TA/Prabhupada 0092 - நாம் நம் புலன்களுக்கு கிருஷ்ணருக்கு திருப்தி அளிக்கும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டு



Lecture on BG 2.20-25 -- Seattle, October 14, 1968

இந்த பௌதிக உலகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் இந்த புலன் இன்பத்திற்கு வசப்பட்டு இருக்கிறார்கள். மேம்பட்ட கிரகங்களிலும் சரி அல்லது தாழ்ந்த கிரகங்களிலும் சரி. உதாரணமாக, மிருகங்களின் உலகில், புலன்களை அனுபவிப்பதற்கான உத்வேகம் ஒன்று இருக்கும். மனிதனுக்கும் அது உண்டு. என்ன இந்த மனித இனம்? நாம் நாகரீகமுள்ள இனம், ஆனால் நாம் அடிப்படையில் செய்வது என்ன ? அதே தான். சாப்பிடுவது, தூங்குவது, உடலுறவு கொள்வது. ஒரு நாய் செய்யும் அதே செயல்கள். பௌதிக உலகத்தின் எந்த மூலையிலும், அது மேல்நிலை கிரகங்களாக இருந்தாலும் சரி அல்லது கீழ்நிலை லோகங்களாக இருந்தாலும் சரி, இந்த புலனுகர்ச்சி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஆன்மீக உலகில் மட்டுமே புலனுகர்ச்சி என்பது கிடையாது. அங்கே வெறும் கிருஷ்ணரை திருப்தி படுத்துவதற்கான முயற்சி தான் இருக்கிறது. அது... இங்கே அனைவரும் தங்களது புலன்களை திருப்தி படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் பௌதிக உலகின் நியதி. அதுதான் பௌதிக வாழ்க்கை. நமது சொந்த புலன்களை திருப்தி படுத்த ஆசைப்படும் வரை, அது நமது பௌதிக வாழ்க்கை. மற்றும் கிருஷ்ணரின் புலன்களை திருப்தி படுத்த நாம் நினைத்தவுடன், அதுதான் நமது ஆன்மீக வாழ்க்கை. இது எளிதான ஒரு விஷயம். ஹ்ருஷீகேன ஹ்ருஷீகேஷ-ஸேவனம் (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.170). அதுதான் பக்தி. உங்களிடம் புலன்கள் இருக்கின்றன. அவையை திருப்தி படுத்த வேண்டியிருக்கிறது. புலன்கள். புலன்கள் இருந்தால் அவையை திருப்தி படுத்தி தான் ஆக வேண்டியிருக்கிறது. ஒன்று, நீ தன்னையே திருப்திப்படுத்திக் கொள்ளலாம்... ஆனால் உனக்கு தெரியாது. கிருஷ்ணருடைய புலன்களை திருப்திபடுத்தினால் அவனுடைய புலன்களும் தானாகவே திருப்தி பெறும், என்பது அந்த கட்டுண்ட ஆத்மாவுக்கு தெரியாது. அதே உதாரணம் தான். நீரை வேரில் ஊற்றுவது போல்... அதாவது உடலின் அங்கமான இந்த விரல்கள்... வயிற்றிற்கு உணவு கொடுத்தால், விரல்களும் தானாகவே திருப்தி அடையும். இந்த ரகசியத்தை நாம் கவனிப்பதில்லை. நமது புலன்களை திருப்தி படுத்த முயற்சி செய்தாலே நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று எண்ணுகிறோம். கிருஷ்ண உணர்வு என்றால், உன்னுடைய புலன்களை திருப்தி படுத்த முயலாதே. கிருஷ்ணருடைய புலன்களை திருப்தி படுத்த முயற்சி செய்தால், உன்னுடைய புலன்களும் தானாகவே திருப்தி அடையும். இதுவே கிருஷ்ண உணர்வின் ரகசியம். எதிர்க்கட்சிகாரர்கள் நினைக்கிறார்கள், "அட, நான் ஏன் அவரை திருப்தி படுத்த வேண்டும்? நான் எதற்காக கிருஷ்ணருக்காக இரவும் பகலும் உழைக்கவேண்டும் ? கர்மிகளுக்காக நான் உழைப்பேன்." நீங்கள் இரவும் பகலும் கிருஷ்ணருக்காக உழைப்பதை பார்த்து அவர்களும் அதுபோலவே நினைக்கிறார்கள், "எப்பேர்ப்பட்ட முட்டாள்கள் இவர்கள். நாம்தான் மிக புத்திசாலிகள். நாம் நமது சொந்த புலனுகர்ச்சிக்காக இரவும் பகலும் உழைக்கிறோம், ஏன் அவர்கள் கிருஷ்ணருக்காக உழைக்கிறார்கள்? இதுதான் பௌதிகவாதிக்கும் ஆன்மீகவாதிக்கும் இடையில் உள்ள வித்தியாசம். வெறும் கிருஷ்ணருக்காக, இரவும் பகலும் ஓய்வில்லாமல் உழைப்பதே ஆன்மீகவாதியின் முயற்சிகளின் ஒரே நோக்கம். அதுதான் ஆன்மீக வாழ்க்கை. பௌதிகவாதி என்றாலும் அதே முயற்சி தான், அதாவது எப்பொழுதும் தன் சொந்த புலன்களை திருப்தி படுத்தும் முயற்சி. பௌதிகத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையில் அதுதான் வித்தியாசம். கிருஷ்ணரை மகிழ்விக்கும் வகையில் நமது புலன்களுக்கு பயிற்சி அளிப்பதே இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம். அவ்வளவுதான். கடந்த பற்பல ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான ஜென்மங்களாக, நாம் வெறும் நமது சொந்த புலன்களை மட்டுமே திருப்தி படுத்த முயற்சி செய்திருக்கிறோம். இந்த ஜென்மமாவது கிருஷ்ணரை திருப்தி படுத்துவதற்காக மட்டுமே அர்ப்பணிக்கப்படட்டும். ஒரு வாழ்க்கை. பல ஜென்மங்களாக நாம் நமது சொந்த புலன்களை திருப்தி படுத்த முயற்சி செய்துள்ளோம். இந்த வாழ்க்கையிலாவது, ஒரு ஜென்மத்திலாவது, என்ன நடக்கிறது என்று முயற்சி செய்து பார்ப்போம். ஆக இதில் நமக்கு நஷ்டம் ஏதும் இல்லை. நமது புலன்களை திருப்தி படுத்தாமல் இருப்பதால் நேரும் சிரமத்தை நாம் உணர்ந்தாலும், அதனால் நமக்கு நஷ்டம் ஏதும் இல்லை. கிருஷ்ணருடைய புலன்களை திருப்தி படுத்த முயற்சி செய்யுங்கள்; பிறகு எல்லாம் சரியாக இருக்கும்.