TA/Prabhupada 0190 - இந்த சமூகம் முழுவதும் இந்த புத்தகத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்



Lecture on SB 7.6.11-13 -- New Vrindaban, June 27, 1976

பக்தி-மார்க்கத்தின் இந்த கோட்பாடுகளை நாம் பின்பற்றினால் எவ்வாறு பற்றின்றி இருப்பதென்று நாம் தனியாக முயற்சி செய்ய வேண்டியதில்லை. பற்றின்மை தன்னியக்கமாக தொடரும். வாஸுதேவே பகவதி பக்தி-யோக: ப்ரயோஜித: ஜனயதி ஆசு வைராக்யம் (ஸ்ரீமத் பாகவதம் 1.2.7). வைராக்யம் என்றால் பற்றின்மை. பக்தி-யோக வைராக்ய என்றும் அறியப்படுகிறது. வைராக்ய. சார்வபௌம பாத்தாசாரிய வைராக்ய பற்றி பதங்கள் எழுதினார். வைராக்ய-விட்யா-நிஜ-பக்தி-யோக-ஷிக்ஷார்த்தம் யேக: புருஷா: புராண: ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய-ஸரீர-டஹரி க்ருபாம்புதிர் யஸ் தமஹம் ப்ரபத்யே (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 6.254). இங்கு இருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ண சைத்தன்ய மஹாபிரபு அவரே கிருஷ்ணரும் ஆவார். அவர் நமக்கு வைராக்ய விட்யா பற்றி கற்பிக்க வந்துள்ளார். அது கொஞ்சம் கஷ்டமானது. சாதாரணமான மனிதர்களுக்கு இந்த வைராக்ய விட்யாவை புரிந்துக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். இந்த உடம்பின் மேல் இருக்கும் இச்சையை எவ்வாறு அதிகப்படுத்துவது என்பதுதான் அவர்களுடைய வேலை, இந்த ஜட வாழ்க்கைக்கான பற்றின்மையை எவ்வாறு அதிகப்படுத்துவது என்பது கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம். ஆகையினால் இது வைராக்ய விட்யா என்று அழைக்கப்படுகிறது. வைராக்ய விட்யா மிகவும் சுலபமாக பெற்றுவிடலாம், அது சிபார்சு செய்யப்பட்டது போல, வாஸுதேவே பகவதி பக்தி-யோக: ப்ரயோஜித: ஜனயதி ஆசு வைராக்யம் (ஸ்ரீமத் பாகவதம் 1.2.7), கூடிய சீக்கிரம், கூடிய சீக்கிரம். ஜனயதி ஆசு வைராக்யம் ஞானம் ச. மனித வாழ்க்கைக்கு இரண்டு பொருள்கள் அவசியமானது. ஒரு பொருள் ஞானம், ஞானம்-விஞானம் ஆஸ்திக்யம்-ப்ரம-கர்ம ஸ்வ-பாவ-ஜம். இந்த ஞானம் என்றால், ஞானத்தின் ஆரம்பம் என்றால் "நான் இந்த உடல் அல்ல. நான் ஆன்மீக ஆத்மா." அதுதான் ஞான. ஒருவர் ஞானம் என்னும் தளத்தில் நிலை பெற்றவுடனேயே, அது சுலபமாகிவிடும். இந்த உடலின் பயனுக்காக மக்கள் எல்லாவற்றிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒருவர் புரிந்துக் கொண்டால், அவர் ஞானம் என்னும் தளத்திற்கு வருவார், பிறகு இயல்பாக அவர் பற்றற்ரவராகிவிடுவார், அதாவது "நான் இந்த உடல் அல்ல. இந்த உடலுக்காக நான் ஏன் இவ்வளவு கடினமாக உழைக்கிறேன்?" ஞானம் ச யத் அஹைதுகம் (ஸ்ரீமத் பாகவதம் 1.2.7). தண்னியக்கமாக..... இரண்டு காரியங்கள் தேவைப்படுகிறது. சைதன்ய மஹாபிரபு இருந்த பல இடங்களில், அவர் இதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார், மேலும் தன்னுடைய வாழ்க்கையின் மூலம் அவர் ஞானமும் வைராக்கியமும் கற்பிக்கிறார். ஒரு புறம் ஞானம், ரூபகொஸ்வாமிக்கும் சநாதன கொஸ்வாமிக்கும் அவர் கற்பிப்பதில், கற்பித்து, சார்வபௌம பாத்தாசாரிய, ப்ரகாஷாநந்த ஸரஸ்வதீ, ராமானந்த ராய ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். இந்த பொருள்கள் அனைத்தையும் எங்களுடைய பகவான் சைதன்யாவின் போதிணைகளில் நாங்கள் அளித்திருக்கிறோம். ஆகையால் அதுதான் ஞானம். மேலும் அவருடைய சொந்த வாழ்க்கையில் நடந்த உதாரணங்களால், சந்நியாசம் மேற்கொண்டு, அவர் வைராக்கிய கற்பிக்கிறார். ஞான மேலும் வைராக்கிய, இவை இரண்டும் அவசியமானது. ஆகையால் நாம் திடீர் என்று ஞானம், வைராக்கியம் என்னும் தளத்தில் நிலைப்பெற முடியாது, ஆனால் நாம் பயிற்சி செய்தால், அது சாத்தியமே. அது சாத்தியமல்ல என்பது இல்லை. அது பரிந்துரைக்கப்பட்டுள்ளது: வாஸுதேவே பகவதி பக்தி-யோக: ப்ரயோஜித: ஜனயதி ஆசு வைராக்யம் ஞானம் ச யத் அஹைதுகம் (ஸ்ரீமத் பாகவதம் 1.2.7). அதுதான் தேவைப்படுகிறது. ஆகையால் கிருஷ்ண பக்தி இயக்கம் ஞானமும் வைராக்கியமும் பெறுவதற்கானது. இந்த ஜட உலகில் நாம் மிகவும் அதிகமாக ஈர்க்கப்பட்டால்... மேலும் நாம் எவ்வாறு ஈர்க்கப்பட்டோம்? இதன் தெளிவான வர்ணனை பிரலாத் மஹராஜாவால் கொடுக்கப்பட்டுள்ளது. மனைவி, குழந்தைகள், வீடு, மிருகங்களும் சேவகர்களும், அறைகலன், உடைகள், இன்னும் மேலும் மற்ற பல பொருள்கள். மக்கள் இரவு பகலாக, இதற்காகவே மிகவும் கடினமாக உழைகிறார்கள். அழகான தனி வீடு இல்லையா, நல்ல மிருகங்கள், நல்ல இன்னும் பல பொருள்கள் நாம் பார்க்கிறோம்? எதற்காக? ஈடுபாட்டை இன்னும் அதிகரிக்க வேண்டும். நாம் பற்றை அதிகரித்தால், இந்த ஜட அடிமைபடுத்தலில் இருந்து விடுபட வழியே இல்லை. ஆகையால் நாம் இந்த ஈடுபாடற்ற நிலையை பயிற்சி செய்ய வேண்டும்.