TA/Prabhupada 0128 - எனக்கு இறப்பு இல்லை



Press Conference -- July 16, 1975, San Francisco

செய்தியாளர்: ஐக்கிய அமெரிக்காவில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? என்னிடம் இரண்டாயிரம் என்று சொல்லப்பட்டது. தோராயமாக இது சரியா? அதை அவர்கள் கூறலாம்.

ஜெயதீர்த: நன்று, எங்களால் பிரசுரிக்கப்பட்ட கணக்கிடுபடி உலகளவில் உறுப்பினர் பத்தாயிரம் பேர். இதில் எத்தனை பேர் ஐக்கிய அமெரிக்காவில் உள்ளனர் என்பதற்கு இன்னும் சரியாக பிரிக்கப்படவில்லை.

செய்தியாளர்: இந்த இயக்கத்தின் பேரில் நான் ஒரு கதையை ஐந்து வருடங்களுக்கு முன் எழுதினேன் அதன் கணக்கீடுபடி அந்த நேரத்தில் ஐக்கிய அமெரிக்காவில் இரண்டாயிரமாகத்தான் இருந்தது.

பிரபுபாதர்: அது பெருகிக் கொண்டிருக்கிறது.

செய்தியாளர்: அது பெருகிக் கொண்டிருக்கிறதா?

பிரபுபாதர்: ஓ, ஆம். நிச்சயமாக.

ஜெயதீர்த: நான் கூறினேன் அதாவது உலகளவில் கணக்கீடு பத்தாயிரம் பேர் என்று.

செய்தியாளர்: ஆம், நான் புரிந்துக் கொண்டேன். தங்கள் வயது என்னவென்று என்னிடம் கூறலாமா?

ஜெயதீர்த: அவர் தங்கள் வயதை அறிய விரும்புகிறார், ஸ்ரீலா பிரபுபதா.

பிரபுபாதர்: நிச்சயமாக. ஒரு மாதம் கழித்து எனக்கு எண்பது வயதாகிறது.

செய்தியாளர்(2): எண்பது?

பிரபுபாதர்: எண்பது வயது.

செய்தியாளர்: என்ன நடக்கும்....,

பிரபுபாதர்: நான் 1896-ல் பிறந்தேன், இப்போது நீங்கள் கணக்கிடலாம்.

செய்தியாளர்: ஐக்கிய அமெரிக்காவில் இருக்கும் இந்த இயக்கத்திற்கு தங்கள் இறப்பிற்குப் பிறகு என்ன ஆகும்?

பிரபுபாதர்: நான் இறக்கவேமாட்டேன்.

பக்தர்கள்: ஜேய்! ஹரிபோல்! (சிரிப்போலி).

பிரபுபாதர்: நான் என் புத்தகத்தில் வாழ்வேன், மேலும் நீங்கள் அதை பயன்படுத்துவீர்கள்.

செய்தியாளர்: தாங்கள் ஒரு வாரிசுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறீர்களா?

பிரபுபாதர்: ஆம், என் குரு மஹாராஜ் அங்கிருக்கிறார். எங்கே என் குரு மஹாராஜ் புகைப்படம்? நான் நினைக்கிறேன்..., இதோ இங்கே.

செய்தியாளர்: ஹரே கிருஷ்ண இயக்கம் ஏன் சமுதாய எதிர்ப்பு தெரிவிப்பதில் ஈடுபடவில்லை?

பிரபுபாதர்: நாங்கள் தான் சிறந்த சமூக சேவகர்கள். மக்கள் தான் முட்டாள்களும் மேலும் அயோக்கியர்கள். நாங்கள் அவர்களுக்கு பகவான் உணர்வைப் பற்றிய நல்ல சிந்தனையை கற்பித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தான் சிறந்த சமூக சேவகர்கள். நாங்கள் அனைத்து குற்றங்களையும் நிறுத்திவிடுவோம். உங்களுடைய சமூக சேவை என்ன? நாடோடிகளையும் குற்றவாளிகளையும் உருவாக்குவது. அது சமூக சேவையல்ல. சமூக தொண்டு என்றால் ஜனத்தொகை சமாதானமாக, அறிவோடு, திறமையோடு, பகவான் உணர்வோடு, முதல்-ரக மனிதனாக இருக்க வேண்டும். அதுதான் சமூக சேவை. ஆனால் நீங்கள் சில நான்காம்-ரகம், ஐந்தம்-ரகம், பத்தாவது-ரகம் மனிதர்களை உருவாக்கினால் அது என்ன சமூக சேவை? நாங்கள் அதை உருவாக்குகிறோம். சும்மா பாருங்கள். இங்கே இருப்பது முதல்-ரக மனிதன். அவர்களிடம் முறைக்கேடான உடலுறவு, போதைப் பொருள், மாமிசம் உண்பது அல்லது சூதாடுதல் போன்ற எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை. அவர்கள் அனைவரும் இளைஞர்கள். அவர்கள் இந்த பொருள்களுக்கெல்லாம் அடிமையாகவில்லை. இதுதான் சமூக தொண்டு. பக்த தாஸ்: ஸ்ரீலா பிரபுபாத, அவர்கள் ஹரே கிருஷ்ண இயக்கத்தின் அரசியல் விளைவு என்னவாக இருக்கும் எனறு அறிந்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

பிரபுபாதர்: ஹரே கிருஷ்ண இயக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அனைத்தும் நேர்த்தியாகிவிடும். யஸ்யாஸ்தி பக்திர் பகவதி அகிஞ்சனா ஸர்னவர் குணைஸ் தத்ர ஸமாஸதே ஸுரா: (ஸ்ரீமத் பாகவதம் 5.18.12). இந்த கிருஷ்ண உணர்வு பரவினால், பிறகு அனைவரும் பிரகாசிக்கும் வகையில் தகுதி பெறுவார்கள். மேலும் கிருஷ்ண உணர்வின்றி, நாம் இன்று காலையில் கலந்துரையாடிய அந்த கல்விக்கும் எந்த மதிப்பும் இல்லை. அவர்கள் வெறுமனே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாம் பேசிக் கொண்டிருந்த முக்கிய தலைப்பு என்ன? பஹுலாஸ்வ: இன்று காலையில் உளவியல்.

பிரபுபாதர்: இதன் விளைவு யாதெனில் மாணவர்கள் ஏமாற்றத்தினால் கோபுரத்திலிருந்து கீழே விழுகிறார்கள். மேலும் அவர்கள் கண்ணாடியால் பாதுகாக்கப்படுகிறார்கள்.

பஹுலாஸ்வ: பர்க்லி வளாகத்தில் இருந்த மணி கோபுரத்திலிருந்து, 60-களில் இருந்த மாணவர்கள் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்கள். ஆகையால் மாணவர்கள் குதிப்பதை தடுக்க அவர்கள் அந்த கண்ணாடியை போட்டார்கள். ஆகையால் பிரபுபாதா விளக்கிக் கொண்டிருந்தார் அதாவது அது அவர்களுடைய கல்வி முறை, படித்து முடிந்தவுடன் அவர்கள் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும். (சிரிப்பொலி)

பிரபுபாதர்: இது கல்வி அல்ல. வித்யா ததாதி நம்ரதா. கல்வி கற்றவர் என்றால் அவர் பணிவானவர், மென்மையானவர், நிதானமானவர், நிறைந்த அறிவு பெற்றவர், அறிவு நிறைந்த வாழ்க்கையில் நடைமுறை செயல், சகிப்புத் தன்மை, மனக் கட்டுப்பாடு, புலன்களின் கட்டுப்பாடு, அதுதான் கல்வி. இது என்ன கல்வி?

செய்தியாளர்: நீங்கள் கல்லூரி அமைக்க முயற்சி செய்கிறீர்களா?

பிரபுபாதர்: ஆம், அது என்னுடைய அடுத்த முயற்சி, அதாவது வகைப்படுத்தி அதற்கேற்ப நாங்கள் கல்வி கற்பிக்க வேண்டும். முதல்-ரகம், இரண்டாம்-ரகம், மூன்றாம்-ரகம், நான்காம்-ரகம் வரை. அதற்குப் பிறகு ஐந்தாம்-ரகம், ஆறாம்-ரகம், அது அங்கே தன்னியக்கமாக உள்ளது. ஆகையால் முதல்-ரக மனிதர்கள், குறைந்தபட்சம் சமூகத்தில், இலட்சியம் நிறைந்த ரக மனிதர்கள், இருக்க வேண்டு, மேலும் அவர்கள் தான் மனத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் பயிற்சியை பெறுபவர்கள், புலன்களை கட்டுப்படுத்திக் கொண்டு, மிகவும் தூய்மையாக, உண்மை நிறைந்து, சகிப்புத் தன்மை, எளிமை, நிறைந்த அறிவு, செயல்முறை அறிவு நிறைந்த வாழ்க்கை மேலும், நிறைந்த தெய்வ நம்பிக்கை. இதுதான் முதல்-ரக மனிதன்.