TA/Prabhupada 0147 - சாதாரண அரிசி ஒப்புயர்வற்ற அரிசி என்று கூறப்படாது



Lecture on BG 7.1 -- Hong Kong, January 25, 1975

பக்தர்களுக்கு தெரியும் கடவுள் இருக்கிறார், மேலும் அவர்தான் பகவான். கடவுள் பகவான் என்று அழைக்கப்படுகிறார். ஆகையினால் இங்கு சொல்லப்பட்டிருப்பினும், பகவத்-கீதை கிருஷ்ணரால் பேசப்பட்டது, அனைவருக்கும் தெரியும். ஆனால் பகவத்-கீதையில் சில இடங்களில் பகவான் உவாச என்று வர்ணிக்கப்படுகிறது. பகவானும் கிருஷ்ணரும் - ஒருவரே. க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் (ஸ்ரீமத் பாகவதம் 1.3.28). பகவான, பகவான் என்கிற வார்த்தைக்கு ஒரு வரைவிலக்கணம் உள்ளது. ஐஸ்வரியஸ்ய சமகரஸ்ய வீர்யஸ்ய யஷஸஹ ஸ்ரியஹ ஞான-வைராகியாயோஸ் சைவ ஷணணாம் பகைதீண்கனா (விஷ்ணு புராணம் 6.5.47).

பக, இந்த வார்த்தை பாகியவான் நமக்கு புரிந்தது, பாகிய. பாகிய, பாகியவான், இந்த வார்த்தை பக என்ற சொல்லில் இருந்து வந்தது. பக என்றால் செல்வம் நிறைவு பெற்றவர். செல்வ வளம் என்றால் பொருள் வளம் மிக்கவர். ஒருவர் எவ்வாறு பொருள் வளமிக்கவராக முடியும்? அவரிடம் பணம் இருந்தால், அவரிடம் அறிவு இருந்தால், அவரிடம் அழகிருந்தால், அவரிடம் கீர்த்தி இருந்தால், அவரிடம் அறிவு கூர்மை இருந்தால், அவர் துறவறம் ஏற்றிருந்தால் - இதன் அர்த்தம் தான் பகவான். ஆகையால் நாம் "பகவான்," என்று பேசும் போது, இந்த பகவான், அந்த பரமேஸ்வரர். ஈஸ்வர, பரமேஸ்வர, ஆத்மா, பரமாத்மா; ப்ரமன், பர-ப்ரமன், - அங்கு இரண்டு வார்த்தைகள் உள்ளன. ஒன்று சாதாரணமானது, மேலும் மற்றோன்று தான் பரமன், ஒப்புயர்வற்றவர். எவ்வாறு என்றால் நம் சமைக்கும் முறையில் நாம் பலவிதமான அரிசி சமைக்கலாம். அரிசி அங்கிறுக்கிறது. பலவிதமான பெயர்களும் அங்கிறுக்கிறது: அன்ன, பரமான்ன, புஷ்பான்ன, கிசோரன்ன, அது போன்று. ஆகையால் ஒப்புயர்வற்ற .அன்ன பரமான்னா என்று அழைக்கப்படுகிறது. பரம என்றால் ஒப்புயர்வற்றவர். அன்ன, அந்த அரிசி அங்கிறுக்கிறது, ஆனால் அது ஒப்புயர்வற்றதாகிவிட்டது. சாதாரண அரிசி ஒப்புயர்வற்ற அரிசி என்று கூறப்படாது. இதுவும் அரிசி தான். மேலும் நீங்கள் அரிசியை கிஷிர, என்றால் பால், மேலும் மற்ற கூட்டு பொருள்களுடன் சேர்த்து தயாரிக்கும் போது, அது பரமான்ன என்று அழைக்கப்படுகிறது. அதேபோல், உயிர்வாழிகளுக்கும் பகவானுக்கும் இருக்கும் அறிகுறிகள் - நடைமுறையில் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். பகவான்..., நமக்கு இந்த உடல் இருக்கிறது; பகவானுக்கும் இந்த உடல் இருக்கிறது. பகவானும் ஓர் உயிர்வாழி; நாமும் ஓர் உயிர்வாழி. பகவானுக்கு படைக்கும் சக்தி இருக்கிறது; நமக்கும் படைக்கும் சக்தி இருக்கிறது. ஆனால் இதன் வேற்றுமை என்னவென்றால் அவர் மிகவும் அபாரமானவர். எகோ யோ பஹுநாம் விடதாதி காமான். பகவான் இந்த முழு பிரபஞ்சத்தை படைக்கும் போது, அவருக்கு எவருடைய உதவியும் தேவைப்படவில்லை. அவர் வானத்தை உருவாக்கினார். வானத்திலிருந்து ஒலி ஏற்பட்டது; ஒலியிலிருந்து அங்கே காற்று இருக்கிறது; காற்றிலிருந்து அங்கே நெருப்பு இருக்கிறது; நெருப்பிலிருந்து அங்கே நீர் இருக்கிறது; மேலும் நீரிலிருந்து நிலம் இங்கிறுக்கிறது.