TA/Prabhupada 0100 - நாம் நித்தியமாக கிருஷ்ணருடன் தொடர்புடையவர்கள்



Lecture on SB 6.1.8 -- New York, July 22, 1971

ஆகையால் நாம் நித்தியமாக கிருஷ்ணருடன் தொடர்புடையவர்கள். தற்சமயம் அது வெறுமனே மறந்து போய்விட்டது, அது அடக்கிவைக்கப்பட்டுள்ளது. ஆகையினால் கிருஷ்ணருடன் நமக்கு எந்த உறவுமில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது உண்மையல்ல. ஏனென்றால் நாம் கிருஷ்ணரின் அங்க உறுப்புகள், அந்த உறவு நித்தியமானது. நாம் வெறுமனே அதை மீண்டும் நினைவிற்கு கொண்டு வர வேண்டும். அதுதான் கிருஷ்ணர் உணர்வு. கிருஷ்ணர் உணர்வு என்றால்-, நாம் தற்சமயம் வேறுபட்ட உணர்வில் இருக்கிறோம். நான் ஒரு இந்தியன் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். யாரோ ஒருவர் நினைத்துக் கொண்டிருக்கிறார், "நான் ஒரு அமெரிக்கன்." யாரோ ஒருவர் நினைத்துக் கொண்டிருக்கிறார், "நான் இது, நான் அது." ஆனால் உண்மையான சிந்தனை "நான் கிருஷ்ணருடையவன்" என்று இருக்க வேண்டும். அதுதான் கிருஷ்ணர் உணர்வு. "நான் கிருஷ்ணருடையவன்." மேலும் கிருஷ்ணர் உணர்வு உறவில், கிருஷ்ணர் அனைவருக்கும் உரியவர், ஆகையினால் நானும் அனைவருக்கும் உரியவராகிறேன். சும்மா புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இந்தியாவில், முறை எவ்வாறு என்றால், ஒரு பெண், ஆடவன் ஒருவனை திருமணம் செய்துக் கொண்டால், உங்கள் நாட்டிலும் கூட, எங்கும், ஒரே முறை. எவ்வாறு என்றால் ஆடவனின் மருமகன் அந்த பெண்ணை "அத்தை" என்றழைப்பான். அவள் எவ்வாறு இப்பொழுது அத்தையானால்? ஏனென்றால், அவள் கணவருடன் கொண்ட உறவினால். திருமணத்திற்கு முன், அவள் அத்தையல்ல, ஆனால் அவள் தன் கணவனுடன் உறவு கொண்ட உடனேயே, கணவனின் மருமகன் அவளுக்கும் மருமகனாகிறார். இந்த உதாரணத்தை சும்மா புரிந்துக்கொள்ள முயலுங்கள். அதேபோல், நாம் நம்முடைய உறவை மீண்டும் நிலைப்படுத்திக் கொண்டால், அல்லது கிருஷ்ணருடன் நம்முடைய மூலமான உறவை நிலைப்படுத்தி, மேலும் கிருஷ்ணர் அனைவருக்கும் உரியவர், ஆகையினால் நாமும் அனைவருக்கும் உரியவராவோம். அதுதான் உண்மையான உலகளாவிய அன்பு. மையப் புள்ளியில் இருப்பவரின் உறவை நீங்கள் நிலைப்படுத்தாமல், செயற்கையான, உலகளாவிய அன்பு என்று அழைக்கப்படுவதை நிலைநிறுத்த முடியாது. எவ்வாறு என்றால் நீங்கள் அமெரிக்கர்கள். ஏன்? ஏனென்றால் நீங்கள் இந்த நிலத்தில் பிறந்தவர்கள். ஆகையால் மற்றொரு அமெரிக்கர் உங்கள் நாட்டின் ஒரு உறுப்பினர், ஆனால் நீங்கள் வேறு ஒன்றாக மாறினால், பிறகு உங்களுக்கு மற்றொரு அமெரிக்கருடன் உறவில்லாமல் போய்விடும். ஆகையால் கிருஷ்ணருடனான நம் உறவை மீண்டும் நிலைப்படுத்த வேண்டும். பிறகு உலகளாவிய சகோதரத்துவம் என்ற கேள்வி, நீதி, அமைதி, வளமை சேர்ந்துவிடும். இல்லையெனில், நடுநாயகம் தவறிப் போக அங்கே சாத்தியமில்லை. அங்கே எவ்வாறு நீதியும் அமைதியும் ஏற்படும்? அதற்கு சாத்தியமில்லை. ஆகையினால் பகவத்-கீதையில் அமைதிக்கான சூத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான சூத்திரம் யாதெனில், கிருஷ்ணர் ஒருவரே அனுபவிப்பாளர் என்பதை ஒருவர் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். எவ்வாறு என்றால், கிருஷ்ணரே நம்முடைய இந்த கோயிலின் நடுநாயகம். நாங்கள் சமையல் செய்வதென்றால், அது கிருஷ்ணருக்காகவே, எங்கள் சொந்த தேவைக்காக சமைப்பதில்லை. இறுதியில், நாங்கள் அந்த பிரசாதத்தை உண்டாலும், நாங்கள் சமைக்கும் பொழுது, எங்களுக்காக சமைக்கிறோம் என்று நாங்கள் நினைப்பதில்லை. நாங்கள் கிருஷ்ணருக்காகவே சமைக்கின்றோம். நீங்கள் வெளியே சென்று நிதி திரட்டும் பொழுது, கீர்த்தன குழுவில் இருப்பவர்களுக்கு, தனிபட்ட சொந்த ஆர்வம் இருக்கிறது என்பதல்ல. இல்லை. அவர்கள் நிதி திரட்டுகிறார்கள், அல்லது அவர்கள் இலக்கியங்களை விநியோகம் செய்கிறார்கள், கிருஷ்ணருக்காக, மக்களை கிருஷ்ணர் உணர்வுள்ளவர்களாக மாற்றுவதற்காக. எவ்வளவு சேகரிப்பு கிடைத்தாலும், அதை கிருஷ்ணருக்கு செலவலிக்கிறார்கள். இப்படியாக, இத்தகைய முறையான வாழ்க்கைக்கு நாங்கள் பயிற்சி பெற்ற பின்னர், அனைத்தும் கிருஷ்ணருக்கே, அதுதான் கிருஷ்ணர் உணர்வு. ஒரே மாதிரியானது, நாங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறோமோ, அதை நாங்கள் செய்ய வேண்டும். வெறுமனே நாங்கள் எங்கள் உணர்வை மாற்றிக் கொள்ள வேண்டும், அதாவது, "நான் கிருஷ்ணருக்காக செய்கிறேன், என் தனிப்பட்ட விருப்பத்திற்கல்ல." இப்படியாக, நாம் கிருஷ்ணர் உணர்வை வளர்த்துக் கொண்டால், பிறகு நாம் நம்முடைய மூலமான உணர்விற்கு வந்துவிடுவோம். பிறகு நாம் ஆனந்தமடைவோம். மூலமான உணர்விற்கு வரவில்லையெனில், பிறகு நாம் பல கோணங்களிலும் பைத்தியக்காரர்களாவோம். கிருஷ்ணர் உணர்வில் இல்லாத அனைவரும், பைத்தியக்காரர்களாக கருதப்படுவார்கள், ஏனென்றால் அவர் ஒரு தற்காலிகமான, நிலையற்ற மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார், அது முடிவடைந்துவிடும். ஆனால் நாம், உயிர்வாழிகள் ஆனதால், நாம் நித்தியமானவர்கள். ஆகையால் தற்காலிக வேலை நம் வேலையல்ல. நம்முடைய வேலை நித்தியமானதாக இருக்க வேண்டும், ஏனென்றால் நாம் நித்தியமானவர்கள். மேலும் அந்த நித்தியமான வேலை, கிருஷ்ணருக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதாகும். எவ்வாறு என்றால் இந்த விரல் என் உடலின் ஓர் அங்க உறுப்பாகும், ஆனால் இந்த விரலின் நித்தியமான வேலை இந்த உடலுக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதாகும், அவ்வளவுதான். இங்கு, அதற்கு வேறு எந்த வேலையும் இல்லை. அதுதான் அந்த விரலின் ஆரோக்கியமான நிலை. அதனால் முழு உடலுக்கும் சேவை செய்ய முடியவில்லை என்றால், அது நோய்யுற்ற நிலையாகும். அதேபோல், கிருஷ்ணர் நித்தியமானவர்; நாமும் நித்தியமானவர்கள். நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம (கதா.உ.2.2.13). இவை வேத விதிமுறைகள். நித்தியமான பரமபுருஷர் ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார், மேலும் நாமும் நித்தியமானவர்கள். நாம் பரம நித்தியமானவர்கள் அல்ல; நாம் இரண்டாம் தரமானவர்கள். நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம. அவர் நித்தியமான உயிர்வாழி, நாம் இரண்டாம் தரமான உயிர்வாழிகள். யெகொ பஹூனாம் யோவிடதாதி காமான. அந்த ஒரு உயிர்வாழி, ஒரு நித்தியமானவர், வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் எண்ணற்ற நித்தியமான உயிர்வாழிகளுக்கு அளித்துக் கொண்டிருக்கிறார். யெகொ பஹூனாம், கணக்கற்ற எண்ணிக்கையில் உயிர்வாழிகள். உங்களால் எண்ண முடியாது. பஹூனாம். இதுதான் நம் உறவுமுறை. ஆகையால், அங்க உறுப்புக்களான நாம் கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும், மேலும் நாம் இரண்டாம் தரமானவர்கள். அவர் நமக்கு தேவையானவைகளை அளிக்கிறார். அவர் நித்தியமான தந்தையாவார். இந்த வாழ்க்கை சாதாரணமான வாழ்க்கை மேலும் முக்தி பெறும் வாழ்க்கை. கிருஷ்ணர் உணர்வுக்கு அப்பால்பட்ட வேறு எந்த வாழ்க்கையும், அது பாவம் நிறைந்த வாழ்க்கை.