TA/Prabhupada 0095 - நம்முடைய வேலை சரணடைவது



Lecture on BG 4.7 -- Bombay, March 27, 1974

நாம் சரணடைகிறோம், ஆனால் நாம் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை. இதுதான் நம்முடைய வியாதி. மேலும் இந்த நோயை குணப்படுத்துவது தான் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம். இந்த நோயை குணப்படுத்துங்கள். கிருஷ்ணரும் அதற்காகவே வருகிறார். அவர் கூறுகிறார், யதா யதா ஹி தர்மஸ்ய (பகவத் கீதை 4.7). தர்மஸ்ய க்லானி:, அதாவது தர்மத்தை கடைபிடிப்பதில் சீர்குலைவு, அப்படி சீர்குலைவு ஏற்படும் போது, கிருஷ்ணர் கூறுகிறார், ததாத்மானம் ஸ்ருஜாமி அஹம். மேலும் அப்யுத்தானம அதர்மஸ்ய. இங்கே இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. மக்கள் கிருஷ்ணரிடம் சரணடையாமல், பல "கிருஷ்ணர்களை" உருவாக்குகிறார்கள், சரணடைவதற்கு பல அயோக்கியர்கள். அதுதான் அதர்மஸ்ய. தர்மம் என்றால் கிருஷ்ணரிடம் சரணடைவது, ஆனால் கிருஷ்ணரிடம் சரணடைவதற்கு பதிலாக, அவர்கள் பூனை, நாய், இது, அது என பலரிடம் சரணடைகிறார்கள். அதுதான் அதர்மம். கிருஷ்ணர் இங்கு தர்மம் என்கிற பெயரில் இந்து மதம், முஸ்லிம் மதம், அல்லது கிறிஸ்துவ மதம் என்று எல்லாம் ஸ்தாபிக்க வரவில்லை. இல்லை. அவர் உண்மையான தர்மத்தை நிலைநாட்ட வந்தார். உண்மையான தர்மம் என்றால் நாம் கீழ்படிய வேண்டும், அந்த உண்மையான முழுமுதற் நபரிடம் சரணடைய வேண்டும். அதுதான் உண்மையான தர்மம். நாம் சரணடைகிறோம். எல்லோருக்கும் சில கருத்துக்கள் இருக்கும். அவர் அங்கே சரணடைந்திருக்கிறார்கள். அரசியல், சமூக வாழ்க்கை, பொருளாதாரம், மதம் எதுவாக இருந்தாலும் சரி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். மேலும் அந்த கருத்தை மேம்படுத்த ஒரு தலைவனும் இருப்பான். ஆக நம்முடைய கருத்து சரணடைவது. அது உண்மை தான். ஆனால் நமக்கு எங்கே சரணடைவது என்பதே தெரியவில்லை. அதுதான் கஷ்டம். மேலும் அந்த சரணாகதியை தவறான இடத்தில் செலுத்தியதால், தவறாக புரிந்துகொண்டதால், உலகம் முழுவதும் பெரும் குழப்பமான நிலை ஏற்பட்டிருக்கிறது. நாம் ஒரு சரணாகதியை வேறொரு சரணாகதிக்கு மாற்ற முயல்கிறோம். அதாவது "இப்போது காங்கிரஸ் கட்சி வேண்டாம். இப்போது கம்யுனிஸ்ட் கட்சி." இப்படி. மறுபடியும், "போதும் இந்த கம்யுனிஸ்ட் கட்சி. இப்போது இந்த கட்சி, அந்த காட்சி." கட்சியை மாற்றி என்ன பயன்? ஏனென்றால் இந்த கட்சியும் சரி, அந்த கட்சியும் சரி, அவர்கள் கிருஷ்ணரிடம் சரணடைந்தவர்கள் இல்லை. நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும் என்ற முடிவுக்கு வராத வரை, நிம்மதி இருக்கமுடியாது. அதுதான் முக்கியம். வெறும் தீச்சட்டியிலிருந்து தீக்குள் குதிப்பது உங்களை காப்பாற்றாது. எனவே கிருஷ்ணரின் இறுதிகட்ட அறிவுரை என்னவென்றால், ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி... (பகவத் கீதை 18.66). ஆக தர்மத்தின் சீர்குலைவு என்றால்... இதுவும் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஸ வை பும்ஸாம் பரோ தர்ம: . உன்னதமான தர்மம். பரஹ என்றால் உன்னதமான, திவ்யமான. ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே (ஸ்ரீமத் பாகவதம் 1.2.6). நாம் அதோக்ஷஜரிடம் சரணடையும் போது... அதோக்ஷஜ என்றால் புலன்களுக்கு அப்பாற்பட்ட அந்த மீயுயர்ந்தவர், அதாவது கிருஷ்ணர். கிருஷ்ணரின் மற்றொரு பெயர் அதோக்ஷஜ. அஹைதுகி அப்ரதிஹதா. அஹைதுகி என்றால் எந்த காரணமும் இல்லாமல். "கிருஷ்ணர் அப்பேர்பட்டவர், ஆகையினால் நான் சரணடைகிறேன்," அப்படி கிடையாது. இல்லை. எந்த காரணமும் இல்லாமல். அஹைதுகி அப்ரதிஹதா. மேலும் அதை தடுத்து நிறுத்த முடியாது. யாராலும் நிறுத்த முடியாது. உங்களுக்கு சரணடைய விருப்பம் இருந்தால், அதற்கு தடை ஏதும் இல்லை. நீங்கள் எந்த நிலையிலும் செய்யலாம். நீங்கள் செய்யலாம். அஹைதுகி அப்ரதிஹதா யயாத்மா ஸுப்ரஸீததி. பிறகு உங்கள் ஆன்மா, உங்கள் மனம், உங்கள் உடல் அனைத்தும் திருப்தி அடையும். இதுதான் செயல்முறை.