TA/Prabhupada 0242 - பண்டைய நாகரிகத்திற்கு நம்மை மறுபடியும் கொண்டு செல்வது மிகவும் கடினமாகும்



Lecture on BG 2.3 -- London, August 4, 1973

பிரபுபாதர் : நேற்று தான் நாம் படித்துக்கொண்டிருந்தோம், அதாவது வைவஸ்வத மனு, கர்தம முனிவரிடம் வந்தபோது, அவர் வரவேற்கிறார், "ஐயா, தாங்கள் நாட்டை வலம் வருவதற்கு காரணம்...," அதற்கு என்ன பெயர், மேற்பார்வையா? பக்தர்: கண்காணிப்பு : பிரபுபாதர் : ஆம் கண்காணிப்பு. "தாங்கள் நாட்டை சுற்றி வருகிறீர்கள் என்றால், வர்ணாஷ்ரம அமைப்பை கண்காணிப்பதற்காக... பிராம்மணர்கள் உண்மையிலேயே பிராம்மணனைப் போல் செயல்புரிகிறார்களா, க்ஷத்திரியர்கள் உண்மையிலேயே க்ஷத்திரியர்களின் கடமையை செய்கிறார்களா." அரசன் நாட்டை சுற்றி வருவது அதற்காகத்தான். அரசனின் நாட்டுப்பயணம் என்றால் நாட்டு மக்கள் செலவில் சும்மா எங்கேயாவது சுற்றுலா பயணம் செய்து திரும்பி வருவதல்ல. அப்படி கிடையாது. சிலசமயம் அரசர், மாறுவேடம் போட்டு, வர்ணாஷ்ரம-தர்மம் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா, யாராவது ஒழுக்கங்கெட்ட ஹிப்பிகளைப் போல் நேரத்தை வீனாக்குகிரார்களா என்பதை கண்காணிப்பார். இல்லை . ஒழுக்கக்கேடுக்கு அனுமதி கிடையாது. இப்போது, யாராவது வேலை இல்லாமல் இருக்கிறார்களா என்பதை மட்டும் உங்கள் அரசாங்கம் கண்காணிக்கிறது, ஆனால்... நடைமுறையில் கண்காணிக்கப்படாத நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் எல்லாத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் கடமை. 'வர்ணாஷ்ரமாசாரவ்ரத', எல்லோரும் தனது தர்மத்தை சரியாக கடைப்பிடிக்கிறார்களா? வெறும் வெளிப்பார்வைக்கு பிராம்மணன் ஆவது, க்ஷத்திரியன் ஆவது எல்லாம் அனுமதிக்கப்படாது. சரியாக கடைப்பிடித்தே ஆகவேண்டும். இது தான் அரசரின் கடமை, அதாவது அரசாங்கத்தின் கடமையாக இருந்தது. இப்பொழுது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. எதற்குமே நடைமுறையில் மதிப்பே இல்லாமல் போய்விட்டது. எனவே, சைதன்ய மஹாப்ரபு கூறியுள்ளார், கலௌ... ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம் கலௌ நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ கதிர் அன்யதா (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 17.21). நாகரீகத்தின் உண்மையான அமைப்புக்கு மக்களை திரும்பி கொண்டுச்செல்வது மிகவும் கஷ்டமான காரியம். ஆக, ஒரு வைஷ்ணவனுக்கு, நான் விளக்கியது போல், த்ரி-தஷ-பூர் ஆகாஷ-புஷ்பாயதே துரதாந்தேந்திரிய-கால-ஸர்ப-பதலீ. புலன்களை கட்டுப்படுத்துவது, அது 'துரதாந்த'. துரதாந்த என்றால் மிக மிக கஷ்டமான காரியம். புலன்களை கட்டுப்படுத்துவது மிக மிக கஷ்டமான காரியம். எனவே தான், யோக பயிற்சி, சாதாரண அறிவுக்கு அப்பாற்பட்ட யோக பயிற்சி - வெறும் புலன்களை கட்டுப்படுத்துவது எப்படி என்ற பயிற்சி. ஆனால் ஒரு பக்தனுக்கு... இந்த நாக்கையே எடுத்துக்கொள்ளுங்கள். அதை வெறும் ஹரே கிருஷ்ண மந்திர ஜெபத்திலும், கிருஷ்ண பிரசாதத்தை மட்டுமே உண்பதிலும் ஈடுபடுத்தினால், முழு பயிற்சியும் செய்ததுக்கு சமம், சிறந்த யோகி. மிகச்சிறந்த யோகி. ஆக ஒரு பக்தனுக்கு புலன்களால் தொல்லை இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு புலனையும் பகவானின் திருப்பணியில் ஈடுபடுத்துவது எப்படி என்பதை ஒரு பக்தன் அறிவான். ஹ்ருஷீகேன ஹ்ருஷீகேஷ-ஸேவனம் (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 19.170). அது தான் பக்தி. ஹ்ருஷீக என்றால் புலன்கள். புலன்கள் கிருஷ்ணரின் திருப்பணியில் மட்டுமே ஈடுபட்டிருந்தால், யோக பயிற்சி செய்ய தேவையே இல்லை. தானாகவே அவை கிருஷ்ணரின் திருப்பணியில் ஒருமுகப்படுத்தப்படுகின்றன. அவைகளுக்கு வேறு எந்த ஈடுபாடும் இருப்பதில்லை. அதுதான் மீயுயர்ந்த நிலை. எனவே கிருஷ்ணர் கூறுகிறார், யோகிநாம் அபி சர்வேஷாம் மத்-கதேனாந்தராத்மனஹ ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மதஹ (பகவத் கீதை 6.47) "எப்பொழுதும் என் நினைப்பில் இருப்பவனே சிறந்த யோகி ஆவான்." எனவேதான், இந்த ஹரே கிருஷ்ண மந்திரதம். இதை நாம் வெறும் உச்சரித்து, செவி கொடுத்தாலே போதும், சிறந்த யோகி ஆகிவிடலாம். இவைகள் தான் வழிமுறைகள். ஆக கிருஷ்ணர் அர்ஜுனரிடம் கேட்பது என்னவென்றால், "நீ எதற்காக இந்த மன தளர்ச்சிக்கு இடம் கொடுக்கிறாய்? நீ என் பாதுகாப்பில் இருக்கின்றாய். நீ போரிடவேண்டும் என்பது என் கட்டளை. நீ ஏன் மறுக்கிறாய்? இது தான் இதன் பொருள்விளக்கம். மிக்க நன்றி.