TA/Prabhupada 0212 - அறிவியல் பூர்வமாக, மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளது



Garden Conversation -- June 10, 1976, Los Angeles

பிரபுபாதர்: பிறப்பு , இறப்பு , முதுமை மற்றும் நோய் என்ற சுழற்சி ஒரு பெரும் தொல்லை என்பதை அவர்களால் நவீன கல்வியின் மூலம் புரிந்துகொள்ள முடியவில்லை. அதை அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. பிறகு ஏன் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்? இதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இதை நிறுத்த வேறு ஒரு வழி இருக்கும்போது அதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்?. ஹம்? இப்படிப்பட்ட கல்வியின் பயன் தான் என்ன? சரி எது தவறு எது என்பதை பிரித்து பார்க்க அவர்களால் முடியவில்லை. யாருமே மரணத்தை விரும்புவதில்லை. ஆனால் மரணம் என்பது இருக்கிறது. யாருமே முதுமையை விரும்புவதில்லை. ஆனால் முதுமை என்பது உள்ளது. இந்த பெரிய பிரச்னைகளை ஒதுக்கிவிட்டு, அறிவியலில் முன்னேற்றம் அடைந்தேன் என மார் தட்டுகிறான். எப்படிப்பட்ட கல்விமுறை இது ?. சரி எது தவறு எது என்ற வித்தியாசத்தை தெரிந்துகொள்ளாமல், கல்வியின் பலன் தான் என்ன? கல்வி என்றால் ஒருவன் சரி எது, தவறு எது என்பதை பிரித்து பார்க்கக்கூடியவனாக இருக்கவேண்டும். ஆனால் அவர்களால் முடியாது, அவர்களுக்கு மரணம் நல்லதல்ல என்பதே தெரியாது. ஏன் மரணத்தை நிறுத்துவதைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை ? அறிவியலில் முன்னேற்றம் அடைந்ததாக பெருமை பீத்திக் கொள்கிறார்களே. எங்கே அந்த முன்னேற்றம்? எங்கே அறிவியல் முன்னேற்றம்? உங்களால் மரணத்தை நிறுத்த முடியாது. முதுமையை தவிர்க்க முடியாது. உங்களால் நவீன மருந்துகளை தர முடிகிறது, அப்போது நோயே இல்லாதபடி செய்யுங்கள் பார்க்கலாம். இந்த மருந்தை எடுத்துக்கொண்டால், நோய் என்பதே இருக்காது. அப்படி ஏதாவது இருக்கிறதா? இந்த விஞ்ஞானம் எங்கே ? நளினிகாந்தன்: அவர்கள் அந்த ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது என சொல்கிறார்கள். பிரபுபாதா: அது இன்னொரு முட்டாள்தனம். அது பொய். கோபவருந்தபாலன்: நாம் கிருஷ்ண பக்தி எப்படி படிப்படியாக அடையக்கூடிய விஷயம் என்கிறோமோ, அவர்களும் அறிவியல் முன்னேற்றம் என்பது படிப்படியாக அடையக்கூடிய விஷயம் என்று கூறுகிறார்கள். பிரபுபாதர் : படிப்படியாக மரணத்தை வெல்லமுடியும் என்று நினைக்கிறார்களா ? நாம் இறைவனிடம், கிருஷ்ணரிடம், அவரது திருநாட்டிற்கு செல்வோம் என்பதை நம்மால் உறுதியாக சொல்ல முடியும். ஆனால் அவர்களிடம் அந்த நம்பிக்கை எங்கே? மரணத்தை , முதுமையை, நோய்நொடிகளை, நிச்சயம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எங்கே? டாக்டர் வுல்ஃப: மரணத்திற்கு பின் வாழ்க்கை இருக்கிறது என்ற உண்மையை நிரூபிக்க முயற்ச்சி செய்கிறோம் என்று கூறுகிறார்கள். இதில் ஒரு புதிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. பிரபுபாதர்: ஆம் உண்மை தான். டாக்டர் வுல்ஃப: அறிவியல் மூலமாகவும் இதை நிரூபிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். பிரபுபாதர்: அவர்கள் செய்யட்டும். விஞ்ஞானப்பூர்வமாகவே மரணத்திற்குப்பிறகும் வாழ்க்கை உள்ளது. அதைத்தான் நாங்கள் பல முறை கூறுகிறோம். அதாவது குழந்தை பருவத்தில் இருந்த என் உடல் மறைந்துவிட்டது, காணாமல் போய்விட்டது. எனக்கு இப்பொழுது வேறொரு உடல் இருக்கிறது. அதுபோலவே இறப்புக்கு பின்னும் வாழ்க்கை தொடர்கிறது. இது தான் வாஸ்தவம். கிருஷ்ணர் கூறுகிறார், ததா தேஹாந்தர-ப்ராப்திஹி (பகவத் கீதை 2.13) அதுபோலவே, ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே (பகவத் கீதை 2.20) இது கடவுளின் அதிகாரப்பூர்வமான அறிக்கை. நடைமுறையிலும் நமக்கு ஒரு உடலுக்கு பின் மற்றொரு உடல் கிடைக்கிறது, மாறுகிறது ஆனால் நான் என்ற உணர்வு அப்படியே மாறாமல் தொடர்கிறது. இதில் என்ன ஆட்சேபனை ? எனவே மரணத்திற்கு பின்னும் வாழ்க்கை தொடர்கிறது. உடலின் அழிவை தான் நாம் மரணம் என்கிறோம். அழிவே இல்லாத அந்த வாழ்க்கையை உணர்ந்து நம்மால் வாழ முடிந்தால், அதையே நாடி நாம் செல்ல வேண்டும். அது தான் புத்திசாலித்தனம். இது பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. நீங்கள் வெறும் கிருஷ்ணரை புரிந்துகொண்டு அவரிடமே திரும்பிச் செல்லும் தகுதியைப் பெற்றால், பிறகு மரணம் என்பதே இருக்காது.