TA/Prabhupada 0116 - உங்கள் விலைமதிப்புள்ள வாழ்க்கையை வினாக்காதீர்கள்



Lecture with Allen Ginsberg at Ohio State University -- Columbus, May 12, 1969

அங்கே ஆன்மா இருக்கிறது, மேலும் இந்த உடல் ஆன்மாவின் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த ஆன்மா ஒரு உடலிலிருந்து மற்றொன்றுக்கு இடம்பெயர்ந்து செல்கிறது. அதை பரிணாமம் என்று கூறுகிறோம். அந்த பரிணாம செயல்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது, 8,400,000 இனத்தின் வாழ்க்கையில், நீர்வாழிகள், பறவைகள், மிருகங்கள், தாவரங்கள், இன்னும் பலவித இன வாழிகள். இப்பொழுது நமக்கு வளர்ந்து வரும் உணர்வு, மனித வாழ்விலான வாழ்க்கை இருக்கிறது. நாம் அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அதுதான் நம்முடைய கிருஷ்ண பக்தி இயக்கம். நாம் வெறுமனே மக்களுக்கு அறிவு புகட்டுகிறோம், "உங்கள் விலைமதிப்புள்ள மனித வடிவான வாழ்க்கையை வினாக்காதீர்கள், இந்த வாய்ப்பை தவறவிட்டால், நீங்கள் தற்கொலைக்கு உரியவர்களாவீர்கள்." இதுதான் எங்கள் கொள்கைப் பிரச்சாரம். தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்.

இந்த கிருஷ்ண உணர்வில் சேர்ந்துக் கொள்ளுங்கள், அந்த செயல்முறை மிகவும் எளிமையானது. யோக முறை அல்லது மெய்யியல், அனுமானிக்கும் முறை போன்ற கடினமான செயல்முறைகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள தேவையில்லை. இந்த யுகத்தில் அது சாத்தியமல்ல. அதாவது அது.., நான் என் சொந்த அனுபவத்திலிருந்து பேசவில்லை, ஆனால் சிறந்த ஆச்சாரியர்களும் வலிமை மிக்க சாதுக்களுடைய அனுபவங்களையும் எடுத்துக் கொண்டு பேசுகிறேன். அவர்கள் கூறுகிறார்கள் அதாவது கலெள நாஸ்தியெவ நாஸ்தியெவ நாஸ்தி ஏவகதிர் அன்யதா. நீங்கள் உங்களையே உணர விரும்பினால், உங்களுடைய மறுபிறவி என்னவென்று அறிய விரும்பினால், பகவான் என்பவர் யார் என்று அறிய விரும்பினால், பகவானுடன் உங்கள் தொடர்பு என்னவென்று அறிய விரும்பினால், இவை அனைத்தும் உங்களுக்கு வெளிப்படுத்தப்படும் - அதுதான் உண்மையான அறிவு - வெறுமனே இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம், ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. இது நடைமுறைக்குரியது. நாங்கள் கட்டணம் எதுவும் கேட்பதில்லை. நாங்கள் உங்களிடம் போய் கூறவில்லை அதாவது "நான் உங்களுக்கு ஏதாவது கொடுப்பேன், ரகசிய மந்திரம், மேலும் ஐம்பது வெள்ளி கட்டணம் என்று." இல்லை. இது அனைவருக்கும் உரிய வாய்ப்பு, தயவுசெய்து இதை ஏற்றுக் கொள்ளுங்கள். இதுதான் எங்கள் வேண்டுகோள். உங்களிடம் மன்றாடுகிறோம், "உங்கள் வாழ்க்கையை நாசமாக்காதீர்கள். தயவுசெய்து இந்த மந்திரத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பிய இடத்தில் ஜெபியுங்கள்." நீங்கள் பின்பற்ற வேண்டிய கடினமான, வேகமான விதிகள் இதற்கு இல்லை. எப்பொழுதெல்லாம், எங்கெல்லாம் நீங்கள் விரும்புகிறீர்களோ, வாழ்க்கையின் எந்த நிலையிலும்..., எவ்வாறு என்றால் நாம் அரைமணி நேரத்திற்கு முன் ஜெபித்தது போல். நீங்கள் பேருவகை அடையும் எந்த நிலையிலும். அதேபோல் நீங்கள் இதை தொடரலாம். இந்த ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜேபியுங்கள். இது உங்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டது. ஆனால் மெய்யியல் வழி ஹரே கிருஷ்ண மந்திரம் என்ன என்பதை அறிய நீங்கள் விரும்பினால், அறிவியல் வழி, தர்க்கவியல் வழி, எங்களிடம் காண்டமாக பல புத்தகங்கள் உள்ளன. நாங்கள் வெறுமனே உணர்ச்சிபூர்வமாக நடனம் ஆடுகிறோம் என்று நினைக்காதீர்கள். இல்லை, எங்களுக்கு பின்னணி இருக்கிறது. ஆகையால் கிருஷ்ண பக்தி இயக்கத்தை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். நான் பிரத்தியேகமாய் உங்கள் நாட்டிற்கு இந்த நல்ல தகவலை உங்களுக்கு வழங்க வந்தேன், என்னென்றால் இதை நீங்கள் ஏற்றுக் கொண்டு, இந்த கிருஷ்ண உணர்வின் ஆன்ம ஞானத்தை புரிந்துக் கொண்டால், உலகின் மற்ற பகுதிகளிலும் பின்பற்றுவார்கள், மேலும் உலகின் தோற்றம் மாற்றமடையும். அதுதான் உண்மை.