TA/Prabhupada 0236 - ஒரு பிராமணன், ஒரு சந்நியாசி நன்கொடை வாங்கலாம், ஆனால் ஒரு க்ஷத்ரியன், வைசியன் கூடாது



Lecture on BG 2.4-5 -- London, August 5, 1973

எனவே சைதன்ய மஹாபிரபு, "விஷயீர அன்ன காயிலே மலீன ஹய மன," (சைதன்ய சரிதாம்ருதம் அந்திய லீலை 6.278) என்று கூறியுள்ளார். அவர்களிடமிருந்து அன்ன, அதாவது பண உதவி பெற்றதால் அப்பேர்ப்பட்ட மகான்களும் களங்கம் அடைகிறார்கள். பௌதீகத்தில் மூழ்கியிருக்கும் ஒருவரிடமிருந்து நான் என் பராமரிப்பை பெற்றுக்கொண்டால், அது என்னையும் பாதிக்கும். நானும் பௌதீகவாதி ஆகிவிடுவேன். நானும் பௌதீகவாதி ஆகிவிடுவேன். எனவே , சைதன்ய மஹாபிரபு எச்சரித்திருக்கிறார், "விஷயி, அதாவது அபக்தர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளாதே. அது உன் மனதை அசுத்தப்படுத்தும்." எனவே பிராம்மணனும், வைணவனும் நேரடியாக பணத்தை பெற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் பிக்ஷையாக ஏற்றுக்கொள்வார்கள். அதுதான் இங்கே பைக்ஷ்யம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஷ்ரேயோ போக்தும் பைக்ஷ்யம் அபீஹ லோகே (பகவத் கீதை 2.5). பௌதீகத்தில் ஆழ்ந்திருக்கும் ஒருவரிடமிருந்து பிட்சை கேட்பதும் சிலநேரங்களில் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சந்நியாசிகளுக்கும் பிராம்மணர்களுக்கும் பிட்சை அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அர்ஜுனர் சொல்கிறார், "கொல்வதற்கு பதிலாக, இப்பேர்பட்ட மதிப்பிற்குரிய குருமார்களை, மகான்களை, மஹானுபாவான்..." ஆக பைக்ஷ்யம். ஒரு க்ஷத்திரியன்... ஒரு பிராம்மணன், ஒரு சந்நியாசி பிட்சை எடுக்கலாம், ஆனால் ஒரு க்ஷத்திரியனுக்கோ, ஒரு வைசியனுக்கோ பிட்சை எடுக்க அனுமதி கிடையாது. அர்ஜுனர் ஒரு க்ஷத்திரியர்‌. எனவே அவர் கூறுகிறார், "அதைவிட நான் ஒரு பிராம்மணனின் வேலையை ஏற்று, என் குருமார்களை கொன்று இந்த ராஜ்ஜியத்தை அனுபவிப்பதற்கு பதிலாக, வீடு வீடாக சென்று பிட்சை எடுப்பதே சிறந்தது." அதுதான் அவர் முன்வைத்த கோரிக்கை. மொத்தத்தில் அர்ஜுனர் மாயையில் சிக்கிக்கொண்டார் - மாயை எப்படி என்றால் அவர் தன் கடமையை மறந்துவிட்டார். அவர் ஒரு க்ஷத்திரியர், போரிடுவது அவர் கடமை; எதிரி யாராக இருந்தாலும் சரி, மகனாகவே இருந்தாலும் சரி. ஒரு க்ஷத்திரியன், தன் மகனே விரோதியாக வந்தாலும், அவனை கொல்ல தயங்கமாட்டான். அதுபோலவே ஒரு மகனும், தன் தந்தையே விரோதியாக வந்து நின்றாலும், கொல்ல தயங்கமாட்டான். இதுதான் ஒரு க்ஷத்ரியனின் கடுமையான கடமை, எந்த தயவு தாட்சண்யமும் கிடையாது. போர் என்று வந்தவுடன் ஒரு க்ஷத்ரியனால் அப்படி உறவுமுறை எல்லாம் பார்க்க முடியாது. எனவே கிருஷ்ணர் கூறுகிறார், 'க்லைப்யம்' : " நீ கோழையாக இருக்காதே. ஏன் பயப்படுகிறாய்?" இவ்வாறு பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. பிறகு கிருஷ்ணர் அவருக்கு உண்மையான ஆன்மீக உபதேசத்தை வழங்குவார். இதுவரை இரு நண்பர்களுக்கிடையே சாதாரண உரையாடல் நடந்துகொண்டிருக்கிறது. சரி, அத்துடன் இன்றைக்கு முடிப்போம். நன்றி .