TA/Prabhupada 0222 - இந்த இயக்கத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதை நிறுத்தி விட வேண்டாம்

From Vanipedia
Jump to: navigation, search
Go-previous.png முந்தைய பக்கம் - வீடியோ 0221
அடுத்த பக்கம் - வீடியோ 0223 Go-next.png

இந்த இயக்கத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதை நிறுத்தி விட வேண்டாம்
- Prabhupāda 0222


His Divine Grace Srila Bhaktisiddhanta Sarasvati Gosvami Prabhupada's Disappearance Day, Lecture -- Los Angeles, December 9, 1968

ஆக இது ஒரு நல்ல இயக்கம் ஆகும். Ahaṁ tvaṁ sarva-pāpebhyo mokṣayiṣyāmi mā śucaḥ (BG 18.66). பகவத் கீதை சொல்கிறது, இறைவன் சொல்கிறார், மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு அவர்களின் பாவச் செயல்களே காரணம் என்று. அறியாமை. அறியாமையே பாவச் செயல்களுக்குக் காரணம். ஒருவனுக்கு தெரியாதவற்றைப் போல. என்னை போன்ற ஒரு வெளிநாட்டவர் அமெரிக்காவிற்கு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்குத் தெரியாது… ஏனென்றால் இந்தியாவில் ... உங்கள் நாட்டில், வலது பக்கத்திலிருந்து காரைச் செலுத்துவதைப் போல், இந்தியாவில், நான் லண்டனிலும் இதைப் பார்த்திருக்கிறேன், இடது புறத்திலிருந்து காரைச் செலுத்த வேண்டும். அவருக்கு அது தெரியாது என்று வைத்துக்கொள்வோம். எனவே அவர் இடது பக்கத்திலிருந்து காரை ஓட்டி விபத்திற்கு உள்ளாகி விடுகிறார், அவரைப் போலீஸ் காவலில் வைக்கிறது. ஐயா, இங்குக் காரை வலது புறமாகச் செலுத்த வேண்டும் என்று எனக்குத் தெரியாது” என்று அவர் சொல்வதால் அவரை மன்னித்துவிட முடியாது. சட்டம் அவரைத் தண்டிக்கும். எனவே அறியாமை தான் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளுக்கும் பாவச் செயல்களுக்கும் காரணம் ஆகும். மேலும் நீங்கள் சில பாவச் செயல்களை மேற்கொண்டு விட்டீர்களானால், அதன் விளைவை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே இந்த உலகமே அறியாமையின் பிடியில் உள்ளது. மேலும் அறியாமையின் காரணமாக, பல செயல்களையும் அவற்றின் எதிர்விளைவுகளையும், அவை நல்லதோ அல்லதோ, அவர் சிக்கலாக்கி விடுகிறார். இந்த பொருள் உலகில் நல்லது என்று எதுவுமில்லை; எல்லாமே மோசமானது தான். எனவே நாம் சில நல்லதையும், சில தீயதையும் உருவாக்கியுள்ளோம். இங்கே ... ஏனென்றால் பகவத் கீதையில் இந்த இடத்தை நாம் இவ்வாறு புரிந்து கொள்கிறோம் duḥkhālayam aśāśvatam (BG 8.15). இந்த இடம் துன்பத்திற்கானது. எனவே நீங்கள் எப்படி சொல்ல முடியும், துன்ப நிலையில் நீங்கள் எப்படி "இது நல்லது" , “இது தீயது” என்று சொல்ல முடியும், எல்லாமே தீயாவை தான். எனவே இது தெரியாதவர்கள்- பொருள் சார்ந்த, நிபந்தனைக்குட்பட்ட வாழ்வில் –எதையாவது உருவாக்கி விடுகிறார்கள், "இது நல்லது, இது தீயது," என்று. ஏனென்றால் எல்லாமே தீயவையே, எதுவுமே நல்லது அல்ல என்று அவர்களுக்குத் தெரியாது. ஒருவர் இந்தப் பௌதிக உலகில் மிகவும் அவநம்பிக்கையோடு இருக்க வேண்டும். அப்பொழுது தான் அவர் ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியும். Duḥkhālayam aśāśvatam (BG 8.15). இந்த இடம் துயரம் நிறைந்தது, மேலும் இதை நீங்கள் பகுத்தாய்வு செய்து பார்த்தால், வெறும் பரிதாபமான நிலையையேக் காண முடியும். எனவே மொத்தப் பிரச்சனையும், நாம் இந்த பொருள் சார்ந்த, நிபந்தனை நிறைந்த வாழ்வைக் கைவிட வேண்டும் என்பதே, மேலும் கிருஷ்ண பக்தியில் நம்மை நாமே ஆன்மீக தளத்தில் உயர்த்திக் கொண்டு, அதன் மூலம் தெய்வீகத்தின் தலையாயவரின் ராஜ்ஜியத்திற்கு உயர முயற்சிக்க வேண்டும், yad gatvā na nivartante tad dhāmaṁ paramaṁ mama (BG 15.6), அங்குச் சென்ற யாரும் மீண்டும் இந்தப் பரிதாபகரமான உலகிற்கு வருவதில்லை. அதுவே இறைவனின் உயரிய இருப்பிடம் ஆகும். ஆக பகவத் கீதையில் இதன் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தக் கிருஷ்ண பக்தி இயக்கம் அங்கீகரிக்கப்பட்டது, மிகவும் முக்கியமானது. இப்போது, இந்த இயக்கத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க சிறுவர் சிறுமியரான நீங்கள், தயவு செய்து இதை இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள்... அதுவே சைதன்ய பகவானின் மற்றும் என் குரு மகாராஜரின் நோக்கம், மேலும் நாங்கள் இந்த நோக்கத்தை சிஷ்ய பரம்பரையின் மூலம் நிறைவேற்ற விரும்புகிறோம். நீங்கள் எனக்கு உதவி செய்ய முன் வந்திருக்கிறீர்கள். நான் உங்களிடமிருந்து இதைக் கோருகிறேன். நான் இங்கிருந்து சென்று விடுவேன். ஆனால் நீங்கள் தொடர்ந்து வாழ்வீர்கள். இந்த இயக்கத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதை நிறுத்தி விட வேண்டாம், நீங்கள் சைதன்ய பகவான் மற்றும் தெய்வீக அருள் மிகுந்த பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாதா அவர்களால் ஆசீர்வதிக்கப் படுவீர்கள். மிக்க நன்றி.