TA/Prabhupada 0153 - கற்றறிந்த படைப்பால், ஒருவரது அறிவுத்திறன் தேர்வு செய்யப்படுகிறது



Interview with Newsweek -- July 14, 1976, New York

பேட்டியாளர்: தாங்கள் குறிப்பிட்ட மூன்று செயல்கள் - உண்பது, தூங்குவது, உடலுறவு, இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்ந்து, எந்த விதிகள் அல்லது குறிப்பால் தாங்கள் மக்களுக்கு உணர்த்துவீர்கள் என்பதை, என்னிடம் குறிப்பிட்டு சொல்லி ஆன்மீக ஞான உபதேசம் அவர்கள் வாழ்க்கையில் நாடிச் செல்பவர்களுக்கு எந்த வழியில் துணை செய்வீர்கள்.

பிரபுபாதர்: ஆம், ஆம், அது எங்களுடைய புத்தகங்கள். இது எங்களுடைய புத்தகங்கள். புரிந்துக் கொள்வதற்கு எங்களிடம் போதுமான கருப்பொருள் இருக்கிறது. நீங்கள் ஒரு நிமிடத்தில் புரிந்துக் கொள்ள கூடிய விஷயம் அல்ல.

பேட்டியாளர்: தாங்கள் சிறிது நேரம்தான் தூங்குகிறிர்கள் என்று கேள்விபட்டேன். ஒரு இரவில் தாங்கள் முன்றிலிருந்து நான்கு மணி நேரம் தான் தூங்குகிறிர்கள். ஆன்மீகத்தில் மெய்பித்துக் காட்டுவதற்கு எந்த ஒரு மனிதனும் இதை உணருவார் என்று தாங்கள் நம்பிக்கை கொள்கிறீர்களா?

பிரபுபாதர்: ஆம், கோஸ்வாமீகளின் நடத்தையிலிருந்து நாங்கள் காண்கிறோம். அவர்களுக்கு நடைமுறையிலேயே எந்த பௌதிக தேவைகளும் இல்லை. இந்த உண்பது, தூங்குவது, உடலுறவு, மேலும் தற்காத்தல், இது போன்ற காரியங்கள் அவர்களுடைய நடைமுறையிலேயே இல்லை. அவர்கள் வெறுமனே கிருஷ்ணரின் வேலையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.

பேட்டியாளர்: எதில் ஈடுபடுத்திக் கொண்டனர்? ராமேஸ்வர: கிருஷ்ணரின் வேலையில் அல்லது இறைவன் சேவையில்.பாலி-மர்தனா: அவர் முந்திய ஆன்மீக குருக்களை முன் மாதிரியாக எடுத்துக் காட்டுகிறார்.

பேட்டியாளர்: நன்று, எனக்கு ஊக்கம் கொடுப்பது யாதெனில்..., முன்றிலிருந்து நான்கு மணி நேரம்வரை தூங்குவதுதான் போதுமான கால அளவு என்று அவர் கண்டு பிடித்துள்ளாரா?

பாலி-மர்தனா: வேறு விதமாக சொன்னால், ஏன்... அவர் கேட்கிறார் ஏன் முன்றிலிருந்து நான்கு மணி நேர அளவில் தாங்கள் தூங்குகிறீர்கள். தாங்கள் அந்த தகுதியை அடைந்துவிட்டீர்களா?

பிரபுபாதர்: அது செயற்கையானது அல்ல. ஆன்மீக செயல்களில் அதிகமாக ஈடுபாடு கொள்ளும் போது, பௌதிக செயல்களிலிருந்து அதிகமாக விடுபடுகிறோம். அதுதான் தேர்வு.

பேட்டியாளர்: அப்படியானால் தாங்கள் அதை வந்தடைந்து....,

பிரபுபாதர்: இல்லை, நான் என்னைப் பற்றி பேசவில்லை, ஆனால் அதுதான் தேர்வு.பக்தி: பரேஷானுபவோ விரக்திர் அன்யத்ர ஸயாத் (ஸ்ரீ.பா. 11.2.42)." நீங்கள் பக்தியில் முன்னேறினால், ஆன்மீக வாழ்வில், பிறகு பௌதிக வாழ்வில் நீங்கள் ஆர்வமின்றி போய்விடுவீர்கள்.

பேட்டியாளர்: உலகின் பலதரப்பட்ட மக்களிடையே அங்கே வேறுபாடுகள் உள்ளன என்று தாங்கள் நினைக்கிறீர்களா? வேறுவிதமாக கூறினால், இந்தியர்கள் ஐரொப்பியர்களுக்கு எதிரானவர்கள் என்று தாங்கள் நினைக்கிறீர்களா அதிகமான விருப்பம் அல்லது ஏறத்தாழ கிருஷ்ண உணர்வில் பற்றிக் கொள்கிறார்களா?

பிரபுபாதர்: இல்லை, எந்த அறிவுடைய மனிதனும் கிருஷ்ண உணர்வு மிக்கவராகலாம். அதை நான் ஏற்கனவே விவரித்துவிட்டேன், அதாவது ஒருவர் மிக அறிவுடையவராக இல்லாவிட்டால், அவரால் கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகையால் அது அனைவருக்கும் திறந்துள்ளது. ஆனால் அங்கே வேறுபட்ட, தரப்படுத்தப்பட்ட அறிவுடையவர்கள் இருக்கிறார்கள். ஐரோப்பா, அமெரிக்காவில், அவர்கள் அறிவாளிகள், ஆனால் அவர்களுடைய அறிவு பௌதிக நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்தியாவில் அவர்களுடைய அறிவு ஆன்மீக நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆகையினால் உங்களால் பல உயர்ந்த தரம் மிக்க ஆன்மீக வாழ்க்கை, புத்தகங்கள், இலக்கியங்கள் காண முடிகிறது. எவ்வாறு என்றால் வியாசதேவர் போல். வியாசதேவர் இல்லற வாழ்க்கையில் இருந்தார், ஆனால் அவர் காட்டில் வாழ்ந்து கொண்டிருந்தார், மேலும் அவருடைய இலக்கிய பங்களிப்பை பாருங்கள். யாராலும் கனவுகூட காண முடியாது. ஆகையால் கற்றறிந்த படைப்பால், ஒருவரது அறிவுத்திறன் தேர்வு செய்யப்படுகிறது. அனைத்து பெரிய, பௌதிக உலகின் பெரிய மனிதர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கூட, அவர்கள் அவர்களுடைய எழுத்துத் திறனால் அங்கீகரிக்கப்படுகிறார்கள், அவர்களுடைய பங்களிப்பால், பிரமாண்டமான உடலால் அல்ல.