TA/Prabhupada 0184 - உங்கள் பற்றை பௌதிக ஒலியின் மீதிருந்து ஆன்மீக ஒலியின் மீது மாற்றுங்கள்



Lecture on SB 3.26.47 -- Bombay, January 22, 1975

ஆக இந்த ஒலி என்பது மிகவும் முக்கியமான விஷயம். ஒலி என்பதே இந்த பௌதிக உலகின் மீது நம் பற்றுக்கு காரணம் ஆகும். பெரிய, பெரிய நகரங்களில் சினிமா கலைஞர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒலியால் மக்களுக்கு அதன்மேல் ஒரு பற்று ஏற்படுகிறது. அது மட்டும் அல்ல, பல விஷயங்களை நாம் வானொலி ஒலிபரப்பின் மூலம் கேட்கிறோம். ஒலியின் மீது பற்று. அது பௌதிகவாத ஒலி என்பதால், நாம் பௌதிகத்தில் மேன்மேலும் சிக்கிக் கொள்கிறோம். ஏதோ ஒரு நடிகை, ஏதோ ஒரு சினிமா கலைஞர், பாடுகிறார், மற்றும் அவர் பாடுவதை கேட்பதற்கு மக்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள். ஒரு பாடலை பாடுவதற்கு அந்த கலைஞருக்கு பதினைந்து ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுகிறது. பம்பாயில் அப்படி பலர் உள்ளனர். ஆக, இந்த பௌதிக ஒலி அதிர்வுகளுக்கு எந்த அளவுக்கு நாம் ஈர்க்கப்படுகிறோம் என்பதை பாருங்கள். இதைப்போலவே தான், அந்தப் பற்றை, நாம் ஹரே கிருஷ்ண மஹா-மந்திரத்தைப் பற்றி கேட்பதில் செலுத்தினால், நமக்கு விமோசனம் கிடைத்துவிடும், அதே ஒலி தான். ஒன்று பௌதிகத்தைச் சார்ந்தது; மற்றொன்று ஆன்மீகத்தைச் சார்ந்தது. எனவே நீங்கள் இந்த ஆன்மீக ஒலியின் அதிர்வின் மீது பற்று கொள்ள பயிற்சி செய்ய வேண்டும். பிறகு உங்கள் வாழ்க்கையின் இலக்கை அடைவீர்கள். சேதோ-தர்பண-மார்ஜனம் பவ-மஹா-தாவாக்னி-நிர்வாபணம் ஷ்ரேயஹ-கைரவ-சந்த்ரிகா-விதரணம் வித்யா-வது-ஜீவனம் ஆநன்தாம்புதி-வர்தனம் ப்ரதி-பதம் பூர்ணாம்ருதஸ்வாதனம்... பரம் விஜயதே ஸ்ரீ-க்ருஷ்ண-ஸங்கீர்த்தனம் (சைதன்ய சரிதாம்ருதம் அந்த்ய லீலை 20.12) ஆக இந்தக் கிருஷ்ண பக்தி இயக்கம் அதற்காகத் தான், "உங்களுக்கு ஏற்கனவே ஒலியின் மீது பற்று இருக்கிறது. இப்போது இந்தப் பற்றை ஆன்மீக ஒலியை நோக்கி திருப்பிவிடுங்கள். பிறகு உங்கள் வாழ்க்கை அதன் இலக்கை அடையும். இது தான், ஹரே கிருஷ்ண இயக்கம், மக்களுக்கு பௌதிக ஒலியின் மீதுள்ள பற்றை ஆன்மீக ஒலியின் மீது வைக்க கற்றுத் தருகிறது. எனவே நரோத்தமதாஸ் தாகூர் பாடுகிறார், "கோலோகேர ப்ரேம-தன ஹரி-நாம-ஸங்கீர்த்லன, ரதி நா ஜன்மிலோ மொரே தாய். இந்த ஒலி ஆன்மீக உலகிலிருந்து வருகிறது, கோலோகேர ப்ரேம-தன, இதை ஜபிப்பதன் மூலம், இந்த ஒலியைக் கேட்பதன் மூலம், செயலற்று கிடக்கும் இறைவனின் மீதான அன்பை நம்மால் வளர்த்துக் கொள்ள முடியும். இது தான் தேவை. ப்ரேம பும்-அர்த்தோ மஹான். இந்த ஜட உலகில் நாம் தர்மார்த்த-காம-மோக்ஷ (ஸ்ரீமத் பாகவதம் 4.8.41) இவையை மிகவும் முக்கியமானதாக கருதுகிறோம். புருஷார்த்த. தர்ம, அதாவது அறநெறிகளை பின்பற்றுவது, மேலும் தர்மத்தை கடைப்பிடித்து எதற்காக என்றால், பொருளாதார வளர்ச்சியை அடைந்து சுபிட்சமாக இருப்பதற்காக. தனம் தேஹி, ரூபம் தேஹி, யஷோ தேஹி, தேஹி தேஹி. எல்லாம் காமம். எதற்காக தேஹி தேஹி? காம, அதாவது நம் ஆசைகளை, காம வேட்கையை திருப்தி படுத்துவதற்காக. தர்மார்த்த-தாம, மேலும் நாம் ஏமாற்றத்தை சந்தித்தவுடன், அதாவது ஆசைகளை நிறைவேற்ற முடியாத போனவுடன் நாம் மோட்சத்தை விரும்புகிறோம், இறைவனில் இணைந்து ஒன்றாவதற்காக. பௌதிக விவகாரங்கள் இந்த வகையானவை. ஆனால் ஆன்மீக செயல்கள் ப்ரேம பும்-அர்த்தோ மஹான். இறைவனின் அன்பை அடைவது, அது தான் மிகச் சிறந்த சாதனை. ப்ரேம பும்-அர்த்தோ மஹான். ஆக வாழ்க்கையின் இந்த இலக்கை, ப்ரேம பும்-அர்த்தோ மஹான், என்பதை அடைவது, இந்த காலத்தில், குறிப்பாக கலியுகத்தில், நாம் வேறு எந்த விஷயமும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதால், அது மிக மிக கடினமான காரியம் . இந்த காலம் தடைகள் நிறைந்தது. எனவே கலௌ… இது தான் செயல்முறை, ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம்: (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 17.21) "ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபம் செய்யவும்," கேவலம், "மட்டுமே." கலௌ நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ கதிர் அன்யதா. கலியுகத்தில், இந்த பௌதிகத்தில் இருக்கும் பற்றிலிருந்து தம்மை எப்படி விடுவிப்பது என்பதே பிரதான காரியம் ஆகும். அதனால்... பூத்வா பூத்வா ப்ரளீயதே (பகவத் கீதை 8.19). மக்களுக்கு உண்மையில் தம் துயரம் என்னவென்பதே புரிவதில்லை. முழுமுதற் கடவுளான கிருஷ்ணரே நேரடியாக கூறுகிறார், "இவை தான் உனது துயரங்கள்." அவை என்ன? ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி: (பகவத் கீதை 13.9) "மறுபடியும் மறுபடியும் நிகழும் பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சி. இதுதான் உன் வாழ்வின் உண்மையான துயரம்." என்ன, இந்தத் துயரம், அந்தத் கஷ்டம் என்று யோசிக்கிறாய்? அவை எல்லாம் தற்காலிகமானவை. அவை அனைத்தும் பௌதிக விதிகளின் அடிப்படையில் நிகழ்கின்றன. உங்களால் அதிலிருந்து மீள முடியாது. ப்ரக்ருதேஹே க்ரியமாணானி குணைஹி கர்மாணி ஸர்வஷஹ (பகவத் கீதை 3.27) நீ ஜட இயற்கையின் முக்குணங்களால் களங்கப்பட்டிருப்பதால், ப்ரக்ருதி ( ஜட இயற்கை) உன்னை பௌதிக செயல்களை செய்யுமாறு வற்புறுத்துகிறது. எனவேதான் நீ இந்த ப்ரக்ருதிக்கு, அதாவது பௌதிகத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியிருக்கிறது. இந்த பௌதிக இயல்பிற்கு நீ அடிமையாக இருக்கும் வரை, இந்த பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோயை ஏற்றே ஆக வேண்டும். இது தான் உனது உண்மையான துயரம்.