TA/Prabhupada 0156 - நீங்கள் மறந்து போனவற்றை நான் கற்பிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்



Arrival Address -- London, September 11, 1969

செய்தியாளர்: நீங்கள் எதை ஆராய்ந்து மேலும் கற்பிக்கிறிர்கள், ஐயா? பிரபுபாதர்: நீங்கள் மறந்து போனவற்றை நான் கற்பிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். பக்தர்கள்: ஹரி போல்! ஹரே கிருஷ்ண! (சிரிப்போலி). செய்தியாளர்: எது எப்படி? பிரபுபாதர்: அவர்தான் பகவான். உங்களில் சிலபேர் பகவான் இல்லை என்கிறீர்கள், சில பேர் பகவான் இறந்துவிட்டார் என்று கூறுகிறீர்கள், மேலும் சிலர் பகவான் தனித்தன்மை வாய்ந்தவர் அல்லது வெறுமையானவர் என்று கூறுகிறீர்கள். இவை அனைத்தும் முட்டாள்தனம். இந்த முட்டாள்களுக்கு, அதாவது பகவான் இருக்கிறார் என்று நான் கற்பிக்க வேண்டும். அதுதான் என்னுடைய குறிக்கொள். எந்த முட்டாளும் என்னிடம் வரலாம், பகவான் அங்கே இருக்கிறார் என்று நான் நிரூபிப்பேன். அதுதான் என்னுடைய கிருஷ்ண பக்தி இயக்கம். தெய்வ நம்பிக்கையற்ற மக்களுக்கு இது ஒரு சவால். கடவுள் இருக்கிறார். நாம் நேருக்கு நேராக உட்கார்ந்து இருப்பதுபோல், நீங்கள் பகவானை நேருக்கு நேர் பார்க்கலாம். நீங்கள் விசுவாசமாகவும் மேலும் நீங்கள் உள்ளார்வமிக்கவராக இருந்தால், அது சாத்தியமே. துரதிஷ்டவசமாக, நாம் பகவானை மறக்க முயற்சி செய்கிறோம்; ஆகையினால் நாம் வாழ்க்கையின் பல துன்பங்களை தழுவகிறோம். ஆகையால் நான் வெறுமனே சமயச் சொற்பொழிவாற்றுகிறேன், நீங்கள் கிருஷ்ணர் உணர்வு பெற்று சந்தோஷமடையுங்கள். மாயாவின் முட்டாளானா அலைகளாலும், அல்லது மாயையாலும் தடுமாற்றம் அடையாதீர்கள். அதுதான் என்னுடைய வேண்டுகோள். பக்தர்கள்: ஹரி போல்!