TA/Prabhupada 0145 - நாம் கண்டிப்பாக சில வகையான தபஸ்ய ஏற்றுக் கொள்ள வேண்டும்



Lecture on SB 3.12.19 -- Dallas, March 3, 1975

சுதந்திரம் தன்னியக்கமாக வராது. எவ்வாறு என்றால் நீங்கள் நோய்வாய்பட்டு இருப்பது போல். நீங்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறீகள், அல்லது வேறு ஏதோ நோயால் வேதனை தரும் நிலையில் இருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் சில தவம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எவ்வாறு என்றால் உங்கள் உடம்பில் இருக்கும் சில கட்டிகளால் நீங்கள் வேதனைபடுகிறிர்கள். அது மிகவும் வலியாக இருக்கிறது. பிறகு அதை குணப்படுத்த வேண்டுமானால், நீங்கள் அறுவை சிகிச்சைக்கு போக வேண்டியுள்ளது. ஆகையினால் தபஸா. அதுதான் தபஸா. தப என்றால் வலி கொண்ட நிலை, தப. சும்மா வெப்பநிலையை போல். நீங்கள் அதிக வெப்ப நிலையில் வைத்தால்வைக்கப்பட்டால், 110 வெப்ப, அளவு, அது உங்களுக்கு பொறுத்து கொள்ள முடியாமல் போகும். அது மிகவும் வேதனையாக இருக்கும். இந்தியர்களாகிய எங்களுக்கு கூட - நாங்கள் இந்தியாவில் பிறந்தோம், அதி உஷ்ணமுள்ள பருவநிலை - இருப்பினும், வெப்பநிலை நூறை தாண்டும் போது, பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மேலும் உங்களைப் பற்றி என்ன சொல்வது? நீங்கள் வேறுபட்ட வெப்பநிலையில் பிறந்தவர்கள். அதேபோல், எங்களால் தாழ்ந்த குளிர் நிலையை பொறுத்துக் கொள்ள முடியாது. அது ஐம்பது வெப்பநிலைக்கு கீழ் இருந்தால், அது எங்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. ஆகையால் அங்கே வேறுபட்ட பருவநிலை, வேறுபட்ட வெப்பநிலை உள்ளது. மேலும் கனடாவில் பூச்சியம் வெப்பநிலைக்கு கீழ் நாற்பது வெப்ப அளவையும் அவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள். ஆகையால் இது வேறுபட்ட நிலையில் உள்ள வாழ்க்கையை பற்றிய கேள்வியாகும். ஆனால் நாம் நிபந்தனைக்குட்பட்டவர்கள்: அதிக வெப்பநிலை, தாழ்ந்த வெப்பநிலை, கடினமான குளிர். ஆனால் நாம் எவ்வகையான நிபந்தனையான வாழ்க்கைக்கும் பயிற்சி மேற்கொள்ளலாம். அந்த தகுதி நம்மிடமுள்ளது. வங்காளத்தில் ஒரு பழமொழி உள்ளது, ஸரீரே ந மஹாஷயய ஸஹபே தயஸய, என்றால் "இந்த உடம்பு ஒரு," என்றால் "அதனால் எந்த நிலையையும் தாங்கிக் கொள்ள முடியும், மேலும் நீங்கள் அதில் பயிற்சி செய்தால்." அதாவது நீங்கள் ஒரு நிலையில் இருக்கும் போது, அதிலிருந்து மாற்றப்பட்டால், உங்களால் தாங்கிக் கொண்டு வாழ முடியாத அளவிற்கு ஆகும் என்பதல்ல. இல்லை நீங்கள் பயிற்சி செய்தால், எவ்வாறு என்றால் இக்காலத்தில் எவரும் போவதில்லை. முற்காலத்தில் அவர்கள் இமய மலைக்குச் சென்று கொண்டிருந்தார்கள், மேலும் அங்கு மிகவும் குளிராக இருந்தது. மேலும் தபஸ்ய..., அங்கே பயிற்சி முறை இருந்தது: தகிக்கும் வெய்யிலில், முனிவர்கள் அல்லது ரிஷிகள், தங்களைச் சுற்றி தீ மூட்டிக் கொண்டு இருப்பார்கள். ஏற்கனவே அங்கே தகிக்கும் வெய்யில், இருப்பினும் அவர்கள் தங்களைச் சுற்றி தீ மூட்டிக் கொண்டு, தியானத்தில் இருப்பார்கள். இதுதான் தபஸ்ய. இதுதான் தபஸ்யாவின் வகைகள். அங்கே தகிக்கும் வெய்யில் இருப்பினும் அவர்கள் அதற்கு ஏற்பாடு செய்வார்கள். அங்கு கிள்ளுகின்ற போன்று, நடுக்கம் மிக்க குளிர், நூறு வெப்ப அளவைவிட குறைவு, அத்துடன் அவர்கள் நீருக்கடியில் சென்று உடம்பை இதுவரை காட்டி தியானம் செய்வார்கள். இதுதான் தபஸ்யாவின் வகைகள். தபஸ்ய. ஆகையால் பகவானை உணர்வதற்காக முற்காலத்தில் மக்கள் இவ்வகையான கடும் தவத்தை மேற்க்கொள்வார்கள், மேலும் தற்சமயம் நாம் நிலைத்தவறிவிட்டோம், நம்மால் இந்த நான்கு ஒழுக்க நெறிகளை சகித்துக் கொள்ள முடியவில்லை? அது அவ்வளவு கஷ்டமா? நாம் சில தபஸ்யாவை மனத்தில் பதிய திணிக்கிறோம், அதாவது "இந்த காரியங்களில் ஈடுபடாதீர்கள். முறைக்கேடான உடலுறவு கூடாது, மது அருந்தக் கூடாது, மாமிசம் உண்ணக் கூடாது, சூதாடக் கூடாது." கிருஷ்ணர் உணர்வில் முன்னேறுவதற்கான தபஸ்யாவின் வகைகள் இதுதான். ஆக இது மிக கடினமாக இருக்கிறதா? இது கடினமே அல்ல. கிள்ளுகின்ற கடுங்குளிரில் கழுத்தளவு நீருக்குள் சென்று, ஒருவரால் பயிற்சி செய்ய முடியுமானால், முறைக்கேடான உடலுறவு, மாமிசம் உண்ணுவது, மது அருந்துவது இவற்றையெல்லாம் விட்டுவிடுவது அதைவிடக் கடினமா? "உடலுறவு கூடாது." என்று நாங்கள் அறிவுரை கூறவில்லை, முறைக்கேடான உடலுறவு கூடாது. ஆகையால் இதில் என்ன கஷ்டம்? ஆனால் வரலாற்றுக் காலம் இழிவடைந்துவிட்டது, அதாவது தொடக்க நிலை தபஸ்ய கூட நம்மால் செயல்படுத்த முடியவில்லை. அதுதான் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் உங்களுக்கு பகவான் உணர்வு வேண்டுமானால், இங்கு கூறியிருப்பது போல், தபஸைவ, தபஸ்யாவின் மூலமும் தவத்தின் மூலமும் மட்டுமே, ஒருவரால் உணர முடியும். இல்லையெனில் முடியாது. இல்லையென்றால் அது சாத்தியமில்லை. ஆகையினால் இந்த வார்த்தை பயன் படுத்தப்படுகிறது, தபஸைவ. தபஸா ஏவ: "தபஸ்யாவால் மட்டுமே." வேறு எந்த உபாயமும் இல்லை. தபஸா ஏவ பரம். பரம் என்றால் நித்தியமானவர். நீங்கள் நித்தியமான, பூரணமானவரை, உணர வேண்டுமானால், பிறகு நீங்கள் சில வகையான தபஸ்யாவிற்கு சம்மதிக்க வேண்டும். இல்லையென்றால் அது சாத்தியமில்லை. சிறிய ஆரம்ப தபஸ்ய. எவ்வாறு என்றால் ஏகாதஸீ போல். இதுவும் தபஸ்யாவில் ஒரு வகையாகும். உண்மையிலேயே ஏகாதஸீ நாள் அன்று நாம் எந்த உணவும் உண்ணக் கூடாது, தண்ணீர் கூட குடிக்கக் கூடாது. ஆனால் நம் சமூகத்தில் நாம் அதை அத்தனை கடுமையாக செய்வதில்லை. நாம் கூறுகிறோம், "ஏகாதஸீ அன்று, தானியவகை உணவுகளை தவிர்க்கவும். கொஞ்சம் பழமும், பாலும் உண்ணுங்கள்." இதுதான் தபஸ்ய. ஆகையால் நாம் இந்த தபஸ்யாவை தவிர்க்க கூடாது. மிகவும் சுலபமாக செயல்படுத்தக் கூடிய இந்த தபஸ்யாவை கூட நாம் மேற்கொள்ள தயாராக இல்லையென்றால், பிறகு நாம் எவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளில் வீடுபேறு அடைய எதிர்ப்பார்க்க முடியும்? இல்லை, அது சத்தியமல்ல. ஆகையினால், இங்கு சொல்லப்படுகிறது, தபஸைவ, தபஸா ஏவ. ஏவ என்றால் கண்டிப்பாக. நீங்கள் ஏற்க வேண்டும். இப்போது, இந்த தபஸ்ய, தவம், இவற்றை செயல்படுத்துவதால், நீங்கள் தோல்வி அடைகிறிர்களா? இல்லை நீங்கள் தோல்வி அடையவில்லை. இப்போது, வெளியிலிருந்து வரும் எவரும், அவர்கள் நம் கழகத்தில், நம் அங்கத்தினர்கள், ஆடவர்களையும், பெண்களையும் பார்ப்பார்கள். அவர்கள் கூறுகிறார்கள், "பிரகாசமான முகம்." அவர்கள் கூறுகிறார்களா இல்லையா? அவர்கள் வித்தியாசத்தை பார்க்கிறார்கள். ஒரு சமயக்குரு சாதாரண உடையில்.., நான் லாஸ்ஏஞ்சல்ஸிலிருந்து, ஹவாய்க்குப் போய் கொண்டிருந்தேன். ஒரு சமயக்குரு, விமானத்தில் என்னிடம் வந்தார். அவர் என் அனுமதியை கேட்டார், "நான் உங்களுடன் பேசலாமா?" "தாராளமாக, ஏன் கூடாது?" அவருடைய முதல் கேள்வி என்னவென்றால் "நான் பார்க்கிறேன், உங்கள் சீடர்களுக்கு பிரகாசமான முகம் இருக்கிறது. இது எவ்வாறு ஏற்பட்டது?" அவர்கள் விசுவாசமானவர்கள். ஆகையால் அங்கே இழப்பு ஏது? துன்பப்படுவதால், இந்த காரியங்களை, பாவச் செயல்களை நிராகரிப்பதால் நாங்கள் எதையும் இழக்கவில்லை. எங்களால் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ முடியும். நாங்கள் தரையில் உட்காருவோம், நாங்கள் தரையில் படுத்துக் கொள்வோம். எங்களுக்கு அதிகமான மேஜை நாற்காலிகள் அல்லது பெரிய அளவில் வசீகரமான ஆடைகள் தேவையில்லை. ஆகையால் தபஸ்ய தேவை. ஆன்மீக வாழ்க்கையில் நாம் முன்னேற வேண்டும் என்றால், நாம் கண்டிப்பாக சில வகையான தபஸ்ய ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த கலி-யுகத்தில் குளிரில் இருப்பது போன்ற கடுமையான தபஸ்யாவை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது, நாம் நீருக்குள், அடியில், சமயத்தில் மூழ்கி அல்லது சமயத்தில் இதுவரை, பிறகு தியானம் செய்வோம் அல்லது ஹரே கிருஷ்ண ஜபிப்போம். அது சாத்தியமல்ல. குறைவானது. ஆகையால் அங்கே தபஸ்ய இருக்க வேண்டும். ஆகையால் நாம் இந்த கவிதை மூலம் நன்றாக கவனிக்க வேண்டும், அதாவது நாம் பகவானை உணர்வதில் உக்கிரமாக இருந்தால். சில வகை தபஸ்ய கண்டிப்பாக செயல்பட வேண்டும். அதுதான் தேவைப்படுகிறது.