TA/Prabhupada 0130 - கிருஷ்ணர் பல அவதாரங்களில் தோன்றிக் கொண்டு இருக்கின்றார்



Lecture on BG 4.5 -- Bombay, March 25, 1974

கிருஷ்ணர் பல அவதாரங்களில் தோன்றிக் கொண்டு இருக்கின்றார். கிருஷ்ணரின் நிலைப்பாடு என்ன என்பதை சும்மா புரிந்துக் கொள்ள முயலுங்கள். அவர் பரமாத்மாவாக எல்லோருடைய மனதிலும் நிலைப்பெற்று இருக்கிறார். ஈஸ்வர: ஸர்வ-பூதானாம் ஹ்ருத்தேஷே' ர்ஜுன திஷ்டதி (பகவத் கீதை 18.61). மேலும் அவர் எல்லோருக்கும் வழி காட்டிக் கொண்டிருக்கிறார். இன்னும் அங்கே வரையற்ற, எண்ணிக்கையற்ற ஜீவாத்மாக்கள் உள்ளன. ஆகையால் அவர் பல உயிர்வாழிகளுக்கு வேறுபட்ட விதத்திலும் அறிவுரை கொடுக்க வேண்டியிருக்கிறது. அவர் எவ்வாறு ஓய்வின்றி சுறுசுறுப்பாக இருக்கிறார், சும்மா கற்பனை செய்து பாருங்கள். இருப்பினும், அவர் நிலையில் மாற்றமில்லை. கோலோக ஏவ நிவஸத்ய ஹிலாத்ம-பூத: (பிரம்ம சம்ஹிதா 5.37). கோலோக ஏவ நிவஸதி. கிருஷ்ணர் இன்னும் அவருடைய மூலமான இடத்தில் இருக்கிறார், கோலோக விருந்தாவன, மேலும் ஸ்ரீமதி ராதாராணியின் சகவாசத்தில் அவர் ஆனந்தம் கொண்டிருக்கிறார். அந்த வேலை இல்லை...., இது மாயாவாதி தத்துவம் அல்ல. ஏனென்றால் அவர் தன்னைத்தானே பல ஜீவாத்மாக்களின் மனதில் விஸ்தரித்துள்ளார், அதனால் அவருடைய சொந்த இருப்பிடத்தில் அவர் இல்லை என்று அர்த்தமல்ல. இல்லை. அவர் அங்கும் இருக்கிறார். அதுதான் கிருஷ்ணர். பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாஸிஸ்யதே (ஈஸோ பிரார்த்தனை). இது வேத தகவல். ஆயினும்..., இங்கு நமக்கு பௌதிக அனுபவம் உள்ளது. நீங்கள் ஒரு ரூபாய் வைத்திருந்தால், ஒரு அணாவை நீங்கள் எடுத்துவிட்டால், பிறகு அது பதினைந்து அணாக்களாகும். அல்லது நீங்கள் இரண்டு அணாக்களை எடுத்துவிட்டால், அது பதினான்கு அணாக்களாகும். நீங்கள் பதினாறு அணாக்களை எடுத்துவிட்டால், அது பூஜ்ஜியமாகும். ஆனால் கிருஷ்ணர் அவ்வாறில்லை. அவரால் வரையறையற்ற வடிவத்தில் தன்னைத்தானே விஸ்தரிக்க இயலும். இருப்பினும், மூலமான கிருஷ்ணர் அங்கே இருப்பார். அதுதான் கிருஷ்ணர். நமக்கு அனுபவம் உண்டு: ஒன்றிலிருந்து ஒன்றைக் கழித்தால் பூஜ்ஜியத்திற்கு சமமாகும். ஆனால் அங்கே, ஆன்மீக உலகில்..., அது பூரணமானது என்று அழைக்கப்படுகிறது. ஒன்றை கழித்து, பத்து லட்சம் முறை ஒன்றை கழித்து, இருப்பினும், அதன் மூலமானது ஒன்று ஒன்றே. அதுதான் கிருஷ்ணர். அத்வைதம் அச்சுதமனாதிம் அனந்த-ரூபம் (பிரம்ம சம்ஹிதா 5.33). ஆகையால் வெறுமனே வேத இலக்கியம் படித்துக் கொண்டு, அந்த கிருஷ்ணரை உங்களால் வேதஸு புரிந்துக் கொள்ள முடியாது. ஆயினும் வேதஸ் என்றால், வேதாந்த என்றால் கிருஷ்ணரை புரிந்துக் கொள்ளுதல். வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்ய: (பகவத் கீதை 15.15). ஆனால் துரதிஷ்டவசமாக, நாம் கிருஷ்ணர் அல்லது அவருடைய பக்தரின் பாதுகாப்பை சார்ந்து இருப்பதில்லை, ஏனென்றால், வேதத்தின் நோக்கம் என்னவென்று நம்மால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அது ஏழாம் அத்தியாயத்தில் விவரிக்கப்படும். மய்யாஸக்தமனா: பார்த்த யோகம் யுஞ்ஜன்மதாஸ்ரய: அஸம்சயம் ஸமக்ரம் மாம் யதா ஞாஸ்யஸி தச்ருணு (பகவத் கீதை 7.1). நீங்கள் கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் அஸம்சயம், சந்தேகம் ஏதுமின்றி, மேலும் ஸமக்ரம், முழுமையாக, பிறகு நீங்கள் இந்த யோக முறையை பயிற்சி செய்ய வேண்டும். அது என்ன யோக? மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு (பகவத் கீதை 18.65). மதாஸ்ரய: யோகம் யுஞ்... யோகம் யுஞ்ஜன், மதாஸ்ரய: மதாஸ்ரய:, இந்த சொல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மத் என்றால் " யாதேணுமொன்றை நீங்கள் நேரடியாக எடுங்கள்....." - அது ஒன்றும் சுலபமான காரியமல்ல - ".... என் பாதுகாப்பில், அல்லது என்னிடம் தஞ்சம் அடைந்த ஒருவரிடம், நீங்கள் அவருடைய பாதுகாப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்." எவ்வாறு என்றால் அங்கே ஒரு மின்சார உற்பத்தி நிலையம் இருக்கிறது, மேலும் அங்கு ஒரு மின்சார இணைப்புச் சாதனம் உள்ளது. அந்த மின்சார இணைப்புச் சாதனம் மின்சார நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் உங்கள், கம்பியை இணைப்புச் சாதனத்தினுள் தள்ளினால், உங்களுக்கும் மின்சக்தி கிடைக்கும். அதேபோல், இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் கூறியிருப்பது போல், ஏவம் பரம்பரா-ப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது: (பகவத் கீதை 4.2). நீங்கள் பரம்பரா முறையின் பாதுகாப்பை ஏற்றுக்கொண்டால், அதே உதாரணம். நீங்கள் அந்த மின்சார நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்சார இணைப்புச் சாதனத்தின் பாதுகாப்பை எடுத்துக் கொண்டால், உங்களுக்கு உடனடியாக மின்சக்தி கிடைக்கும். அதேபோல், பரம்பரா முறையிலிருந்து வந்த ஒருவரின் பாதுகாப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டால்.., அங்கே பரம்பரா முறை இருக்கிறது. கிருஷ்ணர், அவர் பகவான் ப்ரமாவிற்கு உபதேசித்தார். பகவான் ப்ரமா நாரதருக்கு உபதேசித்தார். நாரதர் வியாசருக்கு உபதேசித்தார். வியாசர் தேவ மத்வாச்சாரியருக்கு உபதேசித்தார். மத்வாச்சாரியர் பல வழிகளிலும் உபதேசித்தார். பிறகு மாதவேந்ரபுரி. மாதவேந்ரபுரி, ஈஸ்வரபுரி. ஈஸ்வரபுரியிடமிருந்து, பகவான் சைதன்ய. இவ்வாறாக, அங்கே பரம்பரா முறை இருக்கிறது. அங்கே நான்கு வகை வைஷ்ணவ சம்ப்ரதாய உள்ளன. ருத்ர-சம்ப்ரதாய, ப்ரம-சம்ப்ரதாய, குமார-சம்ப்ரதாயவும் லக்ஷ்மி-சம்ப்ரதாய, ஸ்ரீ-சம்ப்ரதாய. ஆகையால் சம்ப்ரதாய-விஹீனாயே மந்தராஸ்தே நிஷ்வலாமதா:. கிருஷ்ணரைப் பற்றிய அறிவுரைகளை சம்ப்ரதாயாவிடமிருந்து நீங்கள் பெறவில்லை என்றால், பிறகு நிஷ்வலாமதா:, பிறகு நீங்கள் எதைக் கற்றிருந்தாலும், அது பயனற்றதே. அது பயனற்றதே. அதுதான் கடுங்குறைபாடு. ஆகையால் பல மக்கள் பகவத்-கீதையை கற்றுக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு கிருஷ்ணர் யார் என்று புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் ஏவம் பரம்பரா-ப்ராப்த (பகவத் கீதை 4.2) வழி அதனை பெற்றுக் கொள்ளவில்லை. அந்த பரம்பரா, நீங்கள் பரம்பரா வழியில் போகவில்லை என்றால்..., அதே உதாரணம். மின்சார நிலையத்துடன் இணைக்கப்பட்ட மின்சார இணைப்புச் சாதனத்தில் இருந்து நீங்கள் மின்சாரம் எடுக்கவில்லை என்றால், உங்களுடைய கம்பிக்கும் குமிழிக்கும் என்ன பிரயோகம்? அதற்கு பிரயோகமில்லை. ஆகையினால் கிருஷ்ணர் எவ்வாறு விஸ்தரிக்கிறார், அது வேதஸு துர்லப. உங்களுக்கு வெறுமனே கல்வி கற்ற அறிவு மட்டும் இருந்தால், பிறகு அது சத்தியமில்லை. வேதஸு துர்லபம் அதுர்லபம் ஆத்ம-பக்தெள (பிரம்ம சம்ஹிதா 5.33). இதுதான் ப்ரம-சம்ஹிதாவின் விவர அறிக்கை.