்னது? ஹீருதயனந்த: உங்களுடைய புத்தகங்களில் சில இடங்களில். அதனுடைய அர்த்தம் பக்தர்களோடு மட்டும்? பிரபுபத: பொதுவாக, சன்யாசிகள் தனியாக வசிக்கலாம். ஆனால் சன்யாசின் வேலை உபதேசம் செய்வதே. சுடாமா: அதை நான் ஒருபோதும் நிறுத்த எண்ணியது கிடையாது. பிரபுபத: ம்ம்ம்... சுடாமா: உபதேசிப்பதை நான் ஒருபோதும் நிறுத்த எண்ணியது கிடையாது. பிரபுபத: உபதேசிப்பதை நீங்கள் உற்பத்தி செய்ய முடியாது. உங்களில் குருவின் கட்டளைப்படி, வகுக்கப்பட்ட கொள்கைகளுக்குள் நீங்கள் உபதேசிக்க வேண்டும். உங்களுக்கு ஏற்றார் போல உங்களின் வழியில் நீங்கள் உபதேசம் செய்ய கூடாது. அது முக்கியம். ஒரு வழிகாட்டி இருக்கவேண்டும். அவருடைய வழி காட்டுதலின் பேரில். யாசிய பிரஸ்āத்āத் பகவத்... ஏன் இது சொல்லப்பட்டு உள்ளது? எல்லா இடங்களிலும், அலுவலகத்திலும், ஒரு அதிகாரி. நீங்கள் அவரின் திருப்தி படுத்த வேண்டும். அதுவே வேலை. ஒருவேளை அலுவலகத்தில், ஒரு குழுவிர்கு ஒரு தலைமை அதிகாரி. ஒருவேளை நீங்கள் உங்கள் இஷ்டப்படி வேலை செய்தால், ஆமாம். "என்னுடைய வேலையை நான் செய்கிறேன்" அந்த தலைமை அதிகாரி திருப்தி அடையவில்லை என்றால், அந்தே வேலை சிறப்பானத்தாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அதைப்போலவே, நாமும் எல்லா இடங்களிலும் ஒரு தலைவரை கொண்டுள்ளோம். ஆகவே, நாமும் வேலை செய்ய வேண்டும். அதுவே முறையான செயல். ஒவ்வொருவரும் அவர்களுடைய சொந்த வழியில் வாழ்க்கையை கண்டுபிடிக்க முயன்றால், பின்பு நிறைய முரண்பாடுகள் இருக்கும் சுடாமா: ஆமாம். அது உண்மை. பிரபுபத: நாம் இப்பொழுது உலக நிறுவனத்தில் உள்ளோம். இதில் ஆன்மீக பக்கம் உண்டு. லௌகிக பக்கமும் உள்ளது. அது லௌகிக பக்கம் கிடையாது, அதுவும் ஆன்மீக பக்கம் சார்ந்ததே, அதாவது முறையான நிர்வாகம். அப்படி இல்லை என்றால், அதை எப்படி செய்ய முடியும்? கௌரசந்திர வீட்டை விற்பனை செய்தது போல, அங்கே பணத்தின் சுவடுகளே கிடையாது. என்ன இது? அவர் அவனிடம்/ யாரிடமும் கேட்கவில்லை. அவர் வீட்டை விற்பனை செய்து அதிலிருந்து வந்த அந்த பணம் எங்கே? அதற்கு தடையமே இல்லை.